ss

Monday, December 31, 2012

எனது மொழி ( 99 )


நாயினும்!..

ஒரு பெண் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகும்போது அவளைப் பரிதாபமாகப் பார்த்துப் பலவீனப் படுத்துவது தவறு! 

. அவள் வாழ்வு மீட்டெடுக்க முடியாத துயரத்தில் வீழ்ந்துவிட்டதைப்போலப் பார்ப்பதும் தவறு!

 ஒரு நாய் கடித்து விட்ட மனிதரை எப்படிச் சாதாரணமாக எடுத்துக்கொள்வோமோ அப்படி எடுத்துக்கொள்வதே சரியானது! 

அதுதான் அப் பெண்ணுக்குக் கொடுக்கும் சிறந்த மரியாதை ஆகும்! 

அவர்களும் அப்படிப்பட்ட சம்பவத்தால் தங்கள் வாழ்வு பரிபோனதாக எண்ணாமல் ஒரு நாய் கடித்துவிட்டது என்பதுபோல் தங்கள் உணர்வுகளை திடமாக வைத்துக்கொள்ள வேண்டும்! 

அதே சமயம் அப்படிப்பட்ட தவறு செய்த ஆணுக்கும் அந்தக் கடிநாய்க்கு அல்லது வெறி நாய்க்குக் கொடுக்கும் தண்டனை கொடுக்க வேண்டும்! 

எனது மொழி ( 99 )


நாயினும்!..

ஒரு பெண் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகும்போது அவளைப் பரிதாபமாகப் பார்த்துப் பலவீனப் படுத்துவது தவறு! 

. அவள் வாழ்வு மீட்டெடுக்க முடியாத துயரத்தில் வீழ்ந்துவிட்டதைப்போலப் பார்ப்பதும் தவறு!

 ஒரு நாய் கடித்து விட்ட மனிதரை எப்படிச் சாதாரணமாக எடுத்துக்கொள்வோமோ அப்படி எடுத்துக்கொள்வதே சரியானது! 

அதுதான் அப் பெண்ணுக்குக் கொடுக்கும் சிறந்த மரியாதை ஆகும்! 

அவர்களும் அப்படிப்பட்ட சம்பவத்தால் தங்கள் வாழ்வு பரிபோனதாக எண்ணாமல் ஒரு நாய் கடித்துவிட்டது என்பதுபோல் தங்கள் உணர்வுகளை திடமாக வைத்துக்கொள்ள வேண்டும்! 

அதே சமயம் அப்படிப்பட்ட தவறு செய்த ஆணுக்கும் அந்தக் கடிநாய்க்கு அல்லது வெறி நாய்க்குக் கொடுக்கும் தண்டனை கொடுக்க வேண்டும்! 

எனது மொழி ( 99 )


நாயினும்!..

ஒரு பெண் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகும்போது அவளைப் பரிதாபமாகப் பார்த்துப் பலவீனப் படுத்துவது தவறு! 

. அவள் வாழ்வு மீட்டெடுக்க முடியாத துயரத்தில் வீழ்ந்துவிட்டதைப்போலப் பார்ப்பதும் தவறு!

 ஒரு நாய் கடித்து விட்ட மனிதரை எப்படிச் சாதாரணமாக எடுத்துக்கொள்வோமோ அப்படி எடுத்துக்கொள்வதே சரியானது! 

அதுதான் அப் பெண்ணுக்குக் கொடுக்கும் சிறந்த மரியாதை ஆகும்! 

அவர்களும் அப்படிப்பட்ட சம்பவத்தால் தங்கள் வாழ்வு பரிபோனதாக எண்ணாமல் ஒரு நாய் கடித்துவிட்டது என்பதுபோல் தங்கள் உணர்வுகளை திடமாக வைத்துக்கொள்ள வேண்டும்! 

அதே சமயம் அப்படிப்பட்ட தவறு செய்த ஆணுக்கும் அந்தக் கடிநாய்க்கு அல்லது வெறி நாய்க்குக் கொடுக்கும் தண்டனை கொடுக்க வேண்டும்! 

Saturday, December 29, 2012

உணவே மருந்து ( 43 )


தாம்பூலம் 

இது ஒரு பண்பாட்டுச் சின்னமும் மரியாதைக்கு உரியதும் ஆகும்!  

முன்பெல்லாம் குழந்தைகள் தவிர மற்ற எல்லா வயதினரும் அதைப் பழக்கமாகக் கொண்டிருந்தார்கள்.  

வெற்றிலை, பாக்கு, சுண்ணாம்பு மூன்றும் சேர்த்து மென்று வாயை மணத்துடன் அழகு படுத்தும் முறைதான் தாம்பூலம் தரிப்பது என்பதாகும்.

அதைமட்டும் போட்டால் வாய் அழகாகவும் மணமாகவும் இருக்கும்! 

பற்கள் சற்று சிவப்பாக மாறும். அதுவும் ஒரு அழகுதான்! 

நிச்சயம் தலைக்குக் கறுப்புச் சாயம் அடிப்பதுபோல் அது தீங்கு விளைவிப்பது இல்லை! 

வெற்றிலை பாக்கு இரண்டும் இயற்கையில் விளைபவை! சுண்ணாம்புச் சத்து உடலுக்கு அவசியமான ஒரு சத்தாக இருப்பதால் தீங்கு விளைவிக்காது! 

