ss

Thursday, July 12, 2012

உணவே மருந்து ( 23 )


உமிழ் நீர்

நண்பர்களே!

நமது உடம்பில் இருந்து பலவழிகளிலும் கழிவுப்பொருட்கள் வெளியேற்றப்படுகின்றன.

அதன் மூலம் நாம் உண்ணும் உணவில் இருந்து உடம்பு எடுத்துக்கொண்டதுபோக எஞ்சியுள்ள கழிவுப்பொருட்கள் வெளியேறுகின்றன. 

நாம் உணவு உண்பது எவ்வளவு முக்கியமோ அவ்வவளவு முக்கியம் கழிவுப்பொருள் வெளியேற்றம் என்பது அனைவருக்கும் தெரியும்.

அப்படி வெளியேறுவது சிறப்பாக நடக்குமளவு நாம் உடல் நலத்துடன் இருக்கலாம்.

மலம், சிறுநீர், வியர்வை, சளி போன்ற பலமுறைகளில் கழிவுகள் வெளியேற்றப்படுகிறது.

பொதுவாகவே யாருமே வெளியேற்றப்படும் கழிவுகளை விரும்புவதும் இல்லை. மதிப்பதும் இல்லை.  காரணம் அவை நமக்குப் பயனற்றவையும் அருவெறுப்பானவையும் ஆகும். 

ஆனால் இந்தக் கழிவுப் பொருளுக்கு இணையாக ஒரு பயனுள்ள பொருளையும் கருதுகிறோம். அதுதான் எச்சில் என்று சொல்லக்கூடிய  உமிழ் நீர்!

மற்ற கழிவுப்பொருட்களை மதிக்காதது போலவே உமிழ்நீரையும் அப்படிக் கருதுவது சரியா?


தவறு என்பதே பதில்!

மற்ற கழிவுப்பொருட்கள் தேவையற்றது என்கின்ற நிலையில் புறக்கணிக்கப் படுவது நியாயம். ஆனால் நாம் உண்ணும் உணவின் செரிமானத்துக்காகச் சுரக்கும் முதல் திரவமான உமிழ்நீரை அவமதிப்பது என்ன நியாயம்? 

நாம் உண்ணும்போது உணவு நன்கு செரிமானமாக நன்கு மென்று உண்ணவேண்டும் அப்போதுதான் அது உமிழ்நீருடன்சேர்ந்து நன்கு கூழாக அரைக்கப்பட்டு இரைப்பைக்குள் செலுத்தப்படும். 

உமிழ்நீர் இல்லாவிட்டால் அந்தச் செயல் நடக்காது. எனவே அதிகநேரம் மெல்லுமளவு அதிக உமிழ்நீர் சுரந்து நன்மை பயக்கிறது. அதனால்தான் உணவைக் குடி என்று இயற்கை மருத்துவத்தில் ஒரு கருத்து உண்டு! 

ஆனால் நம்மில் நிறையப்பேர் அதை ஒரு கழிவுப்பொருள்போல அடிக்கடிக் காரித் துப்புவதைக்காணலாம்!

அதனால்தான் அதை ஒரு தேவையற்ற கழிவுப்பொருள்போல எண்ணி இழிவு படுத்துகிறோம்.

எதனால் அப்படி? 

ஆதாவது நாம் ஏதாவது நல்லதோ கெட்டதோ வாயில் வைத்தவுடன் உடனே உமிழ்நீர் சுரப்பது இயல்பு. அதுமட்டுமல்ல நமக்குப்பிடித்தமான ஒன்றை மனதால் நினைத்தால் கூட வாயில் உமிழ்நீர் வந்துவிடும்.

அதுவும் புளிப்பு போன்ற சுவைகள் வேகமாக ஊறச்செய்யும்.

அது நல்லதுதான் வாய்க்குள் உணவு செல்லும் முன்போ சென்ற உடனோ தன் பணியைத் தாமதமின்றித் துவக்கிவிடுகிறது.

அப்புறம் ஏன் காரித் துப்பவேண்டும்?

அங்குதான் சிக்கல் உருவாகிறது.

