துறந்தவர் யார்?
எனக்கு நீண்ட காலமாக ஒரு சம்தேகம்!
துறவி துறவி என்று சொல்கிறார்களே யார் இந்தத் துறவிகள்?
கிரிமினல் சாமியார்களை விட்டுத் தள்ளுங்கள் குப்பைகள்!
மக்கள் பக்தியோடு நினைக்கும் சாமியார்களையே எடுத்துக்கொள்வோம்!
அவர்களில் எத்தனைபேர் எதைத் துறந்தார்கள்?
மக்களிடம் எதையெல்லாம் துறக்கச் சொல்லி உபதேசமும் கதைகளும் சொல்கிறார்களோ அவற்றையெல்லாம் முதலில் அவர்கள் துறந்து விட்டார்களா?
யாரைத் துறவிகள் என்று இவர்கள் சொல்கிறார்கள்?
தெருவில் சாமியார்மாதிரி வேஷம் போட்டுக்கொண்டு திரியும் பிச்சைக்காரர்களா?
அல்லது பல பிரச்சினைகளால் குடும்பத்தைவிட்டே ஓடிப்போய் ஆங்காங்கே கோயில்களிலும் மடங்களிலும் படிகளில் உட்கார்த்து யாசகம் கேட்கிறார்களே அவர்களா?
அல்லது பெரிய பெரிய மடங்கள் சொத்து சுகங்கள் சீடகோடிகள் என்று வைத்துக்கொண்டு அரசாங்கங்க அதிகாரிகளையும் அமைச்சர்களையும்கூட காலில் விழவைக்கிறார்களே அவர்களா?
அல்லது ஆங்காங்கே கோவணம் கட்டியும் காட்டாமலும் பரணின்மேலும் அங்கேயும் இங்கேயும் உட்கார்ந்துகொண்டே பெரிய பெரிய ஆசாமிகளைஎல்லாம் காலால் உதைத்து வரம் கொடுக்கிரார்களே அவர்களா?
அல்லது உலகம்பூராவும் எரோப்ளேனில் பறந்து பறந்து டாலர்களில் மிதந்துகொண்டே ஆசி வழங்குகிறார்களே அவர்களா?
அல்லது லோக்கல் சாமியாடிகளா? பேயோட்டிகளா?
தயவு செய்து யாரவது சொல்லுங்கள்!
வித்தைக்காரர்கள் !
ReplyDeleteதுறத்தல் என்பது பெரும் கலை அது அவளவு எளிதல்ல .............மனதின் உள்ளே இருக்கும் ஒளிகளை அகற்றும் இருள் அந்த இருண்மையை எதிர்கொள்ள பழகுவது ...........ஆனால் இன்று துறவி என்று பெயர்சொல்லுபவர்களால் ந்த இருளை எதிர்கொள்ளும் திராணியற்றவர்கள் .........சாமானிய மனிதன் தான் அவர்களும் அவர்களை கொண்டாடுவது அறிவின்மை
ReplyDeleteநன்றி நண்பர்களே!
ReplyDelete