அமைதி
அமைதியில் நிலைபெற்றிருப்பதைப் போன்ற உயர்ந்தநிலை வேறொன்றும் இல்லை.
அமைதி ஆற்றலைத் தரும். அமைதி அறிவைத் தரும். அமைதி பெரும் பலத்தைத் தரும். அமைதி நற் சிந்தனையைத் தரும். ஞானத்தையும் தரும்.
அமைதி சிறந்த செயல்பாட்டுக்கு அடிப்படையாக விளங்கும்.
அமைதி அன்பைப் பொழியும் அமைதி மற்றவர் மனதை ஆட்கொள்ளும்.
அமைதி பெரும் பெரும் தத்துவங்களின் பிறப்பிடமாய் விளங்கும்.
ஆரவாரத்தால் சாதிப்பதைப்போல் பலமடங்கு அதிகமாக அமைதியால் சாதிக்கமுடியும்.
மனம் அமைதியில் நிலைபெறும் போது அறிவுக்குப் புலனாகாதவை யெல்லாம் புலனாகும் சக்தி பெறும்.
இன்பமும் துன்பமும் தாற்காலிகமானது. அதில் ஒன்று இன்னொன்றாய் மாறக்கூடியது.
ஆனால் அமைதி நிலை என்பது இன்பதுன்பமற்ற மையநிலை.
அதுபோல் உயர்ந்த பேரின்பநிலை வேறில்லை!
-----------------------------------------------------------------------------------------------------------
========================================================================

சிந்தனை
சிந்தனைகள் செயலுக்குத் துணையாகவும் வழிகாட்டியாகவும் இருக்க வேண்டும்.
செயல்பாட்டைப் பலவீனப்படுத்தும் சிந்தனைகள் பயன்படாது.
அன்றாட வாழ்க்கைக் கடமைகளைச் செய்ய சதாகாலமும் துண்டிக்கொண்டே யிருக்கும் அதேநேரம் அறிவை மேம்படுத்தும் சிந்தனைகளும் இருக்க வேண்டும்.
அதுதான் நமது சிந்தனைத் தரத்தையும் வாழ்க்கைத் தரத்தையும் மேலும் மேலும் உயர்ந்த நிலைக்கு இட்டுச் செல்லும்.
அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்!

No comments:
Post a Comment