ஆதாவது நாம் உண்பதற்கோ வாயில் வைக்கவோ தகுதியற்ற பொருட்களை வாயில் வைப்பவர்களாக இருக்கிறோம். அப்படிப்பட்ட பொருட்களானாலும் வாயில் உமிழ்நீர் சுரந்தே தீரும். ஆனால் சுவையற்ற, தேவையற்ற அந்தப் பொருட்களைச் செரிக்க உதவவேண்டிய வேலை உமிழ் நீருக்கோ அல்லது அதை உள்ளே அனுமதிக்கவேண்டிய அவசியம் மற்ற செரிமான உறுப்புக்களுக்கோ இல்லை!

அதனால் எச்சிலாக வெளியேற்றப்படுகிறது. 

ஒரு குற்றவாளியைத் தண்டிப்பதில் அர்த்தம் இருக்கிறது. ஒரு நல்ல நண்பனை அல்லது நமது தாய்தந்தைக்கு நிகரான ஒருவரைத் தண்டிப்பதில் என்ன நியாயம் இருக்கிறது? அதுபோல பயனற்;றதை வெளியேற்றுவதில் அர்த்தமிருக்கிறது. பயனுள்ள உமிழ்நீரை வெளியேற்றுவதில் என்ன அர்த்தமிருக்கிறது. 

நாம் தான் குற்றவாளிகள் என்ற ஒரே காரணத்துக்காக குற்றமற்ற உமிழ்நீரை கழிவுப்பொருளை வெளியேற்றுவதுபோல் காரித் துப்புகிறோம்.

நமது உணவைச் செரிப்பதற்கு மட்டுமல்ல தேவையில்லாமல் வாய்க்குள் சென்றுவிடும் எந்த ஒன்றையும் வெளியேற்றுவதும் நாக்கு, குரல்நாண் தொண்டை மற்றும் உணவுக் குளாய் ஆகியவற்றை என்றும் இளகியதாக இயங்குதன்மையுடன் வைத்திருக்கும் பணியும் உமிழ் நீருடையதே! 

ஆகையால் தேவையற்றதை வெளியேற்றும் நேரத்தில் மட்டும் எதாவது ஒரு தடவை நல்ல நோக்கத்துக்காக வெளியேற்ற வேண்டிய ஒன்றை எதனால் தேவையின்றி வெளியேற்றுகிNறூம்?

அதுதான் நமது கெட்ட பழக்கங்கள்!

ஆதாவது புகையிலைபோடுவது, புகைபிடிப்பது, மூக்குப்பொடி போடுவது, மது அருந்துவது, சுயிங்கம் போன்றவற்றை மெல்வது போன்றவைதான் அவை! 

கண்டகண்டவற்றை வாயில் போடுவதால் நல்லதோ கெட்டதோ உமிழ்நீர் சுரக்கவேண்டிய தேவை ஏற்படுகிறது. 

ஆதாவது தாய்ப்பாலைக் கரந்து நாய்க்கு ஊற்றுவது போன்ற செயல் இது.

இதனால் பயனுள்ள கடமைகளைச் செய்யவேண்டிய உமிழ்நீர் பயனின்றிக் கூடுதலாகச் சுரந்து பயனின்றி வெளியேற்றப் படுகிறது. 

அதன்காரணமாக அதன் தேவையுள்ள உறுப்புக்களும் மற்ற செரிமான உறுப்புக்களும் பாதிக்கப்படுகின்றன. வரட்சியடைகின்றன.

பாதிக்கப்படுவதுமட்டுமின்றி இந்தத் தகாத பழக்கத்தால் பல நோய்களுக்கும் இலக்காக அமைகிறது. 

தாய்ப்பால் எப்படி தனது குழந்தையின் தேவைக்காக மட்டும் சுரக்குமோ அதுபோல உமிழ்நீரும் நமது நன்மைக்காகமட்டும் சுரக்கும் ஒரு அற்புதமான திரவமாகும்.

அதைக் காரிக் காரித் துப்பி இழிவுபடுத்துவது அல்ல நமது வாழ்;க்கை முறை!

தேவையில்லாத எதையும் வாயில் வைப்பதைத் தவிர்ப்பதே நாம் உமிழ்நீருக்குக் கொடுக்கும் உயர்ந்த மரியாதை! 

No comments:

Post a Comment