இது என்ன நாடு?
தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா ஆகிய நான்கு மாநிலங்களில் ஒன்றிலாவது அனைவரும் நல்லவர்களாகவோ அனைவரும் கெட்டவர்களாகவோ இல்லை!
எல்லா மாநிலங்களிலும் எல்லாவிதமான மக்களும் வாழ்கிறார்கள்!
அப்படியிருக்க, நதிநீர் அல்லது மாநிலங்களுக்கு இடையேயான பிரச்சினைகளில் மட்டும் எப்படி எல்லோருமே மாநில வாரியாக ஒன்று நல்லவர்கள் ஆகிறார்கள் அல்லது கெட்டவர்கள் ஆகிறார்கள்!
காலிகளில் இருந்து காருண்யமூர்த்திகள் வரை எப்படி ஒரே நியாய உணர்வு அல்லது அநியாய உணர்வுக்கு ஆளாகிறார்கள்?
எங்கோ உதைக்கிறது!
ஒரு மாநிலத்து நியாயவான்கள் ஏன் அடுத்த மாநிலத்து நியாயத்தை ஒத்துக்கொள்ள மறுக்கிறார்கள்?
அனைவருக்கும் பொதுவான ஒரு நியாயம் இல்லையா?
இது என்ன நாடு?
No comments:
Post a Comment