இது என்ன இகம்?
இன்று நான் ஒரு புதுவீடு குடிபுகும் நிகழ்ச்சிக்குப் போயிருந்தேன்
வீடு பாதி வேலைதான் முடிந்திருந்தது. சுவர்களும் காங்க்ரீட் வேலைகளும்தான் முடிந்திருந்தது. மற்ற எல்லா வேலைகளும் இருந்கன.
ஏன் இவ்வளவு அவசரம் என்று கேட்டேன். அதற்கு அவர்கள் சொன்ன பதில் கொடுமையானது.
ஆனி ஆடி மாதங்களில் குடிபோகக் கூடாதாம்.
சரி ஆவணி மாதத்துக்கு என்ன? அங்குதான் விவகாரமே!
ஆவணி மாதத்தில் இரண்டு அமாவாசைகள் வருதாம். அதனால் கூடாதாம்.
அடப் பாவிகளா!
மூடத்தனதுக்கு ஒரு அளவே இல்லையா?
ஆவணிமாதத்தில் கல்யாணங்கள் எதுவும் நடக்காதா?
வேறு விசேஷங்கள் எதுவும் நடக்காதா?
குழந்தை எதுவும் பிறக்காதா?
பெற்றதாய் விழுந்து இடுப்பொடிந்து கிடந்தால் இரண்டு அம்மாவாசை இருக்குது, அதனால் செத்துப்போ என்பார்களா?
இந்தமாதிரி எந்த சாஸ்திரத்தில் சொல்லப்பட்டிருக்கு?
அப்படியொன்று இருந்தால் அதை என்ன செய்யலாம்?
இதைக் கேட்டாலே நாத்திகம் பேசுவதாகச் சொல்கிறார்கள். நான் நாத்திகவாதியாம்!
அப்படியானால் மூடநம்பிக்கைகள் மட்டும்தான் ஆத்திகமா?
No comments:
Post a Comment