எந்த ஒரு தவறுக்கும் நாம் காரணமாக இருந்தால் மட்டும் வருந்தவேண்டும்.
திருந்தவேண்டும்.
இல்லையென்றால் பிறருடைய தவறுகளுக்காக வருந்தி வருந்தி நமது காலம் வீணாகப் போய்விடும்!
=======================================================================
--------------------------------------------------------------------------------------------------------------------------------
========================================================================
கனவு

ஒரு கனவு கண்டேன்!
என்னை மனிதனைத் தவிர மற்ற உயிரினங்களுக்கும் தாவரங்களுக்கும் தலைவனாக ஏகமனதாகத் தேர்வு செய்தார்கள்!
அவர்களின் நல்வாழ்வுக்காக என்ன உத்தரவு போட்டாலும் தாங்கள் அனைவரும் கீழ்ப்படிவதாகவும் சொன்னார்கள்!
நான் போட்ட முதல் உத்தரவு என்ன தெரியுமா!
ஒருவினாடிகூடத் தாமதம் செய்யாமல் உடனடியாக நான் உட்பட ஒருவரைக்கூடத் தப்பவிடாமல் மனித இனத்தை ஒழித்துக்கட்டுங்கள் என்பதே!
காரணம் மனித இனம் விரும்பும் தகுதியில் ஏராளமான உயிரினங்களும் தாவரங்களும் உள்ளன!
மனிதனுக்கு அந்த அவசியமுள்ளது!
ஆனால் மனிதனை விரும்ப வேண்டிய அவசியமுள்ள ஒரு உயிரினமும் தாவரமும் இல்லை !
அவனை ஈன்ற இயற்கைத் தாய்க்கும் அவன் நல்லபிள்ளையாக நடந்துகொள்ளவில்லை. அவளின் இதயத்தையே பிளந்தான்!
ஆக தன்னைத் தவிர - ஏன் பலநேரங்களில் தன் இனத்தையேகூடக் கூட்டம்கூட்டமாகக் கொல்லும் குணம் படைத்த - மற்ற அனைத்து உயிரினங்களையும் இயற்கையையும் அழித்தொழிக்கும் குணம்படைத்த மனித இனம் தொடர்பான எனது உத்தரவு தவறா?
======================================================
---------------------------------------------------------------------------------------------------------

ஒளி பட்டு இருள்தான் தன்னை மாற்றிக்கொள்ள வேண்டும்.
இருள் பட்டு ஒளி தன்னை மாற்றிக்கொள்வது இல்லை!
=====================================================

உண்மை... நன்றி...
ReplyDelete//அவனை ஈன்ற இயற்கைத் தாய்க்கும் அவன் நல்லபிள்ளையாக நடந்துகொள்ளவில்லை.//
ReplyDelete//மனிதனை விரும்ப வேண்டிய அவசியமுள்ள ஒரு உயிரினமும் தாவரமும் இல்லை//
மிகச்சரியான கருத்து..!