ss

Wednesday, September 19, 2012

கூடங்குளமும் நானும் ( 5 )


அனைத்துக்கும் ஆபத்து!

இந்தியாவில் அதுவும் கூடங்குளத்தில் நடக்கும் போராட்டத்தையும் அரசின் தெளிவில்லாத அணுகுமுறையையும் வைத்து அணுசக்திப் பயன்பாட்டின் நன்மைதீமைகள் உலகம் முழுவதும் விவாதிக்கப்படவில்லை நண்பர்களே! 

கிரீன்பீஸ் இயக்கம் எப்போதும் இதை எதிர்த்தே வந்துள்ளது. 

என்போன்றவர்கள் இந்தியாவில் நடக்கும் கூத்துக்களைமட்டும் வைத்து எண்ணங்களை உருவாக்கிக்கொள்பவர்கள் அல்ல! 

அதில் உலகளாவிய இயற்கை மற்றும் எதிர்கால நலன் அடங்கியிருக்கும்.

இன்றைக்கு இருக்கும் அணுசக்திப் பயன்பாடே உலகில் இந்த அளவு என்றால் இன்னும் வருங்காலத்தில் எப்படி இருக்கும் என்று யோசித்தால் 
எதிர்கால உலகம் எந்தத் திசையில் செல்கிறதென்று தெரியும்.

இப்போதுள்ள அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அடிப்படைகளே உலக இயற்கை வழங்களை ஒரு வழி செய்தாகிவிட்டது. இன்னும் அனைத்துத் துறைகளிலும் அணு சக்திப் பயன்பாடும் அணுக கழிவுகள் பிரச்சினையும் சேர்ந்துகொண்டால் இயற்கை என்னவாகும் என்று யோசிக்கவேண்டும்.

விபத்துமட்டும் பிரச்சினை அல்ல. அதன் பயன்பாடே எதிர்கால உலகுக்குப் பிரச்சினை! 

வளர்ந்த நாடுகள் செய்யும் அத்தனையும் சரியானதல்ல! உலக சுற்றுச் சூழல் கேட்டுக்கு அவர்களின் பங்கு அதிகமல்லவா?

இப்போதிருந்து அறிவியல்ரீதியான உலக நடவடிக்கைகள் ஒவ்வொன்றும் இயற்கையைப் பேணி வளர்க்கும் திசையில் செல்லுவதே நல்லது! 

இயற்கையை மேலும் மேலும் சீர்குலைக்கும் நடவடிக்கைகள் ஒவ்வொன்றும் எதிர்கால உயிரின வாழ்க்கையைக் கேள்விக்குறி ஆக்குவது என்ற உண்மை உணரப்படவேண்டும்.

விவாதத்தில் விட்டுக்கொடுக்காமல் பிடிவாதமாக பேசும் விஷயமல்ல இது! உண்மையான ஆபத்தை உணரவேண்டும். கூடங்குளம் மட்டும் முக்கியக் காரணம் அல்ல.

அணுசக்திப் பயன்பாடு தவிற்க முடியாததானால் அது உலகில் மனித சமுதாய ஒட்டுமொத்த அழிவை வரவேற்பதாகத்தான் கொள்ளவேண்டும்!

தவறுகள் தவிர்க்கமுடியாததாகும்போது  அழிவும் தவிர்க்கமுடியாது! 

சாதாரணமான நிலக்கரி, பெட்ரோலியப் பொருட்களின் இயக்கத்தை அடிப்படையாக வைத்தே உலகை உண்டு இல்லை என்று ஆக்கமுடிந்திருக்கிறது.

உண்ணும உணவையும் குடிக்கும் நீரையும் சுவாசிக்கும் காற்றையும் நஞ்சாக்க முடிந்திருக்கிறது! 

ஆறுகளைச் சாக்கடைகளாகவும் ஏறி குளங்களை விஷநீர்த் தொட்டிகளாகவும்  ஆக்க முடிந்திருக்கிறது.

புவிவெப்பமாதல்,  துருவப்பனி குறைந்துகொண்டு வருதல், ஓசோன் மண்டல ஓட்டை வரை உயிரின வாழ்வை ஆபத்தில் விட்டுள்ளது. 

அத்துடன் அணுசக்திப் பயன்பாடும் சேர்ந்துகொண்டால் அந்தப் பாதகங்களில் இருந்து மீளமுடியும் என்றால் ஏற்றுக்கொள்ளலாம். 

அதற்கு மாறாக அதிகரிக்கவும் முடிவான அழிவிற்கும்தான் அழைத்துச் செல்லப்போகிறது!

இந்தத் தலைமுறையில் எப்படியாவது வாழ்ந்தால்போதும் அடுத்த தலைமுறைகள் எக்கேடுகேட்டுப் போகட்டும் என்ற குடிகார, சூதாடிகளின் மனோபாவம் ஆள்வோருக்கும் அறிவாளிகளுக்கும் ஏற்பட்டுவிட்டால் உலக மக்களைக் காப்பது யார்? 

இதுதான் இன்று நல்லோர்முன் உள்ள கேள்வி!

3 comments:

 1. உண்மையான கருத்துக்கள்... இவையெல்லாம் தடுப்பது யார் என்பது தான் தெரியவில்லை... விடையில்லா கேள்வியாக போய் விடுமோ என்று மனம் வருத்தப்படுகிறது...

  ReplyDelete
 2. போபால் கழிவை அகற்ற ஒப்பந்தம் செய்திருந்த அயல்நாட்டு நிறுவனம் ஒன்று ஒப்பந்தத்திலிருந்து விலகிவிட்டதாக அறிவித்த செய்தி நேற்று வெளியானது. அணுக்கழிவு நீக்கம் என்பது எவ்வளவு நடைமுறைப் பிரச்சினைகளை உள்ளடக்கியது, எவ்வளவு செலவு வைக்கக்கூடியது என்பதெல்லாம் தெரிந்திருந்தும், மாற்று வழிகளில் மின்சாரம் பெறுவதை முன்னுரிமையாக்காமல் இன்னும் அணுசக்தி என்றே அரசு செயல்படுவது மிகுந்த கவலையை ஏற்படுத்துகிறது...

  சிவா,
  தெற்கு சூடான்,
  ஆஃப்ரிக்கா...

  nirmalshiva1968@gmail.com

  ReplyDelete
 3. நன்றி! உங்களுடைய உணர்வுகளை பகிர்ந்துகொள்கிறேன் நண்பர்களே! இன்று அதிகாரம் தீயவர்களின் கைகளில் இருப்பதால் நல்லவர்கள் மனக்குமுறலை வெளிப்படுத்தமட்டுமே முடிகிறது.....

  காலம் மாறும் என்று நம்பிக்கை கொள்வோம்!

  ReplyDelete