தொழிலாளர் பிரச்சினை
இப்போதெல்லாம் வறண்ட காலத்திலேயே விவசாய வேலைகளுக்கு ஆள் கிடைப்பது குதிரைக்கொம்பாகிவிட்டது!
மழைபெய்து நீர்வசதி அதிகரிக்கும்போது என்ன செய்வது என்று நினைத்தால் ஆர்வமே போய்விடுகிறது!
அதற்குக்காரணம் உழைப்பாளிகளை விவசாயவேலைகளை விட்டுத் துரத்திய கொடுமைதான்!
அவசியமான தொழில்களிலும் விவசாயத் தொழிலும் திட்டமிட்டு மனித உழைப்பைப் பயன்படுத்துவதற்குப் பதிலாக ஊதாரித்தனமான செலவுகளில் மக்களையும் தொழில்களையும் தொழிலாளர்களையும் இழுத்துவிட்ட அரசுகளின் பொருளாதாரம்தான் காரணம்.
அதுதான் இன்று மின்சாரம் உட்பட அனைத்தையும் உறிஞ்சி வருகிறது!
சரியான திட்டமிடல் இல்லாமல் சூறையாடும் பொருளாதாரம் உள்ள ஒரு நாட்டில் இதுதான் நேரும்.
சிதறுதேங்காய்க்கு ஓடும் சிறுவர்போல வாய்ப்புகளுக்குப் பின்னால் ஓடுவதுதான் வாழ்க்கைமுறை என்று ஆகிவிட்டது!
இதில் மிகவும் பாதிக்கப்பட்டவன் விவசாயி!
No comments:
Post a Comment