இவை மூன்றையும் சேர்த்து மெல்லும்போது அழகும் சுவையும் மணமுமாக இருப்பதாலும் தீங்கற்றதாக இருப்பதாலும் நன்மை செய்யக்கூடியதாக இருப்பதாலும் அது ஒரு பண்பாட்டுச் சின்னமாகவே கருதப்படுகிறது! 

ஆனால் அதை ஒரு கெட்ட பழக்கம் என்று சொல்லும் அளவு இன்று கெடுக்கப்பட்டுவிட்டது!

முதலில் தீங்கற்ற துவர்ப்புச் சுவை கொண்ட  பாக்கு வர்த்தக நோக்கத்துக்காக தீங்கானதாக மாற்றப் படுகிறது!

அதன் நிறத்தைக் கவர்ச்சியாகவும் சிவப்பாகவும் மாற்ற ரசாயனப் பொடிகள் கலக்கப்படுகின்றன. அதனால்தான் தீங்கே தவிர இயற்கையான கொட்டைப் பாக்கில் எந்தத் தீங்கும் கிடையாது! 

கேரளாவில் வெற்றிலை பாக்கு கேட்டால் கொட்டைப் பாக்கும் அதைச் சீவுவதற்காகக் கத்தியும் கொடுப்பார்கள். அதுதான் தீங்கற்ற சுத்தமான பாக்கு ஆகும்! 

அதே சமயம் புகையிலை மண்ணில் இயற்கையில் விளையும் தாவரம் என்றாலும் அது மனிதன் உண்ணக்கூடிய தாவரம் அல்ல! நச்சுத் தன்மை உடையது! 

அதனால்தான் புகையிலைச் சாற்றை விழுங்க முடியாது! 

வெற்றிலை பாக்கு சுண்ணாம்பு மட்டும் போட்டால் அதன் சாற்றை விழுங்க முடியும். விழுங்க வேண்டும். அதுதான் நல்லது! 




ஆனால் தாம்பூலத்துடன் உடல் நலத்துக்குக் கேடு விளைவிக்கும் புகையிலையையும் சேர்த்துப் போட்டு அதன் சுவையையும் பயனையும் நாசமாக்கி விட்டார்கள்.

ஒரு கெட்ட பழக்கமாகப் புற்றுநோய் உண்டுபண்ணக் கூடிய கொடிய புகையிலையை  போடுவதல்லாமல்  கண்ட இடங்களில் எல்லாம் துப்பி அருவருப்பான செயலாக மாற்றி விட்டார்கள்! 

அது தவறு! தனியாகச் சுத்தமான கொட்டைப் பாக்கு சேர்ந்த தாம்பூலம் போடுவது அழகானதும் சுவையானதும் பயன்மிக்கதும் ஆன நல்ல பழக்கம் ஆகும்! 

அதை எங்கும் துப்பி அசிங்கப்படுத்த அவசியம் இல்லை! 

எனவே நல்ல தாம்பூலம் போடுவதை மதிப்போம்! 

புகையிலைப் பழக்கத்தை எந்த வடிவிலும் ஒழிப்போம்! 

உணவே மருந்து ( 42 )


இயற்கை உணவும் மாமிச உணவும் 

மனிதன் உண்ணும் சமைத்த உணவுகளில் பயன்படுத்தப்படும் பெரும்பாலான தானியங்கள்,காய்கறிகள்,கிழங்குகள், மற்றும் பழங்கள் எல்லாமே சமைக்காமலும் உண்ணக்கூடியவையே! 

ஆனால் நாக்கின் சுவைக்காகச் சமைத்து உண்டு பழகி விட்டதால் சமைத்து உண்கிறோம். 

ஆனால் சமைத்து உண்ணும் எந்த மாமிசத்தையும் சமைக்காமல் அப்படியே உண்ண முடியாது! 

காரணம் அதைச் சுவைக்காக மட்டும் சமைப்பது இல்லை. 

சமைக்காமல் உண்ண முடியாது என்பதுதான் முக்கியக் காரணம்! 


தவிர ஆதிமனிதர்கள் நெருப்பின் பயனை அறியும் வரை மாமிசத்தை உண்டு வாழ்ந்தவர்களாக இருந்திருக்க முடியாது!

தாவர உணவுகளைத்தான் உண்டு வாழ்ந்திருக்கவேண்டும். காரணம் தாவர உணவைப் பச்சையாக உண்பதுபோல மாமிசத்தைப் பச்சையாகச் சுவைத்து உண்ண முடியாது என்பதே! 

அதனால் ஆதிமனிதர்கள் தவிர்க்கமுடியாமல் மாமிசத்தை உண்டிருந்தாலும் அவர்கள் விரும்பி உண்டு வளர்ந்து வாழ்ந்தது தாவர உணவுகளாகத்தான் இருந்திருக்க வாய்ப்பு உள்ளது! 

எனவே மாமிசம் இயற்கையாக உண்ணமுடியாமல் சமைத்து மட்டுமே உண்ணக்கூடிய ஒன்றாக இருப்பதால் அது இயற்கை உணவுக்கு ஈடானது அல்ல! 

மாமிச உணவும் மற்ற சமைத்த உணவுகளும் ஈடானவை ! 

இயற்கை உணவுக்கு மாமிச உணவுமட்டுமல்ல சமைத்த தாவர உணவுகளும் ஈடு அல்ல! 

Friday, December 28, 2012

எனது மொழி ( 98 )


எது சிறப்பு?

