ss

Tuesday, June 5, 2012

எனது மொழி ( 35 )

அப்படி ஒரு காலம்

மனிதவாழ்வில் பல்வேறுவிதமான உறவுகள் மூலமாக பல்வேறு வடிவங்களில் ஒருவருக்கொருவர் அன்புசெலுத்தி வாழ்கிறோம். 

குறிப்பிட்ட ஒருவர் மரணம் அடையும்போது அவர்சம்பத்தப்பட்ட உறவுநிலை தடைப்பட்டு விடுவதால் சம்பத்தப்பட்ட அனைவருக்கும் பல்வேறு கோணங்களில் மனம் பாதிக்கப படுகிறது. 

வாழ்க்கையும் பாதிக்கப்படுகிறது. 

யார் இறந்தாலும் அந்த இடத்தை வேறொருவர் இட்டு நிரப்புவதும் அந்தத்தகுதி படைத்தோராய் இருப்பதும் அதை அனைவரும் ஏற்றுக் கொள்வதுமான பண்பாடு உருவாக வேண்டும். 

அத்தகைய ஓர் சமூக அமைப்பு அன்புமயமானதாக இருக்கும.; அதில் தாய் தந்தையற்ற பிள்ளைகளோ பிள்ளைகளின் உதவியற்ற பெற்றோரோ ஆதரிப்பார் இல்லாத அனாதைகளோ இருக்கமாட்டார்கள். 

சாகும் வரை ஆணோ பெண்ணோ துணையின்றித் தவிக்க வேணண்டிய அவசியமுமில்லை. 

ஒவ்வொருவரும் தனது உறவு மற்றவர் விரும்பும் படியாகவே இருக்கவேண்டும் என்பதற்காக உயர்ந்த ஒழுக்கத்துடன் வாழ முயற்சி செய்வார்கள். 

ஓட்டு மொத்தமான சமூகத்தரமும் மிக உயர்வாய் இருக்கும்.

அப்படி ஒரு காலம் வருமா? 

No comments:

Post a Comment