அரிசி
முன்னர் எல்லாம் நஞ்சை நிலம் வைத்திருந்தவர்கள் மட்டுமே அதிகமாக அரிசிச் சாதம் உண்டனர்.
அதே சமயம் மானாவாரிப் புஞ்சை நிலம் வைத்திருந்தவர்களும் விவசாயத் தொழிலாளர்களும் விசேச நாட்கள் தவிர மற்ற நாட்களில் சோளம் ,கம்பு, வரகு, சாமை, தினை போன்ற புஞ்சைத் தானியங்களையே உணவாகக் கொண்டனர்.
அரிசி எனபது வசதியானவர்களின் உணவாகவே இருந்தது!
அப்போதெல்லாம் புஞ்சைத் தானியங்களின் விலைதான் மலிவாகவும் அரிசியின் விலை கூடுதலாகவும் இருக்கும்.
அதனால் நஞ்சை நிலம் இல்லாதவர்களுக்கு அரிசிச் சாதம் என்பது வரப்பிரசாதமாகும்.
பசுமைப் புரட்சிக்குப் பின்னால் மானாவாரி விவசாயம் கட்டுபடியாகாமல் போனதால் பாரம்பரிய பலதானிய உற்பத்தி கைவிடப்பட்டது.
ஒழித்துக் கட்டப்பட்டது என்றே சொல்லலாம்!
நஞ்சையில் நெல்லும் புஞ்சை என்றால் பணப்பயிர்களும் என்ற அவல நிலை உருவானது.
அதன்காரணமாக பல்வகைத் தானியங்களின் உற்பத்தி குறைந்து இப்போதெல்லாம் அரிசியைவிட மிக அதிக விலைக்கு விற்கப்படுவதைப் பார்க்கிறோம்.
இதன் காரணமாக அனைத்து மக்களின் பிரதான உணவாக அரிசி என்று ஆகிவிட்டது!
அரிசிமட்டும்தான் என்று ஆனபின் புது ரகங்களின் சுவையற்ற அரிசியைத்தான் அரிசி என்ற பெயரால் உண்டு வருகிறோம்.
வணிக நோக்கங்களுக்காக அரிசியைச் சின்னாபின்னப்படுத்தி உடல்நலனுக்குக் கேடுவிளைவிக்கும் குணங்களை ஏற்றி உண்டு வாழ்கிறோம்.
இப்போதும் மானாவாரிப் புஞ்சை தானியங்கள் கட்டுபடியாகும் விதத்தில் விவசாய நிலைகள் மாறினால் அரிசியை மட்டும் சார்ந்திருக்கும் அவலம் மாறி எல்லாத் தானியங்களும் உண்ணும் நிலை ஏற்படும் . ஆரோக்கியமான உணவும் மக்களுக்குக் கிடைக்கும்.
காலம் மாறுமா?
matra ena vali irukirathu???
ReplyDelete