நமது உள்ளத்தில் தோன்றுவதும் மற்றவர்களிடமும் கல்வியின்மூலம் தான் தேடியதுமான கருத்துக்கள் சரியாக இருந்தாலும் தவறாக இருந்தாலும் அவை மதிப்பு மிக்கவை! 

காரணம் சரியாக இருந்தால் அவற்றை ஏற்றுக்கொள்ளலாம். தவறாக இருந்தால் விமர்சனங்களை எதிர்கொண்டு திருத்திச் செழுமைப் படுத்திக்கொள்ளலாம்! 

அதன்மூலம் அந்தக் கருத்து மதிப்புப் பெறுகிறது. கருத்துக்கு உரியவரும் மதிப்புப் பெறுகிறார்!

அதைவிட்டு புத்தகங்களிலும் இணையத்திலும் பெரியோர்களின் போதனைகளிலும் இருந்து எடுத்து சுட்டிக்காட்டுவதன்மூலம் அந்தக் கருத்துக்களால் சொல்பவருக்கு எந்தப் பெருமையும் இல்லை! 

அடுத்தவர் கருத்துக்களைக் கையாள்வதைவிட நம்மிடம் உள்ள கருத்துக்களை வெளிப்படுத்துவதே சிறப்பு! வெளிப்படுத்த இயலவில்லை என்றால் தங்கள் ஐயங்களை வெளிப்படுத்தலாம்! அதுவும் முன்னதற்கு இணையான சிறப்பு ஆகும்! 

அதற்கு மற்றவர்கள் பதில் அளிப்பார்கள்! அதன்மூலம் அறிவுத் தேடலும் அறிவுத் திறனும் அதிகமாகும்! 

ஒவ்வொரு சிறப்பும் நமது முயற்சியால் அடைய வேண்டும்! 

அதுதான் உண்மையான சிறப்பு! 


Thursday, December 27, 2012

அரசியல் ( 34 )


புது வியாதி!

இப்பொழுது ஒரு வியாதி பரவி வருகிறது! 

ஆதாவது அரசுகள் பொறுப்பற்றவை, ஊழல் நிறைந்தவை! மக்களைக் கவனிக்க அவற்றுக்கு நேரமில்லை .

இப்படிச் சொல்லி விட்டு சும்மா இருந்தால்கூடப் பரவாயில்லை! 

அவற்றை எதிர்த்து மக்கள் போராடவேண்டும் என்று சொன்னால் நல்லது!

ஆனால் இந்தப் புது வியாதிக்காரர்கள் என்ன சொல்கின்றார்கள்  அரசாங்கத்தை நம்பிக்கொண்டிருக்காமல் மக்கள் தங்கள் தேவைகளைத் தாங்களே தீர்த்துக்கொள்ளவேண்டுமாம்! 

ஆதாவது தாங்கள் அரசுக்கு அழ வேண்டியதை எல்லாம் அழுதுவிட்டு அதையெல்லாம் எவனோ திருட விட்டுவிட்டு தங்கள் தேவைகளைத் தாங்களே தீர்த்துக்கொள்ளவேண்டுமாம்! 

இது எப்படி சாத்தியம்? சாதாரண மக்களுக்கு அதற்கான அதிகாரம் உள்ளதா? 

இந்த நோயைப் பரப்புபவர்கள் மக்களின் விரோதிகளுக்கு உதவுகிறார்கள். அல்லது அப்படி உதவுகிறோம் என்பதை அறியாமல் சொல்கிறார்கள்!

எப்படி இருந்தாலும் அது தவறானதே! 

அரசுகளை நிற்பந்தித்துத் தங்கள் உரிமைகளை நிலைநாட்டப் போராடுவதே சரியானதும் சாத்தியமானதுமான வழி ஆகும்!



எனது மொழி ( 97 )


சூழ்நிலை

அண்டத்தில் உள்ள அனைத்தையும் தீர்மானிப்பவை சூழ்நிலைகளே! 

நாம் சூழ்நிலைக் கைதிகள் அல்ல! சூழ்நிலைகளின் ஓர் அங்கம! 

காரணம் இன்றிக் காரியம் இல்லை என்பது மிகப் பெரிய தத்துவம் !

அந்தக் காரணங்கள்தான் சூழ்நிலைகள்! 

இதில் ஒரு சிறப்பு என்னவென்றால் காரணங்கள் காரியங்களாகவும்  காரியங்கள் வேறொன்றுக்கோ பலவற்றுக்கோ காரணங்களாகவும் மாறியபடி இருப்பதே உயிருள்ள உயிரற்ற அனைத்தின் வாழ்வு முறை ஆகும்.

 இதற்கு நாம் மட்டும் விதிவிலக்கல்ல! 

ஆகையால் சரியான காரணமாகவும் சரியான காரியமாகவும் நமது வாழ்க்கைப் பாத்திரத்தைச் சிறப்பாகச் செய்வதே நம்முன் உள்ள மற்றும் நமக்கு அனுமதிக்கப்பட்ட கடமை ஆகும்! 

ஆன்மிகத்தில் ஒரு புதுப்பாதை ( 21 )




பரம்பொருள்

அனைத்திலும் நீக்கமற நிறைந்திருப்பது பரம்பொருள்.

அனைத்துமாய், அனைத்து உயிர்களுமாய், அனைத்து இயக்கங்களுமாய், அணுவாய், அண்டமாய் இருக்கின்ற பரம்பொருளின் பண்பு இத்தகையது என்று  அந்தப் பரம்பொருளின் அல்லது இறைவனின் எண்ணற்ற வடிவங்களில் ஒன்றான மனிதனால் எப்படி  வரையறுக்க முடியும்? 

