சொல்லக் கொதிக்குதடா!
நண்பர்களே!
விவசாயிகள் தொடர்பான ஆழமான உண்மை ஒன்று பெரிதாக இன்னும் உணரப்படவில்லை!
ஆதாவது முன்னர் பழையமுறை விவசாயத்தின்போது விவசாயிகள் தங்களிடம் சொந்தமாக விதை வைத்திருந்தார்கள். பாடுபடக் கால்நடைகள் வைத்திருந்தார்கள். அவற்றின் கழிவுகள் உரமாகப் பயன்பட்டன.
வேலை செய்யும் ஆட்களுக்குக் கூலியாகக்கூட விளைச்சல் பொருட்களைக் கொடுத்தார்கள்.
பணம் என்கிற செலவே கிடையாது.
தங்கள் விளை பொருட்களையும் கால்நடைகளையும் விற்பதன்மூலம் கிடைக்கும் பணம் வேறு நிலம் வாங்குவதற்கும் கல்யாணம் போன்ற செலவுகளுக்கும் வீடுகட்டுவதற்கும் பயன்படுத்தினார்கள்.
அந்தக் காலத்தில் மக்கள் தங்கள் வாழ்க்கைச் செலவுகளில் கிட்டத்தட்டப் பாதிக்குக் குறையாமல் உணவுத்தேவைக்காகச் செலவு செய்தார்கள்.
ஆதாவது ஒட்டுமொத்த மக்களின் வருவாயில் பாதியளவு விவசாயிகளுக்கு வருவாயாகக் கிடைத்தது.
ஆதாவது பண முதலீடு இன்றி மொத்தமக்களின் வருவாயில் பாதியை விவசாயிகள் வருவாயாகப் பெற்றார்கள்.
ஆனால் இப்போது நிலைமை என்ன?
ஒருபக்கம் விவசாயிகள் தங்களின் உற்பத்திக்காக நிறையச் செலவு செய்கிறார்கள்.
அது உற்பத்தி மதிப்பில் பெரும் பாகத்தை எடுத்துக்கொள்கிறது.
மறுபக்கம் மக்களின் மொத்த வருவாயில் உணவுத் தேவைக்காகச் செலவு செய்யும் தொகை வெகுவாகக் குறைந்துவிட்டது!
அதிலும்கூட பெரும்பாகம் மதிப்புக்கூட்டல் என்ற பெயரால் தொழில்துறைக்கும் இடைத்தரகர்களுக்கும் போய்விடுகிறது.
அதைத் தாண்டித்தான் விவசாயியின் கைகளுக்கு வரவேண்டும்!
ஆனால் மக்களின் மற்ற செலவுகளுக்கான சதவிகிதம் உணவுக்கான செலவுகளைவிட மிகவும் அதிகரித்துவிட்டது.
ஆக தன் உழைப்புக்காக ஒட்டுமொத்தப் பொருளாதாரத்தில் அதிகமாக ஆதாயம் அடைந்துகொண்டிருந்த விவசாயி அதைப் பறிகொடுத்தது அல்லாமல் முன்னர் வழக்கில் இல்லாதபடி பெரும் செலவையும் எதிர்கொண்டு வாழும் அவலம் ஏற்ப்பட்டுவிட்டது!
இதை எத்தனைபேர் உணர்ந்திருக்கிறார்கள்?
இதை ஒரு விவசாயி உண்மையாகவே உணர்ந்தால் அவன் ரத்தம் கொதிக்கவேண்டும்! அப்போதுதான் விடிவு ஏற்படும்.
கொதிக்குமா?....
யோசிக்க வைக்கும் கேள்வி...
ReplyDeleteகொதிக்க வேண்டும்...
kothithal ena seiya mudiyum?
ReplyDeleteஅதற்கு ஏற்ப சிந்தித்து செயல்படவேண்டும் நண்பர்களே! நன்றி!
ReplyDeleteகொதிக்க வேண்டும்...
ReplyDelete