யார் குற்றவாளி?
ஒவ்வொரு மக்கள்விரோத அரசுகளும் நியாயமான போராட்டங்களை இழிவுபடுத்த வெளிநாட்டுப் பணம் வருகிறது என்று சொல்வது வழக்கம்!
ஆனால் இதன்மூலம் ஒன்றை அவர்கள் ஒப்புக்கொள்கிறார்கள் என்பதை அவர்கள் அறிவது இல்லை!
ஆதாவது சட்டவிரோதமாக வெளிநாட்டுப் பணம் வருவது குற்றம்.
அதைவிடப் பெரிய குற்றம் அப்படி வருகிறது என்று அறிந்தும் அதைத் தடுக்கும் அதிகாரம் இருந்தும் தடுக்காமல் இருப்பது!
அப்படி வருவது உண்மையாக இருந்தால் இப்படி ஒப்பாரி வைப்பதைவிட அந்தமாதிரி நபர்களைக் கைது செய்து சிறையில் அடைத்திருக்கலாமே?
ஏன் செய்யவில்லை?
முகத்தில் சாக்கடையை அப்பிக்கொண்டு இருப்பவன் அடுத்தவன் காலில் அழுக்கு இருப்பதாகக் கதைவிடக்கூடாது!.
வெளிநாட்டுப்பணம் வருகிறது என்று தெரிந்தும் அதைத் தடுக்கும் அதிகாரம் கைகளில் இருந்தும் தடுக்காத குற்றவாளிகளைக் கைது செய்து தெருக்களில் இழுத்துவரவேண்டும்!
நான் கூடங்குளம் போராளி அல்ல.
அணுசக்திப் பயன்பாடு என்பது உலகம் முழுவதும் ஒழிக்கப்படவேண்டியது. அதன் ஒரு பகுதியாகத்தான் கூடன்குளத்தையும் என்போன்றவர்கள் பார்க்கிறார்கள்.
அந்தப் போராட்டத்தில் யார்யார் கலந்து கொள்கிறார்கள் என்பது முக்கியமல்ல. எல்லோரும் இந்நாட்டு மக்களே!
அவர்களுக்கு வெளிநாட்டில் இருந்து பணம் வருகிறது என்றால் அது தவறுதான் .
அனால் அப்படி வரும் பட்சத்தில் அதைத் தடுக்கவேண்டிய அதிகாரம் கையில் உள்ளவர்கள் தடுக்காமல் குழாயடியில் பெண்கள் பேசிக்கொள்வதைப்போல் பேசுவது நம்பகமானது அல்ல.
அப்படிப் பேசுவதே அவர்கள் சொல்வது பொய் என நிரூபிக்கிறது. அல்லது அவர்களையும் குற்றவாளிகளாக்குகிறது!
அத்தகைய குற்றவாளிகளைத் தேசபக்தர்கள்போலவும் போராடுபவர்களைக் கைக்கூலிகள்போலவும் நியாயத்தின் பார்வையில் நினைக்கமுடியாது!
No comments:
Post a Comment