ss

Tuesday, June 19, 2012

இயற்கை ( 5 )


இயற்கையான வாழ்க்கை

இயற்கையான சூழலில் வாழ்ந்தால் அருமையாக இருக்கும் என்பதை வெளியில் இருப்பவர்கள் உணர்ந்து இருக்கிறார்கள்.

ஆனால் அத்தகைய சூழலில் வசிப்பவர்கள் அதை உண்மையில் உணர்ந்து அனுபவிக்கிறார்களா என்றால் பெரும்பாலும் இல்லையென்றே சொல்லவேண்டும்.

காரணம் அதற்கு வசதி வேண்டும். அப்படிப்பட்ட இடங்களில் வசதிவாய்ப்புகள் மிகவும் குறைவாக இருப்பதால் அந்த இயற்கையை அனுபவிக்கும் மனநிலையில் அங்கு வாழும் மக்கள் இல்லை. 



வெளியிடங்களில் இருந்து வரும் அல்லது நினைத்துப்பார்க்கும் பலரும் இங்கு வாழ்வதை ஒரு வரமாக நினைத்து விருமபுகிகள். 

அப்படி விரும்புகின்றவர்கள் ஒன்று வெளியில் இருந்து போதுமான வருவாய் வரக்கூடியவர்களாக இருக்கவேண்டும். அல்லது அங்குள்ள வசதிகளுடன் வாழத் தயாராக இருக்கவேண்டும்! 

நமது நாட்டைப் பொருத்தவரை இயற்கைச் சூழல் உள்ளடங்களில் வாழ்க்கை வசதிகள் குறைவு. வாழ்க்கை வசதிகள் உள்ள இடங்களில் இயற்கைச் சூழல் இல்லை. 

இரண்டும் இருந்தால் மட்டுமே அனுபவிக்க முடியும் .அது இல்லாததால் அதைக் கண்டுதான் அனுபவிக்கிறோம் . வாழ்வில் அனுபவிப்பவர்கள் மிகவும் குறைவே!

2 comments:

  1. மறுக்க முடியாத உண்மை

    ReplyDelete