போலிகள்
ஒரு கணக்குக்கு விடை தெரியவில்லை என்றால் தெரியாத ஒன்றாய் நினைக்கவேண்டும். தெரிந்துகொள்ள முயலவேண்டும்.
குத்து மதிப்பாக ஒரு எண்ணை இதுதான் விடை என்று சொல்லக்கூடாது!
அதுபோல மூடநம்பிக்கை அடிப்படையிலான போலி ஆன்மிகவாதிகள் தங்களுக்குத் தெரியாதவற்றைத் தெரியாது என்று ஒத்துக்கொள்ள வேண்டும் . சரியாகக் கற்றுக்கொள்ள வேண்டும்.
எந்த ஆதாரமுமே இல்லாமல் குருட்டுத்தனமாகத் தாங்கள் சொல்வதை எல்லாம் மற்றவர் நம்பவேண்டும் என்று எதிர்பார்க்கக்கூடாது!
அதனால் உண்மையான ஆன்மிகம் இழிவுபடுத்தப் படுகிறது!
ஆனால் போலிகள்தான் இன்று ஆன்மிகவாதிகளாகச் சொல்லித் திரிகின்றன ,அதுதான் உண்மையான ஆன்மிகம் என்று நம்பப்படுகிறது!
இது உண்மையான ஆன்மிகத்துக்கு ஒரு அவமானம்!
---------------------------------------------------------------------------------------------------------
=======================================================================
------------------------------------------------------------------------------------------------------------
உடலும் உள்ளமும்
துவண்டு கிடக்கும் துணி அதிகமான ஈரத்தை உறுஞ்சும்
ஆனால் முறுக்கேற்றப்பட்ட துணி அதிக ஈரம் உறுஞ்சாது.
அதுபோல் பயிற்சியால், உழைப்பால் திடமாக இருக்கும் உடலில் தேவையற்ற கிருமிகள் நுழைந்து தங்க முடியாது.
ஆனால் தொளதொளப்பான உடம்பில் வேண்டாத அனைத்தும் குடியேறிவிடும்.
அதனால் உடலையும் உள்ளத்தையும் சரியாக வைப்போமே!

No comments:
Post a Comment