ss

Monday, October 1, 2012

எனது மொழி ( 77 )

ஏன் இப்படிக் கூடாது?

நமது நாட்டில் இப்போது கார்களின் எண்ணிக்கையும் கட்டிடங்களின் எண்ணிக்கையும் கூடி வருகிறது!

இதில் செலவு செய்யப்படும் பணம் கணக்கு வழக்கின்றி புறழ்கிறது.

இதனால் நாட்டின் ஒட்டுமொத்தமான மக்களுக்கு நேரடியாக எந்தப் பயனும் இல்லை!

ஒரு வாகனமாகட்டும் வீடாகட்டும் தேவைக்காக மட்டும் இருக்கவேண்டும்.

ஆனால் இரண்டு பேருக்குக்கூடப் போதாத இடத்தில் பொந்துதுகளில் பத்துப்பேர் வாழ்வதையும் ஐம்பதுபேர் வாழக்கூடிய இடத்தில் ஐந்துபேர் வாழ்வதையும் பார்க்கிறோம்.

நகரப்பெருந்துகளில் கசக்கிப் பிழியப்படும் சாதாரண மக்கள் ஒருபுறம். ஒரே வீட்டில் ஆளுக்கு ஒரு கார் என்று ஊதாரித்தனமாக வைத்திருப்பவர்கள் ஒருபுறம்.

இதன் சுமை அனைத்து மக்களையும் பாதிக்கிறது! இதனால் ஏற்படும் எரிபொருள் செலவும் மின்சார செலவும் அளவில்லாதது.

இதை ஒழுங்கு படுத்தினாலே பற்றாக்குறைப் பொருளாதாரத்தையும் எரிபொருளையும் மின்சாரத்தையும் போதுமானதாக மாற்றமுடியும்!

வாகனங்களுக்கும் வீடுகளுக்கும் உச்சவரம்பு விதிக்கவேண்டும்.

அதற்கு மேல் கூடுதலாகக்  குறிப்பிட்ட விலையுள்ள கார் வைத்திருக்கவேண்டுமானால் குறிப்பிட்ட சதுர அடி வீடு குறிப்பிட்ட மதிப்பில் வைத்திருக்கவேண்டுமானால்  அதற்குத் தகுந்த அளவு கூடுதல் வரி விதிக்கவேண்டும்.

அது கடுமையாக இருக்கவேண்டும்.

அப்போது வாகனங்களும் வீடுகளும் தேவையான அளவுக்குள் கட்டுப்படுத்தப்படும்.

ஆடம்பரப் பிரியர்கள் எல்லாம் அதியாவசியத்தேவைக்குள் முடக்கப் படுவார்கள்.

மீதப்படும் பொருளாதாரமும் சக்தி வளங்களும் ஆக்கரீதியாகப் பயன்படும்.

அது நூறு அணுமின்சார நிலையங்களைவிட நாட்டு மக்களுக்கு அதிகப் பயனைக் கொடுக்கும்!

இதன்மூலம் விளைநிலங்கள் வீணாக்கப்படுவதும் சுற்றுச் சூழல் அவலங்களும் வெகுவாகத் தடுக்கப்படும்.

இந்தக் கண்ணோட்டத்தில் அரசுகள் சிந்திக்குமா?....


2 comments:

  1. சிந்திக்க வைக்கும் கருத்துக்கள்...

    ReplyDelete
  2. நன்றி நண்பர் தனபாலன்!

    ReplyDelete