ss

Thursday, August 16, 2012

விவசாயம் ( 35 )


விளைநிலங்களை வளமாக்க 

விளைநிலங்கள் என்றும் வளமாக இருக்க வேண்டுமென்றால் ,

ஒன்று அவை நமக்குத்தரும் விளைச்சலைவிடக் கூடுதலாகத் தங்களைத் தாங்களே புதுப்பித்துக்கொள்ள விடவேண்டும்.

அல்லது எத்தனை எக்கர் பாசன சாகுபடி செய்கிறோமோ அதைப்போல் இருமடங்கு நிலங்கள் மானாவாரி சாகுபடி செய்யப்படவேண்டும். 

அதில் கிடைக்கும் கழிவுகளைப் பயன்படுத்திப் பல்வேறு முறைகளில் பாசன நிலங்கள் இழக்கும் வளத்தைத் திரும்பவும் ஈடுகட்டவேண்டும். 

அப்படி இல்லாமல் செய்யப்படும் எந்தவித விவசாயமும் வெற்றிபெறமுடியாது!

அதுதான் இயற்கையின் விதி!

அதைவிட்டுச் செய்யும் முயற்சி எல்லாம் சைக்கிளில் காற்றுக் குறைந்துவிட்டால் பின்னால் உட்கார்ந்து இருப்பவர் பின்பகுதியைத் தூக்கிப்பிடித்துக் கொண்டால் காற்றழுத்தம் சரியாகிவிடும் என்பதுபோலத்தான். 

தோல்வியில்தான் முடியும்!

2 comments:

  1. தங்கள் கருத்துப்படி ஒவ்வொரு விவசாயும் தன்னிடமுள்ள நிலத்தில் பாதி அளவில் மானாவரி சாகுபடி கட்டாயம் செய்யவேண்டுமா? ஏற்கனவே நமது அமைச்சர் சரத்பவார் ரசாயன உரமிட்டு செய்யும் விவசாயம் தான் சனத்தொகைக்கு ஏற்ப ஈடுகட்டும் முறை என்று தவறாக சொல்லி உறக்கம்பனி முதலாளிகளுக்கு ஆதரவு தேடுகிறார்.
    உயிரி மாற்றம் செய்யப்பட்ட பருத்தியை நமது நாட்டில் நுழையவிட்டதில் முக்கிய பங்கு உடையவர்.

    ReplyDelete