ss

Thursday, July 19, 2012

எனது மொழி ( 52 )

மக்கள் பல மதங்களாகவும், பலகோட்பாடுகளின்கீழும் பலவிதமாகப் பிரிக்கப்பட்டுள்ளதால். அவற்றுக்கு அப்பால் உலகமக்களின் ஒற்றுமையை ஏற்ப்படுத்த ஒரு உலகளாவிய பண்பாடு உருவாக வேண்டும் என்பது என் ஆசை! 

அதற்கு ஏற்கனவே உள்ள பிளவுகளின் கீழ் நின்று மோதிக்கொள்வது உகந்த வழி அல்ல! 

அதனால்தான் உலக மக்கள் அனைவருக்கும் பொருந்தும் உன்னத வழியில் நின்று உரையாடவேண்டும் என்று விரும்புகிறேன். 

அதற்கு நாம் ஏற்கனவே கற்றுள்ள ஞானத்திலிருந்து சரியானதை நமது உள்ளத்தில் இருந்து நமது குரலாக வெளிப்படுத்துவது மனமாச்சர்யமற்ற அன்பை வளர்க்கும் என்று கருதுகிறேன். 

மகான்களை விட்டுவிட்டு அவர்களிடம் கற்றதை மனதில் நிறுத்தி நம் சொந்தக் குரலில் உரையாடலாம் என்று சொல்கிறேன். 

அதுதான் அந்த மகான்களுக்குச் செய்யும் மரியாதை என்றும் கூறுகிறேன். 

புத்தகங்களில் கற்றதை அல்லது ஒருவர் சொன்னதை அப்படியே கையாள்வது சரியென்றால் நாம் கற்றுக்கொண்டது என்ன? 

ஒரு ஜெராக்ஸ் இயந்திரத்துக்கும் நமக்கும் வேறுபாடு என்ன? 

இனியும் ஒன்று என்னவென்றால் நமது கருத்தின்மேல் விவாதிக்கலாம். 

மகான்களின் கருத்துக்களின்மேல் விவாதித்தால் அதற்கு பதில்சொல்லமுடியாமல் போகும்போது யார் வந்து சொல்வார்கள்?

-------------------------------------------------------------------------------------------------------
===================================================================
----------------------------------------------------------------------------------------------------

ரைட் சகோதரர்கள் விமானம் கண்டுபிடித்தார்கள் என்றால் அதே விமானத்தை இப்போது நாம் பயன்படுத்திக்கொண்டிருக்கவில்லை!

அந்தத் தொழில் நுட்பத்தை அடிப்படையாக வைத்து புதுப்புது மேம்பட்ட தொழில் நுட்பத்தையும் உருவாக்கி நமது தேவைக்குப் பொருத்தமாக ஆக்கி பயன்படுத்துகிறோம்.

அதுபோல சித்தர்களின் அல்லது ஞானிகளின் தத்துவங்களைக் காலத்துக்கு ஏற்ப சரியான திசையில் வளர்த்தெடுக்கவேண்டும். அதற்கு நாம் கற்றதில் இருந்து புதுப்புது விவாதங்களின்மூலம்தான் வழிகானவேண்டும். அப்படி இல்லாவிட்டால் அது ஒரு வகையான மூட நம்பிக்கை ஆகிவிடும். அது சரியா?

உண்மைகள் காலம்தோறும் மாறுவதில்ல. எது உண்மை என்ற முரண்பாடுகள் இருந்துகொண்டே இருக்கும்! அந்த முரண்பாடுகளின் மோதல்தான் உண்மையான அறிவு வளர்ச்சி,தத்துவ வளர்ச்சி!

2 comments:

  1. மனித வளர்ச்சி என்றால் என்ன? என்பதை அழகாக உணர்த்தி விட்டீர்கள் சார் !

    ReplyDelete