அனுமானம்
மனிதன் அறிந்த எல்லைகளில் நடப்பதையும் மனித அறிவால் அறிந்த உண்மைகளில் கிடைப்பதையும் கொண்டு அதற்கு அப்பால் என்ன நடக்க வாய்ப்புள்ளது என்று சிந்திப்பதுதான் மனித அறிவு விரிவாகவேண்டிய சரியான திசை!
அந்தத் திசையில் அனுமானிக்கப்படுவதுதான் அபத்தமான மூடநம்பிக்கைகள் நம்மை ஆட்கொள்வதைத் தடுக்கும்!
அனுமானம் என்பது தவறல்ல!
அதுதான் ஆராய்சிகளுக்கே அடிப்படை.
அத்தகைய அனுமானங்கள் எத்தகைய திசையில் எத்தகைய கோட்பாடுகளை அடிப்படையாகக்கொண்டு உருவானது என்பதுதான் முக்கியம்!
சரியான திசையில் இருந்தால் அதுதான் நாம் நகரவேண்டிய அடுத்த அடி!
ஆனால் பெரும்பாலான அனுமானங்கள் மூடநம்பிக்கைகளை அடிப்படையாகக் கொண்டிருப்பதுதான் எதிர்மறையான அம்சம்!
மூடநம்பிக்கைகள் மாற வேண்டும்...
ReplyDelete