லஞ்சத்திலிருந்து விடுதலை
லஞ்சம் என்பது யாரும் விரும்பிக்கொடுப்பது இல்லை!
அந்த நாய்கள் கேட்பதும் இல்லை!
கொடுக்கவேண்டிய நிர்பந்தத்தை உருவாக்குகிறார்கள்!
கொடுத்தால் காரியம்,இல்லாவிட்டால் இல்லை என்று!
கொடுப்பதால்தான் வாங்குகிறார்கள் என நினைப்பது குற்றவாளிகளையும் பாதிக்கப்பட்டவர்களையும் ஒரேமாதிரி மதிப்பிடுவது ஆகும்!
இருக்கும் வசதிகளை எல்லாம் தாண்டி ஏன் லஞ்சம் கொடுக்கிறார்கள்?
ஒருவர் தனது அவசியத் தேவைக்காக ஆபத்துக்கு நிவாரணமாக தவிக்கும்போது அந்தத் தவிப்பை பயன்படுத்திக் காசு பார்க்கிறார்கள்.
அந்த நேரத்தில் கொடுக்க மாட்டேன் என்றோ அவர்களின்மேல் புகார் கொடுப்போம் என்றோ எத்தனைபேர் நினைப்பார்கள்?
சாதாரணமான ஒரு குற்றவாளியை அடித்து உதைத்து வீதியில் இழுத்துச் செல்பவர்கள் இதுவரை எந்த லஞ்சம் வாங்கியவனையாவது நாயை அடிப்பதுபோல் அடித்து இழுத்துச் சென்றிருக்கிரார்களா?
புகார் அளித்தால்தான் நடவடிக்கை எடுக்கமுடியுமா?
எங்கு யார் லஞ்சம் வாங்குகிறார்கள் என்பது யாருக்குத் தெரியாத ரகசியம்?
ஏன் புகாரை எதிர்பார்க்கவேண்டும்?
என்னமோ லஞ்சத்தை ஒழிப்பதற்கு மக்கள் ஒத்துழைக்க மறுக்கிறார்கள்.லஞ்சலாவன்யத்தை ஊக்குவிக்கிறார்கள் . புகார் அளித்தால் உடனே நடவடிக்கை என்பது போன்ற ஏமாற்றும் அறிவிப்புகளுக்குப் பஞ்சம் இல்லை!
பாதிக்கப்பட்டவர்களையே குற்றவாளிகளாக்குவது நமது நாட்டைப்பிடித்த நோய்!
முதலில் அதைச் சரிசெயயவேண்டும்!
பிடித்த இடத்திலேயே அடித்து உதைக்கத் தயாரா? புகார் சொல்பவர் யாரென்று தெரிவிக்காமல் நடவடிக்கை எடுக்கத் தயாரா? ஆயிரம் புகார்கள் உடனே குவியும்! ஒரே நாளில் ஒரு லட்சம் குற்றவாளிகளைப் பிடிக்கமுடியும்!
மக்கள் எப்பேர்ப்பட்ட விஷ வலையில் சிக்கியிருக்கிறார்கள் என்பது முக்கியமாக சிந்திக்கவேண்டிய விஷயம்!
ஒரு லட்சம் வெள்ளைக்காரன் முப்பது கோடிமக்களை அடிமையாக ஆளவில்லையா?
ஊழல் பேர்வழிகள் கோடிக்கணக்கானவர்கள் சேர்ந்து நாட்டுமக்களை அடிமைப்படுத்தியத்தில் ஆச்சர்யம் ஒன்றுமில்லை!
ஆனால் அதை லஞ்சம் கொடுக்காமல் அனைவரும் விடுவதால் சரிப்படுத்த முடியும் என நம்புவது கடல் வற்றி மீன்பிடிப்பதுபோல் ஆகிவிடும்!
அதனால் நடப்பது நடந்துகொண்டிருக்கும்போதே லஞ்சம் வாங்கினால் வாழமுடியாது என்ற குலை நடுக்கத்தை ஏற்படுத்தவேண்டும்!
ஊழல் செய்பவன் உயிர்வாழ்வே அச்சப்ப்படும்படி செய்யவேண்டும்!அதுதான் நிரந்திரத் தீர்வுக்கு இட்டுச் செல்லும்!
பாதுகாப்பு ரகசியங்களை யாரும் எளிதில் தவறாகக் கையாண்டுவிடமுடியாது!
கள்ள நோட்டுக்களை யாரும் அவ்வளவு எளிதில் அடித்துவிட முடியாது! ( இருந்தாலும் நடப்பது வேறு)
அதைப் பிடிப்பதற்கு யாரும் புகார் கொடுக்கவேண்டியது இல்லை!
அதற்கென உள்ள துறைகள் அதைப் பார்க்கின்றன.
அதைப்போல் ஆயிரக்கணக்கான லட்சோப லட்சக்கணக்கான மடங்கு அதிகமாக நடக்கும் இந்த லஞ்சப் பிரச்சினை மட்டும் எப்படி யாருக்கும் தெரியாமல் நடக்கிறது?
இளிச்சவாயர்கள் யாராவது புகார் கொடுக்கட்டும் என்று பார்த்துக்கொண்டிருக்கிறார்கள்?
இதிலிருந்து ஒன்று தெரிவது என்னவென்றால் லஞ்சமில்லாமல் வாழமுடியாத நிலையை உருவாக்கிவிட்டால் அதைத் தாண்டி இந்த முட்டாள் மக்களின் அறிவு என்றும் விழிப்படையாது என்பதே!
'இந்தியன்' தாத்தா போல் செய்தால் தான் இந்தப் பிரச்சனை தீரும் என்று நினைக்கின்றேன்...
ReplyDeleteதனிநபர்களால் அது முடியாது நண்பரே! அது சினிமாவில் நடக்கலாம். நிஜத்தில் நடக்காது. சரியான திட்டவட்டமான கொள்கையின்கீழ் ஒரு ஊழலற்ற அரசியல் அமைப்பு உருவாகவேண்டும்!
ReplyDelete