கடைசி வாய்ப்பு!
இன்றைய உலகின் இயற்கைக் கட்டமைப்பு மனித நாகரிகம் அழிவது தவிர்க்கமுடியாதது என்பதைக் காட்டுகிறது!
அதைத் தடுத்து நிறுத்த பயனுள்ள நடவடிக்கை இதுவரை இல்லை!
தனி நபரில் இருந்து உலக நாடுகளின் அரசுகள் வரை இன்றைய பொழுது கழிந்தால் சரி நாளைய பொழுதை இருப்பவர் பார்த்துக்கொள்வார்கள் என்ற போக்குத்தான் காணப்படுகிறது.
இது நல்லது அல்ல! முற்றிலும் அழிவுப்பாதை!
நம்பிக்கை இழக்கக்கூடிய நிலை இருந்தாலும் நம்பிக்கை இழப்பதைவிடப் போராடுவது அழிவைக் கொஞ்சம் தள்ளிப்போடும்.
அவ்வளவே!
இன்னும் ஒரே ஒரு வாய்ப்புதான் உள்ளது !
ஆதாவது அனைத்துப் பாகுபாடுகளுக்கும் அப்பால் உலகளாவிய நலன்களில் அக்கறைகொண்ட மேலோர் உலக அளவில் ஒன்றுபட வேண்டும்.
உலகில் உயிரின வாழ்க்கைச் சூழலைக் காப்பதற்கான திட்டங்களை உருவாக்கவேண்டும்.
அதன் படி உலகம் நடக்கவேண்டும்.
விண்ணில் இருந்து பார்த்தால் பூமியின் நிறங்கள் மூன்றாக மட்டும் இருக்கவேண்டும்.
ஒன்று நீலம்(கடல்)
இரண்டாவது வெண்மை(மேகம் மற்றும் பனிக்கட்டி)
மூன்றாவது பச்சை (காடுகளும் மரங்களும்).
அப்படி ஒரு உலகாக மாற்றுவதுதான் மனிதத் தவறுகளுக்கு உண்மையான பிராயச்சித்தம்.
வருங்காலத்துக்கு நாம் செய்யும் கடமை!
இந்தக் கடமையைச் செய்யத் தவறினால் முடிவான அழிவுதான் மனித குலத்துக்குத் தண்டனையாக இருக்கும்!
இந்தக் கடைசி வாய்ப்பையாவது பயன்படுத்தி தப்பிப்போமா?....
முற்றிலும் உண்மை நண்பரே.. என்னால் முடிந்த மட்டும் மரங்களை நட்டும், வெட்ட படும் மரங்களை தடுத்தும் வருகிறேன். ஆனால் இது ஒருவர் இருவரால் மட்டும் முடியாது ஒவ்வொருவரும் செய்ய வேண்டும் என்று உணர்கிறேன்.
ReplyDeleteஉண்மை தான் ... மேலே நண்பர் சொன்னது போல் எல்லோருக்கும் அந்த உணர்வு இருக்க வேண்டும் ! நன்றி !
ReplyDelete