ss

Monday, October 1, 2012

எனது மொழி ( 75 )

நல்லோர் தீயோர்

இரண்டு தீயவர்கள் வேறுபட்டிருப்பது இயல்பானதே! 

காரணம் அவர்களிடம் ஒத்தபண்புகள் இருக்காது! 

ஒரு நல்லவர்,ஒரு தீயவர் இவர்கள் வேருபட்டிருப்பதும் இயல்பானதே! 

காரணம் ஒருவருடைய நற்பண்புகள் மற்றவரிடம் இருக்காது.

ஆனால் இரு நல்லபண்பாளர்கள் வேறுபட்டிருப்பது அநியாயமானது! 

காரணம் அதனால் பிறருக்குக் கிடைக்கும் அநேக நன்மைகள் கிடைக்காமல் போகும் 

அது மட்டுமல்ல சமூகத்திலும் தீயவர்களின் சக்தி மேலோங்கி இருப்பதற்கும் நல்லோரின் சக்தி பயனின்றிப் போவதற்கும் அது காரணமாகிறது! 

நல்லோர் இதை உணர்ந்து ஒன்று படுவார்களா! 


No comments:

Post a Comment