அடி முடி தெரியாத பிரம்மாண்டமான பரம்பொருளில் அடங்கியுள்ள சின்னஞ் சிறு அங்கம் நாம்.

நமது பாத்திரத்தைச் சிறப்பாகச் செய்வதே நாம் செய்யக்கூடியது. 

அந்தச் சிறப்பு என்பது பரம்பொருளின் சக படைப்புக்களுடன் இணங்கி வாழ்வதே என்பதையும் உணரவேண்டும். 

அதுதான் உண்மையான ஆன்மிக வாழ்க்கை! 









Tuesday, December 25, 2012

எனது மொழி ( 96 )


விஷ வட்டம் 

எல்லாத் துறைகளிலும் மக்களின் தேவைகளுக்குத் தவறுகளைச் சார்ந்து வாழ விட்டுவிட்டு விளைவுகளை எண்ணி வருத்தப்படுகிறோம். 

ஆனால் இன்னும் உணரவேண்டியவர்கள் உணரவில்லை! 

உணர்ந்தவர்களிடம் அதற்குப் பரிகாரம் செய்யும் அதிகாரமோ சக்தியோ இல்லை! 

இந்த விஷ வட்டத்தில் இருந்து எப்போது மீளப்போகிறோம்?....

Saturday, December 22, 2012

பல்சுவை ( 9 )


மாயமான மாயன்!

எப்படியோ மாயன் சொன்ன ஆபத்து நழுவிப் போய் விட்டது! 

தப்பிப் பிழைத்துவிட்டோம்!

இப்போ என்ன கிளம்புகிறது என்றால் உலகம் அழியும் என்ற அபத்தத்துக்கு மாற்றாக வேறொன்றை முன்வைக்கிறார்கள்!

ஆதாவது டிசம்பர் இருபத்தியொன்று  உலகம் அழியும் நாள் அல்லவாம்! அவர்களின் காலண்டர் முடிவு நாளாம்! 

இனிப் புதுக் காலண்டர் துவங்குகிறதாம்!

யார் புதுக் காலண்டரை எழுதி வெளியிடப் போகிறார்கள் என்று தெரியவில்லை!

இதற்குள் வந்திருக்கவேண்டும். ஆனால் வரவில்லை........

மாயன்கள் என்ற ஒரு நாகரிகம் இருந்துள்ளது. அது சம்பந்த,மான தொல்பொருட்கள் நிறையக் கிடைத்துள்ளன. அது தொடர்பான செய்திகளின் உண்மையான விபரங்களை அறிய முடியாமல் வியக்கிறோம் . அவ்வளவே! 

அதற்குமேல் அது பற்றிய கற்பனைகளையெல்லாம் நம்புவது அறிவுடைமை அல்ல! அது காலண்டரும் அல்ல ஒரு புண்ணாக்கும் அல்ல!

லீப் வருடத்தைப் பற்றி அவர்கள் அறிந்திருக்க வாய்ப்பு இல்லை! 

முன்னூற்றி அறுபத்தி ஐந்தேகால் நாட்கள் கொண்டது ஒரு வருடம் என்று அவர்கள் சொல்லியிருக்கிறார்களா? 

அப்படியானால் சுமார் எண்ணூறு நாட்கள் வித்தியாசம் வரும். இதை ஏன் எவரும் நினைக்கவில்லை?

 உலக முடிவை பற்றி எழுதிய மாயன் காலண்டர் ஏன் உலகம் எப்போது தோன்றியது என்று சொல்ல வில்லை.?

தேதி வாரியான மற்ற விபரங்கள் எங்கே?


உலகம் தோன்றியதைச் சொல்லவேண்டாம்.....இதுநாள் வரை வேறு எந்த நாளைப் பற்றி அதில் இருந்தது?

காலண்டர் என்று சொன்னால் தினசரி நிகழ்வுகள் பற்றி சொல்லப்பட்டிருக்கவேண்டும். 

அப்படி ஒரு நாளைப் பற்றியும் சொல்லாத அது எப்படி காலண்டர் ஆச்சு? 

எல்லாம் மக்களை முட்டாளடிக்கும் உபாயங்கள்! 

உலக மக்கள் விழிப்படைந்துவிடக்கூடாது என்பதற்காக தொடர்ந்து ஏதாவது காரணங்களைச் சொல்லி அறிவை முடமாக்க முயல்வது வழக்கமான ஒன்று. 

ஆனால் அதில் வெற்றியும் கிடைக்கிறது!

Friday, December 21, 2012

விவசாயம் ( 42 )

காய்க்காரம்மா

முன்பெல்லாம் கிராமங்களில் இருந்து பெண்கள் இதுபோன்ற கூடைகளில் கத்தரிக்காய், வெண்டைக்காய், பாகற்காய், தக்காளி, இன்னும் வேறு சில காய்கறிகளையும் நிறைத்து விற்பனைக்காக உள்ளுரிலும், அக்கம் பக்கம் உள்ள நகரங்களுக்கும் தலைச் சுமையாக எடுத்துச் செல்வார்கள்! 

அவை சொந்த நிலத்தில் விளைந்ததாகவும் விற்பனை செய்வதற்காக விவசாயிகளிடம் விலைக்கு வாங்கியதாகவும் இருக்கும்.

அதை அவர்கள் நாளெல்லாம் சுமந்து விற்றுவிட்டு விற்ற பணத்தில் விவசாயிக்குக் கொடுத்த விலை போக மீதியைத் தங்கள் வருவாயாக வைத்துக் கொள்வார்கள்! 

