ss

Saturday, June 16, 2012

எனது மொழி ( 44 )


வாழ்க்கைக் கப்பல்

ஒரு கப்பல் எவ்வளவு நவீனமாகத் தயாரிக்கப்பட்டிருந்தாலும் எவ்வளவு வசதிகள் கொண்டிருந்தாலும் எவ்வளவு பிரம்மாண்ணடமானதாக இருந்தாலும் அது தண்ணீரிலேயே இருந்து விட முடியாது.

காரணம் அந்தக்கப்பலுக்குத் தேவையான அனைத்தையும் அதில் பயணம் செய்பவர்களுக்குத் தேவையான அனைத்தையும் கப்பலில் இருந்தே உருவாக்கிவிட முடியாது.


அதற்குக் கரையும் அங்கிருக்கும் எரிபொருளும் வசதிகளும் வருவாயும் அடிப்படைத் தேவைகள் ஆகும்.

அதுபோல ஒருவர் எவ்வளவு வசதிமிக்கவராக இருந்தாலும் எவ்வளவு அதிகாரம் மிக்கவராக இருந்தாலும் அவர்  அவற்றைமட்டும் நம்பி நிம்மதியாக வாழ்ந்துவிட முடியாது. 

காரணம் தான் சிறப்பாக வாழ்வதற்கு தனது வசதியும் அதிகாரம் மட்டும் போதுமானது அல்ல. 

காரணம் அவர் வாழும் சமூகமும் அதனுடனான அவரது உறவுகளும் சமுதாயத்தின் ஒத்துழைப்பும் தான் அவருடைய வாழ்வின் உறுதியைத் தீர்மானிக்கும் அடிப்படை அம்சங்கள் ஆகும்.

அதனால் ஒருவர் சிறப்பாகவும் நிம்மதியாகவும் வாழ விரும்பினால் முதலில் தான் வாழும் உலகைப்பற்றியும் சமுதாயத்தைப் பற்றியும் அக்கரைப் படவேண்டும்! கடமையைச் செய்யவேண்டும்.

2 comments: