மனிதனும் இயக்கமும்
அண்டவெளி என்பது ஆதியும் அந்தமும் அற்றது. ஆதாவது தொடக்க காலம், முடிவுகாலம் என்ற இரண்டும் இல்லாதது.
அதன் பரிமாணமும் எல்லையற்றது. ஆதாவது எல்லையற்ற காலத்தையும் தூரத்தையும் கொண்டது.
அதில் நீக்கமற நிறைந்திருப்பது இயக்கமே!
ஓவ்வொரு இயக்கமும் வேறுவகையான இயக்கத்தின் ஒருபகுதியாகவும் தன்னிலும் சிறிய இயக்கங்களின் தொகுதியாகவும் விளங்குகிறது.
மனிதஇனம் அப்படியேதான்; கணக்கற்ற நுண்ணிய இயக்கங்களின் தொகுதியாகவும் மிகப்பெரும் இயக்கங்களுள் அடங்கிய சின்னஞ்சிறு பகுதியாகவும் விளங்குகிறது.
உயிரற்ற ஜடப்பொருட்களுக்கும் மனித இனம் உள்ளிட்ட உயிரினங்களுக்கும் இடையில் உள்ள வேறுபாடு என்பது இயக்கப் போக்குகளின் வேறுபட்ட அம்சங்களே!
No comments:
Post a Comment