அதைக்கொண்டு நிம்மதியாக வாழ்வும் செய்தார்கள்! 

அவர்களை அன்புடன் காய்க்காரம்மா என்று அன்புடன் அழைப்பார்கள்! 

ஆனால் இப்போது நிலைமை தலைகீழாக மாறிவிட்டது! 

அப்படியெல்லாம் பெண்கள் தலைச் சுமையாக சுமந்து விற்பதை பெரும்பாலும் நிறுத்தி விட்டார்கள்! 

காரணம் அந்தக் கூடை நிறையக் காய்கறிகளை விற்றால் தற்காலத்தில் சுமக்கும் கூலிகூடக் கிடைக்காது! 

விவசாயிக்கு எந்தப் பணத்தைக் கொடுப்பது? 

அதனால் நிறுத்தி விட்டார்கள்! 

ஆதாவது ஒரு காலத்தில் விவசாயி விளைவித்த விலை பொருள் விலைக்கு வாங்கித் தலைச் சுமையாக சுமந்து விற்றாலும் லாபம் கிடைக்கும் அளவு அவனுக்கு விலை கிடைத்தது. 

ஆனால் இப்போது தலைச் சுமையாகத்தான் விற்கவேண்டும் என்ற நிபந்தனையுடன் விவசாயி சும்மா கொடுத்தாலும் வாங்கி விற்க ஆளில்லை என்று சொல்லுமளவுதான்  விலை கிடைக்கிறது! 

ஒரு ஏழை விவசாயி எப்படிப் பிழைப்பது? 



எனது மொழி ( 95 )

தத்துவம் 

தத்துவங்கள்தான் வாழ்வுக்கு வழிகாட்டும் அம்சங்கள்! 

அதை நடைமுறை வாழ்வுடன் பொருத்திப் பார்த்தால்தான் சரியா தவறா என்று  உணரமுடியும். 

அப்போது சரியான தத்துவங்கள் மக்களை மேம்படுத்தும் அம்சங்களாக விளங்கும்! 

அனைவராலும் போற்றப்படும்!

தவறானவை நிராகரிக்கப்படும்! 

குப்பையில் தூக்கி  எறியப்படும்! 

Thursday, December 20, 2012

அரசியல் (33)


அரசியல் கேடு!

இந்தியாவைப் பிடித்த அரசியல் கேடுகளில் ஒன்று தலைவர்கள் (அப்படிச் சொல்ல அவமானமாகத்தான் உள்ளது) தங்கள் சொந்தங்களை தங்களுடைய அரசியல் வாரிசுகளாக்குவது! 

அது மக்களையும் மற்ற நல்ல மனிதர்களையும் அவமதிக்கும் செயல் என்பது அவர்களுக்குத் தெரியாமலிருக்கலாம்.

ஆனால் அதனால் பாதிக்கப்படும் மக்கள் அதைத் தங்களுக்கு நேர்ந்த அவமானமாக நினைக்கவேண்டும்!

அவர்களுடைய சக தலைவர்களும் இதுவெல்லாம் ஒரு பிழைப்பா என்று நினைத்து காறித் துப்பிவிட்டு மக்களுக்குத் துரோகம் செய்தவர்களைத் தூக்கிக் குப்பையில் எறிந்துவிட்டு மக்கள் சேவைதான் முக்கியம் என நினைக்கவேண்டும்! 

நடக்குமா?.... 

Wednesday, December 19, 2012

அரசியல் ( 32 )

தெரிந்து செய்தால்.....

ஒரு தவற்றைத் தெரியாமல் செய்துவிட்டால் அது பெரிய தவறல்ல! ஆனால் தெரிந்தே செய்தால் பெரும் குற்றம் என்கிறோம்.

அதேபோல் தேர்தலில் நிற்பவர் இப்படித்தான் செய்வார்கள் என்று தெரியாமல் தேர்ந்தெடுத்து அவர்கள் ஆட்சியில் அமர்ந்தபின் கண்டறியப்பட்டால் அவர்களைத் தேர்வு செய்ததைச் சாதாரணத் தவறாக எடுத்துக்கொள்ளலாம்.

ஆனால் குற்றவாளிகள், சுயநலவாதிகள் என்று தெரிந்தும் நாடறிந்த திருடர்களை தங்கள் பிரதிநிதிகளாகத் தெரிந்தே தேர்வு செய்வது மட்டும் பெரும் குற்றம் அல்லவா?

மக்கள் ஏன் ஒரே தவற்றைத் திரும்பத் திரும்பச் செய்கிறார்கள்? 


Tuesday, December 18, 2012

அரசியல் ( 31 )


அடிப்படைத் தேவைகள்

தவறுகள் அல்லாத குறைந்த பட்ச வாழ்க்கைத் தேவைகளைத் தான் அடிப்படைத் தேவைகள் என்கிறோம்! 

ஆதாவது தொழில், உணவு, உடை, இருப்பிடம், கல்வி, மருத்துவம், சட்டப் பாதுகாப்பு, பாராபட்சமற்ற வாய்ப்புகள், அடிப்படை ஜனநாயக உரிமைகள், நீதி பரிபாலனம் போன்றவற்றை அடிப்படைத் தேவைகள் என்று சொல்லலாம். 

இவை நேரடியாகவும் மறைமுகமாகவும் மறுக்கப்படும்போதுதான் அவற்றை அடைவதற்காக முட்டிமோதுதலும் குறுக்குப் புத்திகளும் உருவாகின்றன. 

