இரட்டை நாயனம்
=============
=============
நான் கல்யாண வீஷேசத்துக்குப் போனால் ஒன்றைமட்டும் நன்றாக ரசிப்பேன்.அது என்னே தெரியுமா?
நாதஸ்வரக் கச்சேரி! உடனே ஓடிட்டா எப்படி? கேளுங்க!
இரட்டை நாயனம் தான் பேசியிருப்பார்கள். இரண்டு பேர்தான் நாயனம் வாசிப்பார்கள்.
ஆனா உண்மையாக ஒருத்தர்தான் வாசித்துக்கொண்டு இருப்பார்.
ஆனால் அவர் நாயனத்தில் இருந்து வரும் நாதத்தைத் தனியாகக் கேட்டால் தெரியும் சங்கதி....வெறும் பீ பீ சப்தம் தான் அவ்வப்போது மெதுவாக வரும்.
ஆனால் அவர் தலையை ஆட்டுவதும் நாயனத்தை இப்படியும் அப்படியும் ஆட்டுவதும் இருக்கே உண்மையாக வாசிப்பவர் தோற்றார் போங்க!
இந்த லட்சணத்தில் அவ்வப்போது நாயனத்தை வாயில் இருந்து எடுத்துவிட்டு ஒரு பார்வை பார்ப்பார் பாருங்கள். எதோ அவர் நீண்ட நேரம் தம் பிடித்து வாசித்துவிட்டு ஒரு நிமிடம் ஓய்வெடுத்துக்கொண்டு மற்றவரை வாசிக்க விட்டது போல!
அடடா! அவரை நான் வெகுவாக ரசிப்பேன். நீங்களும் இனி மறக்காதீர்கள்!
No comments:
Post a Comment