கரையான்!
தவறிப்போய் ஈரமான செம்மண்பாங்கான இடத்தில் ஒருமணி நேரத்துக்கு மேல் அசையாமல் உட்கார்ந்திருந்தால் நாம் கட்டியிருக்கும் துணிகளைக் கூடத் தின்று விடும்!
இப்போது அது உணவாக எடுத்துக்கொண்டிருப்பது என்ன தெரியுமா?
ஒரு பெரிய மூங்கில்கூடை! சாடு என்றும் சொல்வார்கள்!
அது பழையதாகிப்போனதால் மரத்தடியில் போட்டிருந்தோம்.
கரையானுக்கு உணவாகவும் தங்குமிடமாகவும் ஆகிவிட்டது!
அதில் ஒன்றைக் கூர்ந்து கவனிக்க வேண்டும்.
கூடையின் விளிம்பு வலுவுடன் இருக்க பனைநாரால் கட்டுவதற்குப் பதிலாக பிளாஸ்டிக் நாடாவால் இருக்கப்பட்டிருந்ததால் கரையான் அதைத் தொடவில்லை!
இதன் மூலம் அது நமக்கு ஒரு பாடம் கற்றுத் தருகிறது!
இற்று மக்கிப்போகக்கூடிய பொருள் ஒவ்வொன்றும் கரையானைப்போன்ற ,அதையும்விடச் சிறிய நுண்ணுயிர்களால் உண்ணப்பட்டு மீண்டும் மீண்டும் மண்ணை வளப்படுத்தும்.
ஆனால் நுண்ணுயிர்களால் உண்ணமுடியாத பிளாஸ்டிக் அல்லது வேறுபொருட்கலாலான எதுவும் நாம் வாழும் உலகுக்கு எந்த நன்மையையும் செய்யாது. மாறாக நிரந்தரமான தீங்கை விளைவிக்கும் என்பதே!
சாதாரணக் கூடைக்குக் கட்டப்படும் நாடாவுக்கு இயற்கைக்கு எதிரான இத்தனை இவ்வளவு சக்தி இருக்குமல் அதனுடன் ஒப்பிடமுடியாத ஆபத்தான அணுசக்தியும் அணுக்கழிவுகளும் இயற்கையை எப்படி விட்டுவைக்கும்?
No comments:
Post a Comment