சித்தர்கள்
நண்பர்களே!
என்னைப் பொறுத்த வரையில் ஏன் கருத்து இதுவே:
சித்தர்கள் காலத்தில் அவர்கள் அறிந்திருந்த உலோகங்களையும் வேதிப் பொருட்களையும் மூலிகைகளையும் தகுந்த முறையில் சேர்த்துப் பற்பல ஆராய்ச்சிகளைச் செய்துள்ளனர்.
அதன்மூலம் மக்களுக்கு அளப்பரிய சேவை செய்துள்ளனர்.
அப்போதைய ஆராய்ச்சிகளை அடிப்படையாகக்கொண்ட மாற்றங்களையும் செய்முறைகளையும் ரசவாதம் என்று குறிப்பிட்டுள்ளனர்.
ரசம் என்பதை அடிப்படைப் பொருட்களாகவும் ரசவாதம் என்பதை செய்முறை என்பதாகவும் கொள்ளலாம்.
கிடைத்த விபரங்களில் இருந்து இப்படித்தான் புரிந்துகொள்ளவேண்டும் என்றும் நினைக்கிறேன்.
அதுவல்லாமல் சித்தர்களின் பங்களிப்பாக மருத்துவம்,மொழி,தத்துவம் போன்ற பன்முகப் பண்புகள் நிலவுகின்றன.
அவற்றையெல்லாம் கண்டறிவதோடு கிடைத்த விபரங்களில் இருந்து கிடைக்காமல் மறைந்துபோன விபரங்களையும் அவர்களின் கண்ணோட்டத்தில் நவீன அறிவியலையும் பயன்படுத்திக் கண்டறிய வேண்டும்.
அதுதான் நாம் அவர்களுக்குச் செய்யும் சிறப்பும் தற்கால மக்களுக்குப் பயன்படும் முறையில் சித்தர்களின் பங்களிப்பைக் கொண்டுசேர்க்கும் முறையும் ஆகும்!
அதைவிட்டு அவர்களைப் பூஜிப்பதும் புகழ்பாடுவதும் மட்டும் அவர்களைப் பற்றிய ஞானம் ஆகிவிடாது.
/// நவீன அறிவியலையும் பயன்படுத்திக் கண்டறிய வேண்டும். ///
ReplyDeleteஉண்மை தான் ஐயா...
நன்றி நண்பரே!
ReplyDelete