சப்பாத்திக் கள்ளி
இதை சப்பாத்திக் கள்ளி என்று சொல்வார்கள்! உங்களில் நிறையப்பேர் இதைப் பார்த்திருக்க மாட்டீர்கள்! இது செம்மண் நிலங்களில் வறட்சியைத் தாங்கி வளரும் வேப்பமண்டலத் தாவரம். மூலிகை குணங்கள் நிறைத்தது.
அழிந்து வரும் இந்தத் தாவரம் படத்தில் உள்ளதுபோல் அல்லாமல் பெரும் புதர்போல் வளரக்கூடியது.
முட்கள் நிறைந்தது. பசுமையான காய்களையும் ரோஜா வண்ணத்தில் பழங்களையும் உடையது. பழங்களைப் பறித்து முட்கள் கைகளுக்குப் படாமல் நிலத்தில் உரசி நீக்கிவிட்டு சாப்பிடலாம். நான் சிறுவயதில் மாடுமேயக்கும்போது நிறைய சாப்பிட்டிருக்கிறேன்!
இந்தக் கள்ளியின் இளம் மடல்களை வெட்டியெடுத்து முட்களைச் சீவிவிட்டு சமையலுக்குப் பயன்படுத்தலாம். பீன்ஸ் போல் இருக்கும். மற்றவர்கள் இதைச் செய்வதில்லை. ஆனால் நாங்கள் சாப்பிட்டிருக்கிறோம்.
இது காடுகளில், தரிசுகளில், புரம்போக்குகளில் நிறைந்திருந்தால் எப்பேர்ப்பட்ட பஞ்சத்திலும் தான் அழியாது இருப்பதுமட்டுமல்ல நம்மையும் காக்கும்!
அந்தோ பரிதாபம்! இது காணக் கிடைக்காமல் அழிந்து வருவதை என் வாழ்நாளிலேயே கண்கூடாகக் காண்கிறேன்.
இயற்கைத் தாய் நம்மை மன்னிப்பாளா?
நல்ல தகவல்கள்...
ReplyDeleteஉடம்பில் (எந்த இடம் ஆனாலும்) கட்டி வந்து அவஸ்தை படும் போது, சப்பாத்திக் கள்ளியின் பாலை இரண்டு சொட்டு விட்டால், (நாலைந்து நாட்கள்) உள்ளே இருக்கும் சளி எல்லாம் ஒடி வந்து விடும்.
நன்றி...