அது ஒழுக்கக் கேட்டுக்கும் பண்பாட்டுச் சீரழிவுக்கும் மக்களை இட்டுச் செல்கின்றன! அதுதான் இப்போது நடப்பில் பார்க்கிறோம் ! 

அதனால் முதலில் சொல்லப்பட்ட அடிப்படைத் தேவைகளுக்காக போராடி வெல்லும்போது அதன் விளைவுகளான தவறுகள் தானாக அடிபட்டுப் போகும்! 

எனது மொழி ( 94 )

விஞ்ஞானமும் மெய்ஞானமும் 

விஞ்ஞானமும் மெய்ஞானமும்  ஒன்றையொன்று சார்ந்த இணையான அம்சங்கள்!

மெய்ஞானமும் என்பது தத்துவம்! விஞ்ஞானம் என்பது நடைமுறை அனுபவம்!

இவை இரண்டும் இல்லாமல் மனித நாகரிகம் இல்லை! 

ஆனால் நிறையப்பேர் மூட நம்பிக்கைகளை மெய்ஞானமாகவும் அழிவுப்பாதையை விஞ்ஞானமாகவும் நினைத்துக்கொண்டு மக்களைத் தவறான திசையில் வழிநடத்திக்கொண்டு உள்ளார்கள்! 

அதனால் உலக சமுதாயமும் படு வேகமாக அழிவுப் பாதையில் போய்க்கொண்டுள்ளது! 

Monday, December 17, 2012

விவசாயம் ( 41 )


கண்ணுக்கு முன்னால்.....

நண்பர்களே!

இது நேற்று எடுத்த படம்!

மக்காச் சோளப்பயிர்!

நாங்கள் இருக்கும் உடுமலைப்பேட்டை,பழனி, ஒட்டன்சத்திரம் பகுதிகளில் மட்டும் ஏறக்குறைய ஒரு லட்சம் ஏக்கர் இந்த நிலையில்தான் உயிர் போய்க்கொண்டு உள்ளது!

முதல் காரணம் தென்மேற்கு பருவமழை பொய்த்ததால் கிணறுகளில் வழக்கமாக இருக்கும் தண்ணீர் இல்லை.

இரண்டாவது காரணம் வடகிழக்குப் பருவமழையை நம்பி வழக்கம்போல நடவுசெய்தது.

மூன்றாவது காரணம் வடகிழக்குப் பருவமழை பொய்த்துப்போனது! 

நான்காவது காரணம் மழை பொய்த்தபோது ஒத்தாசை செய்யுமளவுகூட கிணறுகளில் தண்ணீரில்லாமல் வறண்டுபோனது! 

இதனால் இந்தப் பட்டத்தில் வரவேண்டிய வருவாய் இழப்பு முதலாவது!

இரண்டாவது போட்டமுதல்கூட இல்லாமல் நட்டமடைந்தது!

மூன்றாவது கால்நடைகளுக்குகூடத் தீவனம் இல்லாமல் இருப்பவற்றையும் அடிமாட்டுக்கு விற்பனை செய்வது!

நான்காவது அடுத்து இன்னும் ஒரு வருடத்துக்கு விவசாயப் பணிகள் எதுவும் செய்ய முடியாமல் காய்ந்துபோன தென்னைமரங்களைப் பார்த்துக்கொண்டு காலந்தள்ள என்னசெய்வது என்பது! 

இந்த வறட்சியைத் தொடர்ந்தும் மின்சாரப் பிரச்சினையாலும் தொழில்களும் சிறப்பான வருவாய் கொடுக்காது! அப்படியிருந்தாலும் விவசாய நிலங்களை முடியாதவர்கள் விற்றுவிட்டுப் போகலாம் .
அதற்கும் வழி இல்லை! 

நிறைய விவசாயிகளின் கண்களுக்கு முன்னால் பசுமையான எதிர்காலமல்ல வேறு எதோ தெரிகிறது!  

எனது மொழி ( 93 )

மன வருத்தம் 

அன்பாகட்டும் உறவாகட்டும், மற்றவர்களிடம் எதிர்பார்க்கும் உதவியாகட்டும், வாழ்க்கைச் சூழல் ஆகட்டும் இருக்கும் வாய்ப்புகளை விட எதிர்பார்ப்புக்களைக் குறைவாக வைத்துக்கொண்டால் மனம் வருத்தப்பட பெரும்பாலும் வாய்ப்பே இருக்காது !

பெரும்பாலான மனவேதனைகளுக்குக் காரணம் வாய்ப்புகளுக்கு மீறிய எதிர்பார்ப்புக்களே!

பிற உயிரினங்கள் ( 4 )


கொல்லாமை

கொல்லாமை நல்ல விஷயம்தான்! 

ஆனால் வாழும் மனிதர் ஒவ்வொருவரும் நேரடியாகவோ மறைமுகமாகவோ கொல்லுதலுக்குக் காரணமாக இருக்கிறார்கள்! 

மனிதனைத் தவிர எந்த உயிரினத்துக்கும் சில வனப்பகுதிகள் தவிர வாழிடங்கள் இல்லை! 

அவை கொல்லப்படவும் மனிதர் அவற்றைக் கொல்லவும் ஏற்ற முறையில்தான் உலக வாழ்வு கட்டமைக்கப்பட்டுள்ளது! 

