ss

Thursday, July 26, 2012

உணவே மருந்து ( 26 )


இயற்கை எனிமா 

நண்பர்களே!

நமக்கு வரும் பல்வேறு நோய்களில் பல  மலச் சிக்கலை அடிப்படையாக வைத்தே வருகின்றன என்னும் கருத்து உண்டு.

அது உண்மையும்கூட.

அதனால் காலாகாலத்தில் வெளியேற வேண்டிய கழிவுகள் உடலுக்குள் தங்கும் நேரம் அதிகமாவதால் உடம்பிலும் ரத்தத்திலும் தேவையற்ற கழிவுகள் கலந்து நோய்களாக மாற்றமடைகின்றன.

அதனால் பெரும்பாலோருக்கு முதலில் வருவது பைல்ஸ் மூலநோய் ஆகும். 

அந்த நோய்க்கு முன்னதாகப் பலகாலமும் அதற்குச் சிகிச்சை செய்துகொண்டே பலகாலமும் துன்பப்படுபவர்கள் ஏராளம்.

எனவே எந்தக் காரணத்தைமுன்னிட்டும் மலச்ச சிக்கலுக்கு இடம்கொடுக்கவே கூடாது.

ஆனால் அதனால் அனேகம் பேர் சிரமப்படுவதைப் பார்க்கலாம். நமது நண்பர்களும்கூட இருக்ககூடும்!

மலச்சிக்கல் மற்றும் பைல்ஸ்  இருப்பவர்கள் உடனடியாகச் சிரமத்தைக் குறைத்துக்கொள்ள எளிய முறை உள்ளது.

அது இயற்கையான முறை.

அதுதான் இயற்கை எனிமா! இதை அஹிம்சை எனிமா என்றும் சொல்வார்கள்!

உடலுக்கு ஒத்துவராத உணவு உண்ணும் நாட்களிலோ மற்ற நாட்களிலோ காலையில் அல்லது இரவு சுத்தமான தண்ணீரைமட்டும் பயன்படுத்தி நாமே வயிற்றைச் சுத்தம் செய்துகொள்ளலாம்! 

அதற்கு இது சிறந்த உபகரணமாகப் பயன்படுகிறது.

இயற்கை மருத்துவத்தில் முக்கியமாகப் பயன்படுத்தப்படுவது இந்த இயற்கை எனிமா!

1 comment:

  1. இந்த உபகரணத்தை அடியேன் ஏறக் குறைய 24 ஆண்டுகள் உபயோகத்து வருகிறேன் ,எனிமா தினம் நாம் குளிகின்றோம், முகத்தை,கால் மற்றும் கை களை பல முறை ஒரு நாளுக்கு சுத்தம் செய்கிறோம், இன்றைய நாகரிக உலகில் முக்கியமான குடலை சுத்தம் செய்வது என்பது தேவையான ஒரு செயல்.நிச்சயம் நல்ல பலன் கிடைக்கும் -செய்து பாருங்கள், பேரன்புடன் ஈஸ்வரன்,பெங்களூரு

    ReplyDelete