கொல்லாமை
உண்மையில் உலகம் ஒரு கொலைக்கூடம்.
அதில் சிலர் சில உயிரினங்களைக் கொல்லாமல் இருத்தலைமட்டும் கொல்லாமை என நினைக்கிறார்கள்!
மற்ற தங்களுக்குச் சம்பந்தம் இல்லாத மற்றும் தங்களால் அறிய முடியாத உயிர்வகைககள் கொல்லப்படுவதைப் பற்றியோ அந்தக் கொல்லுதலில் தங்களுக்குரிய பங்கைப் பற்றியோ வாய் திறப்பதே இல்லை! கவலைப்படுவதும் இல்லை!
அதன் விளைவுதான் பசுக்களைக் கொல்தல் பாவம் என்பார்கள் எருமைகளைப் பலிகொடுக்கும் இடங்களில் அப்படிச் செய்யக்கூடாது என்று சொல்லாமல் வெறும் பிரசங்கமும் சடங்குகளும் காசுவாங்கிக்கொண்டு செய்வார்கள்!
இதுதான் நம்மவர்களின் கொல்லாமை!
இந்த நிலையில் தாவரங்களுக்கும் உயிர் இருப்பதால் அதைக் கொல்வதும் கொலைதானே என்பதை நினைக்கப் போகிறார்களா?
ஆனால் நினைக்கவேண்டும்! அதுதான் அறிவுடைமை!
நாம் செய்யக்கூடியதெல்லாம் இயன்றவரை கொல்லாமல் இருப்பதே! வாழும்வரை அன்பும் கருணையும் காட்டுவதே! மனிதரும் அதற்கு விதிவிலக்கு அல்ல!
உண்மையான அறிவுடைமை கருத்துக்கள்...
ReplyDeleteநன்றி ஐயா...
நன்றி நண்பரே!
ReplyDelete