அப்படி இருக்க இந்தக் கொல்லாமை யாருக்கு உபதேசிக்கப்படுகிறது என்றே புரிந்துகொள்ள முடியவில்லை.

நேரடியாகவோ மறைமுகமாகவோ எந்த உயிரின் கொலைக்கும் தான் காரணம் அல்ல என்று சொல்லக்கூடிய எவரும் இருப்பதாகத் தெரிய வில்லை! 

இப்படி ஒரு கோரிக்கை புதுக் கோட்பாடு என்றால் அதை எப்படி நடைமுறைப் படுத்துவது என்றாவது விளக்கவேண்டும்! 

அதைவிட்டு எதோ ஒரு மதத்தைச் சேர்ந்த சிலர் அறியாமல் சொல்லும் வாழ்வு முறைக்கு அவர்கள் சார்ந்த மதத்தவர்களே தயாராக இல்லாத நிலையில் சொல்பவர்களாலேயே பின்பற்ற முடியாத நிலையில் அடுத்த மதத்தவர்களைக் குறை சொல்வது எப்படி சரியாகும்?

Sunday, December 16, 2012

எனது மொழி ( 92 )


நம்பிக்கைச் சுதந்திரம்!

குறிப்பிட்ட நம்பிக்கைகளுடன் தங்களைப் பிணைத்துக் கொள்பவர்கள் தங்களின் சிந்திக்கும் சுதந்திரத்தை இழக்கிறார்கள்! 

அதன்மூலம் அவர்களின் அறிவு முடமாகிறது!

அப்படி அல்லாமல் சுதந்திரமாகச் சிந்திப்பவர்கள் தங்கள் அறிவை மேலும் மேலும் வளர்த்துக் கொள்கிறார்கள்!

காலமாற்றத்துக்கு ஏற்பச் சரியான முடிவெடுக்கிறார்கள்! 

எனது மொழி ( 91 )


அறிவியலும் மூட நம்பிக்கையும்! 

அறிவியல் என்பது மூட நம்பிக்கையாக இருந்தால் எப்போதும் ஒரே மாதிரி இருக்கும். 

ஆனால் அது வாழ்வையும் உலகையும் அண்டத்தில் உள்ள அத்தனையையும் பற்றி எட்டியவரை சரியாக விளக்குகிறது. 

விளக்க முயல்கிறது! 

அது ஒரு மாறும் அறிவு! மனித அறிவுக்கு எட்டிய எல்லைகள் விரிவடையும் அளவு அறிவியலின் வீச்சும் விரிவடைந்துகொண்டே இருக்கும். 

ஆனால் இன்னும் சூரியனையும் சந்திரனையும் கிரகங்கள் என்று பிதற்றிக்கொண்டிருக்கும் அறிவாளிகள் அறிவியலைப் பழிப்பதற்கு வெட்கப்படுவதில்லை என்பதுதான் உண்மை! 

புதுப்புது தேவைகளுக்கு ஏற்ப புதுப்புது கண்டுபிடிப்புகளை அறிவியல் நிகழ்த்திக்கொண்டே இருக்கும். 

ஆனால் மூட நம்பிக்கைகளை அடிப்படையாகக் கொண்டு வாழ்க்கையைப் பார்க்கும் எவரும் அறிவியல் கண்டு பிடிப்புகளைவிட அவற்றின் தேடல்களைவிட அறிவுக்கு எட்டாத இன்னும் கண்டுபிடிக்கப்படாதவற்றைஎல்லாம் தாங்கள் கண்டறிந்து விட்டதுபோல் அறிவியலைப் பழிப்பதை கெட்டிக்காரத்தனமாகக் கொண்டிருக்கிறார்கள்!

அறிவியல் எட்டிய எல்லைக்கு அப்பால் அறிவியல் என்ன சாதித்தது என்று கேட்பவர்கள் எப்படி மூடநம்பிக்கைகளை அப்பழுக்கற்ற கண்டுபிடிப்புகளைப்போல் துணிந்து சொல்கிறார்கள் என்பதுதான் வேடிக்கை! 

அறிவியலைப் பழித்துக்கொண்டே தங்களின் மூடநம்பிக்கைகளை அறிவியல் ரீதியானது என்று சொல்லவும் கூச்சப்படுவதே இல்லை!

இந்த லட்சணத்தில் தங்களை ஆன்மிகவாதிகள் என்று சொல்லிக்கொண்டு ஆன்மிகத்தையும் கொச்சைப்படுத்தவும் தவறுவதில்லை! 

Saturday, December 15, 2012

விவசாயம் ( 40 )


வறட்சி!

இந்த வருடம் மழை பொய்த்துப்போய் கடும் வறட்சியை நோக்கி விவசாயம் போய்க்கொண்டுள்ளது!

தென்னை மரங்கள் நிறைய காய்ந்து விட்டன. மிக அதிக அளவு காயத்துவங்கிவிட்டன.

பெரும்பாலான கிணறுகளில் தண்ணீர் வரண்டுவிட்டன. 

கால்நடைகளுக்கும் மக்களுக்கும் கடும் தண்ணீர்ப்பஞ்சம் முன்னால் எதிர்நோக்கி நிற்கிறது!

மழைக்கால விவசாயம் எதுவும் நடக்காத நிலையில் அடுத்தகட்ட வறட்சி துவங்குகிறது! 

பாசன வசதி உள்ள இடங்களில்கூட அணைகளும் ஏரி குளங்களும் தண்ணீரில்லாமல் கிடக்கின்றன!

