கறிவேப்பிலை காரப்பொடி
நண்பர்களே!
இது இன்று எங்கள் வீட்டில் ஒரு ஸ்பெஷல் தயாரிப்பு !
தேவையான அளவு கறிவேப்பிலையை நன்கு வெய்யிலில் காயவைத்து எடுத்து வைத்துக்கொள்ளவேண்டியது.
சாதாரணமாக இட்டிலிப் பொடிக்கு என்னென்ன சேர்ப்போமோ அந்தப் பொருட்கள் பருப்பு வகைகள் ஆகியவற்றைத்தான் இதற்கும் சேர்க்கவேண்டும்.
அவற்றை வடைச் சட்டியில் போட்டு வறுத்து எடுத்துக்கொண்டு வெய்யிலில் காயவைத்த கறிவேப்பிலையை உடன் சேர்த்துக்கொள்ளவேண்டும்.
கறிவேப்பிலையை வறுக்கக்கூடாது! எந்த அளவு அதிகம் சேர்க்க முடியுமோ அந்த அளவு கறிவேப்பிலையை அதிகமாகச் சேர்க்கவேண்டும்.
எல்லாவற்றையும் மிக்சியில் போட்டு வேண்டிய பாகத்தில் பொடிசெய்தால் கறிவேப்பிலைப் பொடிதயார்!
கண்களுக்குப் பசுமையாகவும் தொட்டுக்கொள்ள சுவையாகவும் இருக்கும்.
இதை இட்டிலிக்கும் தோசைக்கும் தொட்டுக்கொள்ளலாம்.
சாதத்தில் கலந்து சாப்பிடலாம்.
இயற்கை உணவுகளிலும் கலந்து சுவையை அதிகப்படுத்தலாம்!
மிக்க நன்றி சார்...
ReplyDeleteவீட்டில் குறித்துக் கொண்டார்கள்...