ss

Wednesday, August 29, 2012

எனதுமொழி ( 62 )


ஆசை

நான் வழி நடத்தும் முகநூல் குழுமம் இயற்கை உணவும் இனிய வாழ்வும் என்ற குழுமத்தில் எனது ஒரு பதிவு!

நண்பர்களே!

எனக்கு ஒரு ஆசை!

நமது குழுமத்தின் ஒவ்வொரு உறுப்பினரும் தம்மையொத்த மற்றவர்களைவிட ....

ஆரோக்கியமானவர்களாக இருக்கவேண்டும்!

ஆரோக்கியத்தைப் பற்றிப் பிறருக்கு ஆலோசனை வழங்கக்கூடியவர்களாக இருக்கவேண்டும்.

மருத்துவ செலவை நிறுத்தியவர்களாக அல்லது குறைத்தவர்களாக இருக்கவேண்டும்!

இயற்கை உணவை பிரதான உணவாகக் கொண்டு வாழ்பவராக இருக்கவேண்டும்.

இயற்கையை நேசிப்பவராகவும் உலக இயற்கை வளங்களை நேசிப்பவராக இருக்கவேண்டும்.

அனைத்து மக்களையும் அனைத்து உயிரினங்களையும் நேசிப்பவராக இருக்கவேண்டும்.

தமக்கோ பிறர்க்கோ தீங்கு விளைவிக்கும் கெட்ட பழக்கங்கள் இல்லாதவராக இருக்கவேண்டும்.

ஆணுக்குப் பெண் இணை என்ற உணர்வு படைத்தவராக இருக்கவேண்டும்.

ஆதிக்க மனப்பான்மையோ அடிமை மனப்பான்மையோ இரண்டையும் வெறுப்பவராக இருக்கவேண்டும்.

உலகையும் வாழ்க்கையையும் சரியாகப் புரிந்து வாழ்பவராக இருக்கவேண்டும்.

அனைத்து உலக மக்களுக்கும் பொருந்தும்படியான உயர்ந்த ஆன்மிக அல்லது அறிவியல் சிந்தனை கொண்டவராக இருக்கவேண்டும்!

மூடநம்பிக்கைகளைப் புறக்கணிப்பவராக இருக்கவேண்டும்.

தனிப்பட்ட வாழ்விலும் பொது வாழ்விலும் உயர்ந்த ஒழுக்கத்தைப் பின்பற்றுபவராக இருக்கவேண்டும்.

இதன்படி வாழ்பவராக இல்லாவிட்டாலும் இத்தகையவராக தம்மை மாற்றிக்கொள்ள முயற்சிப்பவராக இருக்கவேண்டும்.

குறைந்த பட்சம் நூறு ஆண்டுகள் நலமுடன் வாழ விருப்பம் உடையவராக இருக்கவேண்டும்.

மொத்தத்தில் உலகமக்கள் எப்படி வாழவேண்டும் என்பதற்கு ஓர் எடுத்துக்காட்டாக விளங்கவேண்டும்!

எனது ஆசை தவறா?



2 comments:

  1. அருமை... பதிவாக்கிப் பகிர்ந்து கொண்டதற்கு மிக்க நன்றி... தொடர வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  2. நான் வசிப்பது நார்வே, குளிர் மிகுந்த நாடு, காப்பி குடிப்பது இந்நாட்டவர்களின் கலாச்சாரமாகவே ஆகிவிட்டிருக்கிறது.இந்நாட்டிக்கு குடிபெயர்ந்தபின் பழக்கமாகிவிட்டது.தவிர, வேறு எந்த கெட்ட பழக்கமும் இல்லை ஐயா!

    ReplyDelete