ss

Friday, July 27, 2012

விவசாயம் ( 30 )


பூச்சிக் கொல்லியும் பூச்சி விரட்டியும்



வேதிப்பொருட்களான பூச்சிக்கொல்லிகள் தெளிப்பதால் தாவரங்களுக்கு தீமை செய்யும் பூச்சிகள் மட்டுமல்ல நன்மை செய்யும் பூச்சிகளும் சேர்ந்து கொல்லபடுகின்றன.

ஆனால் இயற்கைமுறையில் தயாரிக்கப்படுபவை பூச்சிக் கொல்லிகளே அல்ல. அவை பூச்சி விரட்டிகள்.

காரணம் அவை எந்தப் பூச்சிகளையும் கொல்வதில்லை! மாறாக நாம் எந்தப் பயிரைப் பாதுகாக்க விரும்புகிறோமோ அந்தப்பயிரை பூச்சிகள் உண்ணாமல் தடுக்கின்றன. 

அதனால் தீங்கு விளைவிக்கும் பூச்சிகள் ஒன்று வேறிடம் செல்லவேண்டும் அல்லது அவற்றின் எதிரிகளால் கொல்லப்படவேண்டும்.அல்லது உணவின்றி அழியவேண்டும்.

இதைத் தான் இயற்கைத் தயாரிப்பான பூச்சிவிரட்டிகள் செய்வது. 

அது எப்படி சாத்தியம் ? 

பூச்சிவிரட்டி எப்படி செய்யப்படுகிறது என்று பார்த்தால்தான் அதன் ரகசியம் தெரியும்!

ஆதாவது சில தாவரங்களில் இலைகள் எந்தப் பூச்சிகளாலும் உண்ணப்படுவதில்லை. 

காரணம் அதை எந்தப் பூச்சிகளும் விரும்புவது இல்லை.

அப்படியானால் எந்தப் பூச்சிகளாலும் விரும்பப்படாத சில தாவரங்களின் இலைகளை நன்றாக இடித்து பசுமாட்டின் சிறுநீரில் ஊரவைத்து பயிர்களின்மேல் தெளித்துவிட்டால் பூச்சிகள் அதை உண்ண முடியாதல்லவா! 

இதுதான் பூச்சி விரட்டியின் ரகசியம்!

No comments:

Post a Comment