சராசரி மன நிலை
ஓவ்வொருவருக்கும் குழந்தைமுதல் இறுதிக்காலம் வரை சராசரியாக ஒரு மனநிலை அமைகிறது.
அது அதுநாள்வரை வாழ்ந்து கற்றுக்கொண்ட விஷயங்களின் அடிப்படையில் அமையும் மிக மெதுவாக மாற்றமடையும் ஒருதன்மையாகும்.
அவ்வப்போது எழுகின்ற உடன்பாடான அல்லது எதிர்மறையான விஷயங்கள் அப்போதைய மனநிலையைப் பாதித்தாலும் அவை தாற்காலிகமானதே.
அந்தத் தாற்காலிக நிலையில் இருந்து மனது மெல்ல மெல்ல சராசரி நிலைக்குத் திரும்பிவிடும்.
அந்தச் சராசரி நிலைதான் ஒவ்வொரு மனிதனின் தரத்திற்கு மிகச் சரியான அளவுகோல் ஆகும்.
வாழ்வையும் உலகையும் பற்றிக் கற்றுக்கொள்ளும் அளவுக்கு நடைமுறை வாழ்வில் பின்பற்றும் ஒழுக்க நெறிகளுக்குப் பொருத்தமாக அது ஒவ்வொரு காலகட்டத்திலும் விளங்கும்.
அத்தகைய சராசரி மனநிலையில் இருக்கும்போது எடுக்கும் முடிவுகள்தான் தெளிவாகவும் உறுதியாகவும் இருக்கும்.
தாற்காலிக உணர்வுகள் மேலோங்கி நிற்கும்போது எடுக்கும் முடிவுகள் நிலையற்றவையும் பலவீனமானவையுமாகவே இருக்கும்.
எனவே சராசரி மனநிலையின் தரத்தை உயர்த்திக் கொள்வதும் அத்தகைய நிலையில் மட்டும் புதிய முடிவுகளை எடுப்பதும் அத்தகைய நிலையை அடிக்கடி மேலும் கீழுமாக அதிகதூரம் செல்லாமல் நிறுத்துவதும் சிறந்த வாழ்க்கைமுறையாக அமையும்.
அவர்கள் பிறர்க்கு வழிகாட்டும் தகுதி பெற்றவர்களாக இருப்பார்கள்.
அருமை சார் ! வாழ்த்துக்கள் !
ReplyDeleteநன்றி நண்பரே! வாழ்த்துக்கள்!
Deleteமனித மனநிலையை பற்றிய இன்றைய பதிவு மிகவும் அருமை அய்யா. மிக்க நன்றி _/\_.
ReplyDeleteநன்றி நண்பரே! உங்கள் கருத்துக்களைத் தொடர்ந்து வரவேற்கிறேன்!
Delete