சக்தி
=====
நாம் சாப்பிடும் உணவு தேவைக்குச் சமமாக இருக்கிறதா என்பதை அறிய துல்லியமாகக் கணக்குப் பார்க்கவேடிய அவசியமே இல்லை நண்பர்களே!
நாம் எதைச் சாப்பிடலாம் ,சாப்பிடக்கூடாது என்பதைச் சுவையுறுப்பான நாக்கு சொல்லிவிடும்.
அதே சமயம் தேவைக்கு அதிகமாக உண்டாலோ வாய்க்கு நொப்பமாக தின்றாலோ அதையெல்லாம் தடுக்கும் அறிவு நாக்குக்கு இல்லை!
நமது இயல்பான உடம்பு பெருக்கவோ இளைக்கவோ செய்யாமல் அதே சமயம் உடல்நலத்துடன் இருந்தொமென்றால் நமது உடலில் இருந்து வெளியேறும் சக்தியும் நாம் உண்ணும் உணவின்மூலம் பெறப்படும் சக்தியும் சமம் என்று பொருள்!
உடல் இளைக்க வேண்டுமானால் உள்ளே செல்வது குறைவாகவும் செலவாகும் சக்தி அதிகமாகவும் இருக்கவேண்டும்.
உடல் பெருக்கவேண்டுமானால் உள்ளே செல்வது நாம் செலவிடும் சக்திக்குக் கூடுதலாக இருக்கவேண்டும்.
அதே சமயம் உடல்நலம் என்பது எடையைமட்டும் வைத்துத் தீர்மானிக்கப்படுவது அல்ல!
நாம் எந்தப் பின்னணியில் அந்த எடையைப் பராமரிக்கிறோம் என்பதைப் பொறுத்ததே அது!
மூச்சிரைக்காமல் உழைக்கும் அல்லது விளையாடும் அல்லது படியேறும் திறனும் உடல்நலனுக்கு ஏற்ற உணவை உண்ணும் நிலையிலும்தான் ஒரு குறிப்பிட்ட எடையில் நாம் ஆரோக்கியமாக இருக்கிறோம் என்று நினைக்க முடியும்!
USEFUL
ReplyDeleteநல்லது தம்பி!
ReplyDeleteநல்லாச் சொன்னீங்க சார்... வீட்லே கேட்டா தானே...? பகிர்வுக்கு நன்றி... தொடர வாழ்த்துக்கள்...
ReplyDeleteநன்றி நண்பரே!
Delete