ss

Friday, July 13, 2012

உணவே மருந்து ( 24 )


எது சிறந்த உணவு

நான் மருத்துவம் கற்கவில்லை! 

ஆனாலும்  என்னைப்பொறுத்தவரை அனுபவத்தாலும் பல செய்திகளைக் கற்றுணர்ந்ததிலும் சரி என்று படுவதைச் சொல்லிவருகிறேன். 

நமது உணவைப்பொருத்தவரை அடிப்படையிலேயே மாற்றம் செய்யப்படவேண்டும். 

ஆதாவது தானியங்களும் பருப்பு வகைகளும் தான் முக்கிய உணவு என்னும் நிலையை மாற்றவேண்டும். 

பிரதான உணவாக பழவகைகளையும் பச்சையாக உண்ணக்கூடிய காய்கறிகளையும் பழச்சாறு மற்றும் இளநீர் போன்றவற்றையும் பழக்கப்படுத்திக்கொள்ளவேண்டும். 

அத்தோடு பச்சையாக உண்ணக்கூடிய தானிய மற்றும் பருப்பு வகைகளையும் முளைக்கட்டிய சில தானியங்களையும் பருப்பு வகைகளையும் சேர்த்துக்கொள்ளலாம்.  

வேகவைத்து உண்ணக்கூடிய காய்கறி மற்றும் கீரை வகைகளுக்கு வகைகளுக்கு இரண்டாமிடம் கொடுக்க வேண்டும்.

வேகவைத்த தானியம் மற்றும் பருப்பு வகைகளுக்கு மூன்றாம் இடம் கொடுக்கலாம். அதுவும் மிகக் குறைந்த அளவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

நாம் இப்போது உண்டு வரும் முறையான தானிய உணவுக்குத் துணையாக காய்கறி உணவைச் சேர்ப்பது என்ற பழக்கத்தை ஒழித்துக் காய்கறி மற்றும் கீரை உணவை முக்கிய உணவாகவும் தானிய மற்றும் பருப்பு உணவைப் பக்க உணவாகவும் எடுத்துக்கொள்ளவேண்டும்.

வேகவைத்த கிழங்கு வகைகளுக்கு நான்காமிடம் கொடுப்பதும் மாமிச உணவுக்கு ஐந்தாவதாகக் கடைசி இடம் கொடுப்பதும் நல்லது. 

சர்க்கரையும் உப்பும்  உடல்நலத்துக்கு எதிரானவை. ஆனாலும் சுவைக்காக குறைந்த அளவில் சேர்த்துக்கொள்ளலாம். 

ஆனால் எண்ணையில் பொரித்தோ நெருப்பில் சுட்டோ செய்யப்படும் பண்டங்களும் உயர்வெப்ப அடுப்புகளில் செய்யப்படும்(பேக்கரி) பண்டங்களும் நமது உடல்நலனுக்கு எதிரானவை! எண்ணைப் பயன்பாடும் உடல்நலத்துக்கு எதிரானதே!

இத்தகைய ஒரு உணவுப்பழக்கத்தைக் கடைப்பிடித்தால் நோய்களுக்கு இடமில்லை! மாறாக மிகச்சிறந்த உடல்நலத்துடன் ஒவ்வொருவரும் விளங்கலாம்! 

இத்தகைய உணவுப்பழக்கத்தை அடிப்படையாகக் கொண்டு புதுப்புது உணவு வகைகள் கண்டுபிடிக்கப்பட வேண்டும். ஆய்வுகள் செய்யப்படவேண்டும்.

இந்த மாதிரியான உணவுப்பழக்கமும் அதற்கேற்ற சாகுபடி முறைகளும் இருந்தால் உலகம் அற்புத உலகாக மாறும்!

No comments:

Post a Comment