ஆன்மிகத்தின் எதிரிகள்
இந்த உலகையும் அண்டசராசரத்தையும் அதில் வாழும் அத்தனை
உயிர்களையும் படைத்ததாக மக்கள் நம்பும் ஒரு இறைவன் எப்படி
மனிதப்பண்புகள் கொண்டவனாகவும் மனித உறவுகளைப்போன்ற
உறவுகளையும் மனிதனைப்போன்றே மனமாச்சர்யங்கள் உடையவனாய்
இருக்கமுடியும்?
எப்படி மனித வடிவையும் மனிதன் விரும்பும் வடிவையும் உடையவனாக
மட்டும் இறைவன் இருக்க முடியும்?
இறைவனின் படைப்புகள் அத்தனையையும் பாழ்ப்படுத்தும் மனித
இனத்துக்கு இறைவனைப்பற்றிய அனைத்தையும் முடிவெடுக்கும்
அதிகாரத்தை யார் கொடுத்தார்கள்?
இத்தனை மனிதரையும் இத்தனை உயிர்களையும் இத்தனை இயற்கை
வளங்களையும் படைத்த இறைவனின் விருப்பம் தான் படைத்த
அத்தனையும் நலமாக இருக்கவேண்டும் என்பதாகத்தானே இருக்கமுடியும்?
அப்படிப்பட்ட இறைவனின் விருப்பமான பண்புகளின் வழி நடப்பதுதானே
உண்மையான ஆன்மிகமாக இருக்கமுடியும்?
நடப்பில் உள்ள ஆன்மிகம் அப்படிப்பட்டதுதானா?
மூடநம்பிக்கைகளை எதிர்த்த தாக்குதல்களை எல்லாம் ஆன்மிகத்தை
எதிர்த்த தாக்குதல்களாகவே எண்ணுகிறார்கள்.
அதனால் ஆன்மிகத்துக்கு நாத்திகவாதிகளால் ஏற்படும் அவமதிப்பைவிட
போலி ஆன்மிகவாதிகளால்தான் அதிகமான அவமதிப்பு ஏற்படுகிறது!
போலி ஆன்மிகமும் மூடநம்பிக்கைகளும் தான் உண்மையில் மனித
குலத்துக்கே எதிரானது!
உண்மையான ஆன்மிக நெறிகள் வளரவேண்டுமானால் போலி ஆன்மிகமும்
மூடநம்பிக்கைகளும் ஒழிக்கப்படவேண்டும்!
கடவுள் என்றல் என்ன ? கடவுள் ஒன்றா/பலவா ?
ReplyDeleteஉயிர் என்றல் என்ன ?
பிறப்பிற்கு முன்னும், இறப்பிற்கும் பின்னும் உயிர் நிலை என்ன ?
.
.
இப்படி எனது பல பல கேள்விகளுக்கு தெளிந்த பதில் உள்ளுணர்வாக உணர்ந்துகொண்டேன். இதற்கு மனதை அமைதி நிலைக்கு கொண்டுவரும் தவமும், தற்சோதனையும் துணை புரிந்தது. கேட்டு/படித்து தெரிந்துகொள்ள முடியாதது ஆன்மிகம். அதை தெளிந்த குருவின் மூலமே உணர்ந்துகொள்ள முடியும்.
தற்போது மக்களுக்கு தேவை முழுமையான ஆன்மீகக் கல்வி. அதை கற்பதற்கு/உணர்வதற்கு ஏற்ற ஓர் மையம் வேதாத்திரி மகரிஷியின் "மனவளக்கலை மன்றம்". வாழ்க வளமுடன்
வாழ்க வையகம் வாழ்க வளமுடன்
நன்றி நண்பரே! தொடர்ந்து உங்கள் விமர்சனங்களை பதியுங்கள்!
Deleteசிறப்பான பதிவு ! நன்றி சார் !
ReplyDeleteபாராட்டுக்கு நன்றிகள் நண்பரே! தொடர்ந்து உங்கள் விமர்சனங்களை எதிர்பார்க்கிறேன்!
Delete