ss

Sunday, June 17, 2012

இயற்கை ( 4 )



இயற்கையின் நீதி!

மனிதன் தான் உருவாக்கிய கருவிகளைக் கொண்டும் அறிவியலைக் கொண்டும் பூமிப்பரப்பின் மேல் படைத்துள்ள அனைத்தும் சாதனைகளாகக் கருதப்படுகிறது.

உண்மையில் அது பூமிக்கு நேர்ந்த வேதனை!!

இயற்கையின் நோக்கில் பார்க்கும்போது புமிக்கு ஏற்பட்ட நோய்!

மனிதஇனமே அத்தகைய நோய்க்குக் காரணமான நோய்க் கிருமிகள்.




நோய்க்கிருமிகளால் நோயுறும் மனிதன் துன்பப்படுவதைப் போன்றே மனிதனால் நோயுற்ற பூமியும் துன்பப் படுகிறது!

அதைச் சார்ந்த இயற்கைச் சூழிநிலைகளும் சமநிலை பாதிக்கப்பட்டு பல்வேறு விதமாக நாம் விரும்பாத அம்சங்களை வெளிப்படுத்தி வருகிறது.

மனித உடம்பில் இருக்கும் நோய் குணமடைய நோய்க் கிருமிகள் அழிக்கப்படவேண்டும்.

பூமியைப் பிடித்த நோய் குணமடைய மனித நாகரிகம் அழிய வேண்டும். 

கடவுள் என்று ஒருவர் இருந்தால் பூமியும் இயற்கையும் பிற உயிரினங்களும் கேட்கும் வரம் அதுவாகத்தான் இருக்க முடியும்.

இயற்கையில் பொதிந்துள்ள அத்தனை உயிர்களும் வேண்டும் ஒரு நியாயமான வரத்தைக் கொடுக்காமல் அத்தனை உயிர்களின் வாழ்வையும் வாழ்வாதாரங்களையும் சூறையாடும் மனிதன் கேக்கும் அநியாயமான வரத்தை எத்தனை நாள் கொடுக்க முடியும்?

ஒன்று மனித இனம் இயற்கையையும் பிற உயிரினங்களையும் அனுசரித்து வாழவேண்டும். 

அல்லது அழிந்துபோக வேண்டும்.

அதுதான் இயற்கையின் நீதி!



2 comments: