அரசியல் அக்கரை
ஒவ்வொரு மனிதரும் தான் வாழும் சமுதாய நலனில் அக்கறை கொண்டிருக்கவேண்டும்!
ஒட்டுமொத்த சமுதாயமும் தனது உறுப்புக்களாய் வாழும் ஒவ்வொரு மனிதரின் நலனிலும் அக்கரை கொள்ள வேண்டும்.
அதுதான் ஒரு உயர்ந்த சமூக அமைப்பாக இருக்கமுடியும்.
அத்தகைய மேலான திசையில் மக்களை வழிநடத்திச் செல்லக்கூடிய விதத்தில் சட்டங்களும் நிர்வாக அமைப்புகளும் இருக்கவேண்டும்.
அந்த நிலையை எட்டுவதையே ஒவ்வொரு அரசியல் கட்சியும் நோக்கமாகக் கொண்டிருக்க வேண்டும்.
அதில் மிகச் சிறந்த கோட்பாடுகளைக் கொண்டிருக்கும் ஒரு நம்பகமான சக்தியை,அமைப்பைத் தங்கள் வழிகாட்டியாக மக்கள் ஏற்றுக்கொண்டு சரியல்லாதவற்றை ஒதுக்கித் தள்ளவேண்டும்.
அப்போதுதான் ஒரு நாட்டில் ஆரோக்கியமான சிறந்த அரசியல் உருவாகும்.
அத்தகைய உருவாகும் அரசுகள்தான் மக்கள் நலனில்மட்டும் அக்கரை கொள்ளும்.
அத்தகைய அரசுகளின் கீழ்தான் மக்கள் மக்களாய் வாழமுடியும்!
No comments:
Post a Comment