இயற்கையும் விவசாயமும்
======================
மனிதன் கற்கால மனிதனாக இருந்ததில் இருந்து இன்றைய நவீன காலம் வரை தேவையைப் பொறுத்தே அனைத்துத் துறைகளும் முன்னேறிவந்துள்ளது.
விவசாயம் அதற்கு விதிவிலக்கு அல்ல!
எந்தமாதிரி விவசாயம் தேவைப்பட்டதோ அந்தத் திசையில் அது முன்னேறித்தான் வந்துள்ளது.
மனிதத் தேவைகள் மட்டும் கணக்கில் கொள்ளப்பட்டது.
இயற்கையின் மற்ற உயிரினங்களின் தேவை கணக்கில் கொள்ளப்படவில்லை.
துவக்க காலத்தில் இயற்கையை சிதைக்காத வேளாண் முறைகள் தான் இருந்தது.
ஆனால் மனித முன்னேற்றம் என்பதே இயற்கையை அழிப்பதைக்கொண்டுதான் சாதிக்கப்பட்டுள்ளது!
விவசாயமும் அப்படியே!
தொழில்புரட்சிக்குப் பின்பு தொழில்களைப் போலவே விவசாயத்திலும் சாதனைகள் நிகழ்த்தப்பட்டது.
அதற்காக இயற்கையை அழித்தொழிப்பதிலும் சாதனைகள் புரியப்பட்டுள்ளது.
இன்றுவரை அதன் வேகம்கூடக் குறையவில்லை.
அதனால் உண்ணும் உணவே நஞ்சாக்கப்பட்டுள்ளது. அடுத்த முன்னேற்றம் என்பது மேலும் அதிகமாக நஞ்சாக்கும் திசையில் இருக்கமுடியாது இருக்கக்கூடாது என்பதே உடனடியாகக் கற்கவேண்டிய பாடம்!
மாற்றாக செய்த அழிவுகளைச் சீர்திருத்தும் திசையில் நஞ்சற்ற உணவை உற்பத்தி செயும்திசையில் விவசாயம் முன்னேற வேண்டும்.
விவசாயத்துக்காக எந்த மரங்கள் அழித்தொழிக்கப்பட்டதோ அந்த மரங்களைச் சார்ந்து வருங்கால விவசாயம் இருக்கவேண்டும்!
அது காலத்தின் கட்டாயம்!
No comments:
Post a Comment