அறிவுத் தெளிவு
உலகைப் பற்றியும் வாழ்க்கையைப் பற்றியும் நமது உள்ளத்தில் எழும் அனைத்து ஐயங்களுக்கும் விடை உண்டு!
மூடநம்பிக்கை என்ற குடுக்கைக்குள் நுழைந்துவிட்டால் மட்டுமே அறிவுத் தெளிவு பெற முடியாது!
நமது சிந்தனை சுதந்திரமாக இருக்கும்வரை தெளிவான பாதையில் முரணின்றிச் சென்றுகொண்டிருப்போம்!
=======================================================================
----------------------------------------------------------------------------------------------------------

பண்டமும் பாத்திரமும்
பாத்திரம் சுத்தமாக இருந்து அதில் வைக்கப்படும் பொருள் அசுத்தமாக இருந்தால் அதனால் பயன் இல்லை.
அதேபோல் வைக்கப்படும் பொருள் சுத்தமாக இருந்து அதை வைக்கப்பயன்படும் பாத்திரம் அசுத்தமாக இருந்தாலும் பயன்இல்லை.
அப்பொருள் உண்ணப்பயன்பட வேண்டுமெனில் பொருளும் பாத்திரமும் சுத்தமாக இருக்கவேண்டும்.
அதுபோல ஒருவர் எவ்வளவு நல்ல பண்புள்ளவராய் இருப்பினும் அவர் உடல் நலம் பேணாது நோயாளியாகவோ பலவீனமானவராக இருப்பின் பயன் இல்லை. உடல்நலம் மிக்கவராகவும் பலவானாகவும் ஒருவர் இருப்பினும் அவரிடம் நற்பண்புகள் இல்லாவிடின் அதனாலும் பயன்இல்லை.
ஒருவருடைய வாழ்வு பயன்மிக்கதாகவும் போற்றத் தகுந்ததாகவும் விளங்க வேண்டுமென்றால் அவரது உடல் நலம் நல்ல பயிற்சி, பழக்கங்கள் மூலமும் - நல்ல பண்புகள் கல்வி, நல்லோர் நட்பு இவற்றின் மூலமும் பேணி வளர்க்கப்படவேண்டும்.
========================================================================
-----------------------------------------------------------------------------------------------------------
=======================================================================
நல்லதொரு பகிர்வு... நன்றி...
ReplyDelete