ss

Saturday, September 15, 2012

வானியலும் சோதிடமும் ( 2 )


வானியலில் முன்னோர் பங்கு

அந்தந்தக்கால அறிவியல் முன்னேற்றத்துக்குத் தக்கதாகத்தான் அவர்களின் அறிவியல்றீதியான ஆய்வுகளும் இருக்கமுடியும். 

நமது நாட்டிலும் முற்காலத்திலேயே அறிஞர்கள் ஏராளமானவர் இருந்திருக்கிறார்கள். 

அவர்களில் வானியல் அறிஞர்களும் முக்கியப் பங்கு வகிக்கிறார்கள்.

அவர்களின் சிந்தனைத் திறனும் அந்தக் காலத்துக்கு ஏற்ற முறையில் இருந்திருக்கிறது. 

வானியலும் அப்படியே! 

அக்கால நிலைமைகளில் வானில் தெரிந்த வான்காட்சிகளை எப்படி புரிந்துகொண்டார்களோ அதை அடிப்படையாக வைத்துத்தான் காலத்தைக் கணக்கிட்டார்கள்! 

காலத்தைக் கணக்கிடவும் திசையைக் கணக்கிடவும்தான் வான் காட்சிகளைப் பயன்படுத்திக்கொண்டார்களே அல்லாமல் வானில் உள்ள அத்தனையையும் அவை பற்றிய உண்மையான தகவல்களையோ தகுதிகளை வைத்தோ அல்ல!

அந்தக் கால அறிவைக்கொண்டு நட்சத்திரங்களுக்கும் கிரகங்களுக்கும் உள்ள வேறுபாட்டைக் கண்டறிந்தார்கள்.

அவை நகரும் கால அளவுகளைக் கண்டறிந்தார்கள்.

அதனால் திசைகளையும் காலத்தையும் பருவங்களையும் சரியாக மதிப்பிட முடிந்தது.

அப்போதைய தேவைக்கு அந்த அறிஞர்களின் கண்டுபிடிப்புகள் மகத்தான உதவி செய்திருக்கின்றன.

ஆனால் வான ஆராய்ச்சியுடன் எப்போதும் சக பயணம் செய்யும் சோதிடப் புரட்டுகள் அப்போதே இருந்திருக்கின்றன. 

இவ்வளவு அறிவியல் வளர்ந்துள்ள நவீன காலத்திலும் அறிவியலால் கண்டறியப்பட்ட வானியல் விபரங்களை எல்லாம் சோதிடத்தால் கண்டரியப்பட்டதாகச் சொல்லவும் அதை நம்பவும் மக்கள் தயாராக இருக்கும்போது அக்கால நிலைகளில் சொல்லவேண்டுமா?

அதனால் அப்போதும் வானியலையும் சோதிடத்தையும் கலந்துதான் மக்களை ஏமாற்றி வந்துள்ளார்கள்!

ஆதாவது வாலியல் என்ற அவலையும் சோதிடம் என்ற உமியையும் கலந்து  ஊதி ஊதி சோதிடர்கள் சாப்பிட்டு வந்துள்ளார்கள்!

அது இன்றுவரை நீடிக்கிறது!

இன்றும் சூரியனையும் சந்திரனையும் கிரகங்கள் என்று சொல்லும் கதைகளைப் படித்தவர்களே நம்புகிறார்கள் அல்லவா?

ஆனால் நவீன அறிவியல் வளர்ந்து வான் காட்சிகளின் உண்மையான விபரங்கள் என்ன அதில் உள்ள ஒவ்வொன்றின் தூரம், கால அளவு, பருமன், வடிவம் போன்ற பல விபரங்கள் என்ன என்பதெல்லாம்   துல்லியமாக அறிந்த பின்னரும் பழைய சோதிடம் என்னும் மூட நம்பிக்கையை மிகவும் சக்திமிக்க ஒன்றாகக் காட்டி மக்களை முட்டாளடித்துக்கொண்டுள்ளார்கள்! 

அவர்கள் விட்ட கதைகளில் ராகுவும் கேதுவும் அடங்கும்!

2 comments:

  1. சோதிடம் - இன்னும் பல பேர்கள் நம்புவதும், அதன்படி நடக்கவில்லை என்றால் வெறுப்பதும் நடைமுறையாகி விட்டது... அவரவர், உண்மை என்னவென்று அவர்களாகவே உணர வேண்டும்... நன்றி ஐயா...

    ReplyDelete
  2. உண்மை நண்பரே! ஆனால் உண்மையை உணர்ந்தவர்கள் தவறுகளுடன் ஒத்துப்போக கூடாதல்லவா?....

    ReplyDelete