ss

Saturday, October 6, 2012

எனது மொழி ( 80 )

வணக்கத்தின் பொருள் 

ஒருவர் மற்றோருவருக்கு வணக்கம் தெரிவிக்கும் முறை பல பொருள்களை உள்ளடக்கியது!

ஒருவர் தன்னை விட மூத்த பண்பாளரை வணங்கினால் அதற்குப் பணிவு என்று பொருள்!

தன்னைவிட மூத்த ஆனால் பண்புகுறைந்தவரை வணங்கினால் அது பயம் என்பது பொருள்!

தன்னைவிட மூத்த அறிவில் சிறந்த ஒருவரை வணங்காமல் சென்றால் அது தன்னகங்காரம்  அல்லது அறிவீனம் என்பது பொருள்! 

தன்னைவிட வயதில் மூத்த ஆனால் பண்பு கெட்டவரை வணங்காமல் சென்றால் அது தன்மானம் என்று பொருள்!

வயதில் குறைந்தவர் உட்பட யாரைக் கண்டாலும் வணங்குதல் என்பது அடிமைப் புத்தி என்று பொருள்!

முன்பின் அறியாதவர்களைச் சந்திக்கும்போது வணங்குவது மரியாதை என்று பொருள்படும். 

அதிகாரத்தில் உள்ள ஒருவன் அமர்ந்திருக்க அவன் வயது எப்படி இருந்தாலும் அவனை வணங்குவது என்பது கடிக்கும்  நாயின் முன் நிற்பதுபோன்ற உணர்வு என்பது பொருள். 

அத்தகைய நிலையில் தான் ஒரு ஊழியன் என்பதை மறந்து வந்தவருக்கு வணக்கம் செய்யாமல் அவர்களது வணக்கத்தைப் பெறுபவன் நாயினும் கீழானவன் என்று பொருள்!

சுயநல நோக்கில் வணங்குபவனும் வணக்கத்தை ஏற்றுக்கொள்பவனும் மனிதப் பிறவிகளே இல்லை என்று பொருள்! 








1 comment: