ஆன்மிகமும் அறிவுடைமையும்
ஆன்மிக வாதிகளுக்கு ஒரு அன்பு வேண்டுகோள்!
மூட நம்பிக்கைகளுக்கு எதிரான போராட்டத்தை ஏன் ஆன்மிகவாதிகள் செய்யக்கூடாது?
அப்படிச் செய்வதாக இருந்தால் நாத்திகவாதி ஒத்தை ஆளுக்கு வேலை இருக்காதே!
ஆன்மிகவாதிகள் சிந்திக்கவேண்டும்!
யார் தாங்கள் ஏற்றுக்கொண்ட ஆன்மிக நெறிகளைப் பின்பற்றி நடக்கிறார்களோ அவர்கள்தான் ஆன்மிகவாதிகள்!
அது எல்லாமதத்துக்கும் பொருந்தும்!
அந்த வகையில் உண்மையான ஆன்மிக வாதிகள் மூடநம்பிக்கையை எதிர்க்கத்தான் வேண்டும் இல்லாவிட்டால் மூடநம்பிக்கைதான் ஆன்மிகம் என்று ஆகிவிடும!
யார்மூடநம்பிக்கைகளை எதிர்கிறார்களோ அவர்கள்தான் உண்மையான ஆன்மிகவாதிகள்! மூடநம்பிக்கைகளை ஆதரிப்பவர்கள் வேடதாரிகளே!
உலகையும் வாழ்வையும் சரியான முறையில் புரிந்து சரியான முறையில் வாழ்வதுதான் உண்மையான ஆன்மிகம்!
அதை உணர்வதே உண்மையான அறிவுடைமை! உண்மையான ஆன்மிகம் என்பது அறிவியல் அடிப்படைகளின் மாற்றுப் பெயராகவே இருக்கும்!
பழமும் சர்க்கரையும் கல்கண்டும் தேனும் பேரீச்சம்பழமும்,நெய்யும் சேர்த்தால் அதற்கு பஞ்சாமிர்தம் என்று பெயர் வைத்தும் உண்ணலாம்.
நல்ல தின்பண்டம் என்று சொல்லியும் உண்ணலாம்.
அதன் பெயர் முக்கியமல்ல!
அதில் அடங்கியுள்ள பொருட்களே முக்கியம்!
விஷத்துக்கு அமிர்தம் என்று பெயர் வைத்து உண்டாலும் அது கொல்லும்!
அமிர்தத்துக்கு விஷம் என்று பெயர்வைத்தாலும் அது நன்மைதான் செய்யும்!
அதுபோல நாம் ஆன்மிகம் என்று சொன்னாலும் சரி அறிவுடைமை என்று சொன்னாலும் சரி தவறு கிடையாது. அதன்மூலம் உலக மக்களுக்கு என்ன வழிகாட்டுகிறோம் என்பதே முக்கியம்!
நன்றாக முடித்துள்ளீர்கள் ஐயா...
ReplyDeleteநன்றி...