ss

Monday, June 11, 2012

எனது மொழி ( 40 )




உயர்ந்த நிலை

ஒருவருடைய வாழ்வில் வசதி, வருவாய், வாழ்க்கைச்சூழல் இவை ஏறுமுகமாக இருக்கும்போது தன்னைவிட இவற்றில் மேலோங்கியிருப்போரை எண்ணிப் பார்த்து அடக்கத்தையும் நிதானத்தையும் கடைப்பிடிக்கவேண்டும். 

ஒருவருடைய வாழ்வில் அவையெல்லாம் இறங்கு முகமாக இருக்கும்போது தன்னைவிட அவற்றில் குறைவுபட்டு இருப்பவர்களைப் பார்த்து தன்னைப் பற்றித் திருப்தியும் ஆறுதலும் அவர்களைப்பற்றி அனுதாபமும் அடையவேண்டும்.

அதுவே இன்பதுன்பங்களை ஒரேமாதிரிப் பார்க்கும் உயர்ந்த நிலைக்கு    வெகுநெருக்கமான உன்னத நிலை! 
---------------------------------------------------------------------------------------------------------
======================================================================
-------------------------------------------------------------------------------------------------------

உடலும் உள்ளமும்

ஒருவர் செல்வம்மிக்கவராக இருந்தால் அதை அனுபவிப்பதற்கும் மிக மோசமாக வறுமையிலும் துன்பத்திலும் அடிபட்டவராக இருந்தால் அதை எதிர்த்துப் போராடுவதற்கும் அடிப்படையான தேவை உடல் நலமே! 

உடல்நலமகு குறைந்த பணக்காரனைவிட உடல்நலம்மிக்க ஏழையின் வாழ்க்கை உயர்ந்ததாகும். காரணம் இன்ப துன்பங்களைத் தாங்கி அனுபவிக்கும் திறன் அவனுக்கு உண்டு. 

ஒருவர் எவ்வளவு அறிவாற்றல் மிக்கவராக இருந்தாலும் அவருடைய அறிவாற்றலையும் சிந்தனையையும் தாங்கி நிற்பது உடம்புதான் 

அத்தகைய உயர்ந்த உடம்பை நலங்குன்றச்செய்து உயர்ந்த வாழ்வு வாழ எண்ணுவது ஓட்டையான வலுக்குறைந்த பாத்திரத்திலெ உயர்ந்த பண்டத்தை வைத்துப் பராமரிக்க எண்ணுவது போன்று பயனற்றுப் போகும்.

--------------------------------------------------------------------------------------------------------
=======================================================================
---------------------------------------------------------------------------------------------------------

பண்புச் சந்தை

ஒருவர் எவ்வளவு பெரிய மகானாக இருந்தாலும் ஒரு பிச்சைக்காரன் அவருக்குக் கொடுக்கும் மரியாதை அவர்போடும் பிச்சையைப் பொறுத்தே இருக்கும்.

அதுபோல வாழும் மக்களிடையேயும் பெரும்பாலோர் தங்களோடு வாழும் சக மனிதர் ஒருவரிடம் இருந்து தமக்கு ஏதாவது கிடைக்கும் அல்லது கிடைக்கக்கூடும் என்று நம்பினால் மட்டுமே அதற்க்குத் தக்கபடி மரியாதை கொடுக்கிறார்கள்!

உயர்ந்த பண்புகளுக்கெல்லாம் சந்தையே இல்லை!

No comments:

Post a Comment