ss

Saturday, June 16, 2012

எனது மொழி ( 43 )




ஒருவர் எவ்வளவு வசதியுடன் இருந்தாலும் அல்லது எவ்வளவு வறுமையில் இருந்தாலும் அதற்குப் பொருத்மாகவும் உயர்ந்த தரத்துடனும் வாழ்வதுதான் உன்னதமான வாழ்க்கை!
-----------------------------------------------------------------------------------------------------------------
======================================================================
------------------------------------------------------------------------------------------------------------------

பாதைநிறைய முட்களைத் தூவிவிட்டு வெறுங்காலில் நடப்பதுபோல் தீயவர்களுக்கும் தீய எண்ணங்களுக்கும் மத்தியில் நல்லுள்ளம் படைத்தோர் மிகுந்த மனப்போராட்டத்துடன் வாழவேண்டிய நிலை நம் பாரதநாட்டில் உள்ளது.
-------------------------------------------------------------------------------------------------------------------
========================================================================
--------------------------------------------------------------------------------------------------------------------
அறிவுச் செல்வம்

ஒருவர் தன் வாழ்நாளில் சேர்த்து வைக்கும் பொருட் செல்வத்தை அவருடைய சந்ததியினர் மட்டுமே அனுபவிப்பார்கள் 

அதுவே அவர்களைச் சோம்பேரிகளாக்கவும் பொறுப்பற்றவர்களாக்கவும் பயன்படலாம். 

அதனால் ஒருவர் தான் சேர்த்து வைத்த செல்வத்தால் பெருமையடைவதைவிட துயரப்படும் வாய்ப்புக்களே அதிகம். 

ஆனால் பொருள் சேர்க்காத ஒருவர்கூட மிகச்சிறந்த அறிவையும் பண்புகளையும் பெற்று வாழ்ந்திருப்பாராகில் அவருடைய வயதான காலத்திலகூட தன் அனுபவங்களையும் அறிவுரைகளையும் பிறர்க்குக் கூற  முடியும் அனைவருக்குமே பயன்படவும் முடியும். அதனால் மற்றவர் பயன்பெறுவது கண்டு அளவற்ற ஆனந்தமும் அடையமுடியும்.

No comments:

Post a Comment