காந்திஜி
காந்திஜியும் ஒரு மனிதரே!
அவரிடமும் குறைகள் இருந்தன!
அவர் ஒரு மாமனிதர் என்பதில் சந்தேகமே இல்லை!
ஆனால் எந்த ஒருவரையும் நமக்கு எட்டாத உயரத்தில் வைத்துப் பார்ப்பது உயர்ந்த எண்ணங்களை வளர்க்காது!
அடிமைத் தனமான உணர்வுகளையே வளர்க்கும்!
நாம் மதிக்கும் ஒருவரை ,நம்மைவிடக் கூடுதலான நல்ல பண்புகள் நிறைந்த ஒருவரை அவர் யாராக இருந்தாலும் நமது வழிகாட்டியாகக் கொள்ளலாம்!
அவர் நம்மிலும் சிறப்பானவராக இருக்கும்வரைதான் அவர் நமக்கு வழிகாட்டியாக இருக்க முடியும்!
என்றென்றும் ஒருவர் மற்றவர்களைவிட உயர்ந்தவராகவே இருக்க முடியாது!
அந்த இடத்துக்கு யார் வேண்டுமானாலும் வரலாம்!
நாமும் வரலாம்! அதைத் தாண்டியும் செல்லலாம்!
அவரை விட உயர்ந்தவர்கள் முன்பும் இருந்தார்கள். இப்போதும் இருக்கிறார்கள்.
ஒருவர்தான் என்றென்றும் உயர்ந்தவர் என நினைப்பது மற்ற நல்லவர் அனைவரையும் அவமதிக்கும் பண்பாகும்!
-----------------------------------------------------------------------------------------------------------
பகத்சிங்கைப் பின்பற்றுபவர்கள் இருக்கிறார்கள். நேதாஜியைப் பின்பற்றுபவர்கள் இருக்கிறார்கள். பாரதியைப் பின்பற்றுபவர்கள் இருக்கிறார்கள்.காந்தியைப் பின்பற்றுபவர்கள் ஏன் இல்லாமல் போனார்கள்?
---------------------------------------------------------------------------------------------------------
காந்தியின் தியாகத்தை மதிக்கிறேன்! காந்தியின் சுதேசி இயக்கத்தை மதிக்கிறேன். அவருடைய தலைமையில் மக்கள் ஒன்றுபட்டதை மதிக்கிறேன். அதற்கு விலையாக அவருடைய தவறுகளை ஏற்றுக்கொள்வதையோ அவர்தான் அனைவரையும் விட உயர்ந்தவர் என்பதையோ அவரைவிட்டால் நாட்டுக்குக் கதிமோட்சம் இல்லை என்பதையோ ஏற்றுக்கொள்வதை நினைத்துக்கூடப் பார்க்கமுடியாது! அது ஒவ்வொரு தன்மானமுள்ள குடிமகனையும் அவமதிக்கும் செயல் ஆகும்!
அத்தகைய இழிவான குணம்தான் இன்று நமது நாட்டை இவ்வளவு கேவலமான நிலைக்கு இட்டுச் சென்றுள்ளது! தன்மானமுள்ள ஒவ்வொருவரும் வெட்கப்படவேண்டும்!
-------------------------------------------------------------------------------------------------------
நமது நாட்டுப் பிரச்சினைகள் அனைத்துக்கும் தீர்வு நிச்சயம் இருக்கிறது நண்பர்களே! அதுவும் நம்மிடம்தான் இருக்கிறது! பிறருடைய சுதந்திரத்தில் தலையிடாமலும் நமது சுதந்திரத்தை விட்டுக் கொடுக்காமலும் இருக்க ஒவ்வொருவரும் சிந்திக்கத் துவங்கினால் அதுதான் அனைத்துக்குமான தீர்வாக இருக்கும்!
--------------------------------------------------------------------------------------------------------

/// அவர் நம்மிலும் சிறப்பானவராக இருக்கும் வரை தான் அவர் நமக்கு வழிகாட்டியாக இருக்க முடியும்! ///
ReplyDeleteவித்தியாசமான உண்மை சிந்தனைகள் ஐயா...
மிக்க நன்றி...
நன்றி நண்பரே!
ReplyDelete