உறைமுள்
இதை எங்கள் பக்கம் கோயமுத்தூர் முள் என்றும் சுரைமுள் என்றும் சொல்வார்கள்.
இதன் உண்மையான தாவர இயல் பெயர் என்ன என்று தெரியவில்லை.
எது எங்கு தோன்றி எப்படிப் பரவியது என்றும் தெரியவில்லை.
இதன் வேர் முதல் நுனி வரை முட்களால் நிறைந்திருக்கும்.
இலைகள் இல்லை!
இதன் முட்கள் வினோதமான குணம் கொண்டவை.
அவை கத்தியை உரையில் போட்டமாதிரி இருக்கும்.
முள்ளின் அடிப்பகுதியை இரண்டு விரல்களால் பிடித்துக்கொண்டு அடுத்தகையின் இரு விரல்களால் முள்ளைப் பிடித்து இழுத்தால் அதன்மேல்பகுதி உறை போல் தனியாகப் பிரிந்து வரும்.
அதனால் இந்த முள் காலில் பட்டுப் பிடுங்கும்போது உரைபோன்ற பகுதி காலுக்குள் தங்கி விடும் என்பதால் பயந்துகொண்டு இந்த முள் செடிப்பக்கம் யாரும் போகப் பயப்படுவார்கள்.
இது வேலியாக நடுவது தவிர வேறு எதற்கும் பயன்படாது.இதன் எந்தப்பகுதியையும் உண்ணக்கூடிய எந்தப் பிராணிகளும் இருப்பதாகத் தெரியவில்லை.
இது புதர்போல வளருமாதளால் இதன் அடியில் சிறு பிராணிகள்கூட தங்க முடியாது.
எந்தப் பயனும் இல்லாத இது துண்டுகளாக கொண்டுபோய் நட்டால்தான் வளருமாதலால் வேறுவகையில் பரவுவதற்கு வழியின்றி ஆங்காங்கே இருக்கும் இடங்களிலேயே இருக்கிறது.
இதுவும் தேவையின்றி நிலத்தடி ஈரத்தை உறிஞ்சி மற்ற தாவரங்களுக்கு இடையூறாக வளரும் தாவரமாகும்.
இது மட்டும் பார்த்தீனியன் செடிபோல் பரவுவதாக இருந்தால் மனிதனுக்கு ஒரு பெரும் சவாலாக மாறி இருக்கும்.
ஆனாலும் எந்தப் பயனுமற்ற இதை ஒழிக்கவோ அல்லது பராமரிக்கவோ யாரும் இல்லாமல் விட்டுவைக்கப்பட்டு உள்ளது!
No comments:
Post a Comment