உண்மையான ஆன்மிகம் இதுவா?
பரம்பொருளுக்கு ஆதாவது எல்லாமுமாக இருக்கிற இறை என்பதற்கு
மனித புத்தியைக் கற்பித்ததே சரியான ஆன்மிகத்துக்கு விழுந்த முதல் அடி ஆகும்!
உலகத்தை மனிதன் தனக்காக மட்டும் படைக்கப்பட்டதாக நினைத்ததுபோலவே இறைவனையும் தனக்காகமட்டும் படைத்து அத்தனை ஏமாற்று வேலைகளுக்கும் துணையாக யாக வைத்துக்கொண்டான் என்பதே உண்மை!
அதனால்தான் பிற உயிரினங்களைக் கணக்கில் கொள்வதே இல்லை.
அதுமட்டுமல்ல பிற உயிரினங்களைப் பலியிடுவதைக்கூட ஆண்டவனுக்குப் பிடித்தமான ஒன்றாகக் கருதுகிறார்கள்!
அப்படியானால் மனிதனின் அத்தனை தவறுகளும் ஆண்டவனின் பண்புகளா?
இந்த மூடர்கள் சொல்வதெல்லாம் ஆண்டவன் என்றால் அவனுக்கும் மனிதனுக்கும் என்ன வேறுபாடு?
உண்மையான ஆன்மிகவாதிகள் சிந்திக்கவேண்டும்!
தான் நினைத்தது, சொல்வது எல்லாம் நடந்து விட்டால் ... அவனை கடவுள் ஆகி விடுகிறார்கள் மக்கள்...
ReplyDeleteஅது ஒரு எமாளித்தனமும் எமாற்றுவேலையும் ஆகும் நண்பரே!
ReplyDelete