பண்டமும் பாத்திரமும்
நல்ல செய்திகளைச் சொல்லும்போதுகூட மற்றவர்க்கு மட்டும் சொல்வதுபோல் - ங்கள்! - என்று முடிக்கிறார்கள் .
அதில் உள்ள கருத்தைவிட ஊட்டுகின்ற எரிச்சல்தான் அதிகம் என்பதை நிறையப்பேர் உணர்வதில்லை!
அதே கருத்தை வோம் - என்ற எழுத்துக்களால் முடித்தால் சொல்பவர்மேல் மரியாதை கூடும்.
படிப்பவர் மனத்தில் ஆழமாக ஊடுருவிச் செல்லும்!
காரணம் முன்னது சொல்பவரிடமிருந்து கேட்பவரை அன்னியப்படுத்துகிறது! பின்னது ஒன்றுபடுத்துகிறது!
ஒரு கருத்தைவிட அதைச் சொல்லும் முறையின் சிறப்பு முக்கியமானது!
நல்ல பண்டத்தை வைக்கும் பாத்திரமும் நல்லதாக இருக்கவேண்டும்!
பாத்திரம் சரியில்லாவிட்டால் அதில் வைக்கப்படும் பண்டமும் வீணாகிவிடும்!
அதுபோல சொல்லப்படும் நல்ல செய்தியும் உரிய முறையில் சொல்லப்படாவிட்டால் அந்த நல்ல கருத்தும் மதிப்புப் பெறாமல் போய்விடும்!
அருமை... நன்றி... நல்ல கருத்துக்களை அறிந்து கொள்வோம்...
ReplyDeleteநன்றி நண்பரே!
ReplyDelete