ஆனாலும் விவசாயிகள் மத்தியில் அதற்கான எதிர்விளைவுகள் குறிப்பிட்டுச் சொல்லும்படியாக இல்லை! 

காரணம்  மக்களின் விவசாயத்தைச் சார்ந்து வாழும் வாழ்வு முறை வேகமாக மாறிவருகிறது!

விவசாயம் என்ன ஆகப் போகிறது?...


பிற உயிரினங்கள் ( 3 )


வலியும் வேதனையும்!

உயிருள்ள ஒவ்வொன்றுக்கும் அது மனிதனோ, மற்ற உயிரினங்களோ, தாவரமோ துன்புறுத்தும்போது அதற்கு வலியும் வேதனையும் இருக்கும், 

ஆனால் இந்த மூன்றும் அதை வெளிப்படுத்தும் முறைகள் வேறு வேறானது! 

 மனித உணர்வுக்கு நெருக்கமான துன்ப உணர்வுகளை வெளிப்படுத்துவதால் உயிரினங்களின் துன்பத்தைப் பெரிதாக உணர்கிறோம். 

ஆனால் தாவரங்கள் தங்கள் வலியை மனித உணர்வுகளைப் பாதிக்கும் முறையில் வெளிப்படுத்துவதில்லை! 

அதனால் தாவரங்களை ஜீவகாருண்ய அடிப்படையில் நாம் பார்ப்பதில்லை!  

அது தவிர்க்க முடியாத தேவையாக இருப்பதால் அதை ஒரு கொலைச் செயலாகப் பாவிப்பதும் இல்லை! 

சிந்தித்துப் பார்த்தால் தாவர உணவும் நமது உணர்வுகளால் உணரப்படாத ஒரு பாதகச் செயல்தான் என்று சொல்லவேண்டும்.

ஆனால் தவிர்க்க முடியாது! 

ஞானிகள் ( 2 )

சித்தர்களைப் பற்றிய சிந்தனைகள் 

சித்தர்கள் மருத்துவராக, மொழி வல்லுனர்களாக, புலவர்களாக, தத்துவ ஆசான்களாக, அறிவியலாலர்களாக, இன்னும் பலவிதமாகத் தங்கள் சிறப்பான பங்களிப்பைச் செய்தார்கள். 

ஆனால் அவர்கள் ஆராய்ச்சியால் மூலிகைகளில் இருந்து அல்லது வேறு பொருட்களைக்கொண்டு தங்கம் உருவாக்கினார்கள் என்று சொல்வது அவர்களை இழிவுபடுத்தும் பிரச்சாரமாகும். 

இதை நாம் நம்புவதில் அர்த்தம் இல்லை! தங்கத்தைப் பயன்படுத்தினார்கள் என்பதே அறிவுபூர்வமான செய்தி ஆகும். 

ரசவாதத்தினால் தங்கம் உருவாக்கினார்கள் என்று இப்போதும் சொல்கிறார்கள். மூலிகைகளால் உருவாக்கினார்கள் என்றும் சொல்கிறார்கள். அது நடைமுறையில் நிரூபிக்க முடியாத ஒன்று! 

தற்போது செயற்கையாகத் தங்கம் கூடத் தயாரிக்க முடியும். என்றாலும் அத்தகைய தொழில்நுட்பம் அக்காலத்தில் இல்லை! அக்காலமுறைப்படி அதைச் செய்துகாட்டி மெய்ப்பிக்க முடியாது!

சித்தர்களின் உண்மையான சிறப்புகளை மதிப்பிழக்கச் செய்வன இதுபோன்ற செய்திகள்!

சித்தர்கள் அறிஞர்கள்! ஆனால் அவர்கள் பெயரைப் பயன்படுத்தி மக்களின் அறிவை மழுங்கடிக்கும் வேலை நடப்பதைப் பிரித்துப் பார்க்கவேண்டும்.


ரசவாதம் மூலம் தங்கம் செய்வது ஒரு வேதிவினை என்றும் அதை அறிந்திருந்த சித்தர்கள் ஓரிருவர் அந்த தயாரிப்பு ரகசியத்தை வெளிப்படுத்தாமல் மறைந்துவிட்டதாகவும் சொல்கிறார்கள்.

எந்த ஒரு வேதியியல் முறையும் மக்கள் பார்வைக்கு வந்தபின்னால் ஒரு சிலரைச் சார்ந்ததாக இருக்கமுடியாது. அப்படி ஒரிருவரைச் சார்ந்ததாகத்தான் இருந்திருக்கும் என்றால் அதை அனைவருக்கும் பொதுவான அறிவியல் கலையாக எப்படி நிரூபிக்கமுடியும்? நிரூபிக்க இயலாத ஒன்றை நவீன அறிவியல் எப்படி ஏற்றுக்கொள்ளும்?

சித்தர்கள் காலத்தில் அவர்களால் என்ன செய்திருக்க முடியுமோ அதைத்தான் செய்திருப்பார்கள்! 

அதை இப்போதும் செய்யலாம்! 

அவர்கள் விட்டுப்போன அறிவியலையும் மற்ற மகத்தான பங்களிப்புகளையும் அறிந்ததைச் செய்யவும் அறிய இயலாததை அறிய முயல்வதும்தான் சரியானது!

அதைவிட்டு  அவர்களைப் பற்றிக் கற்பனைக் கதைகளை பஜனை பாடுவதைமட்டும்செய்து  உண்மையில் அந்த மகான்களை இழிவு படுத்திக்கொண்டுள்ளார்கள்! 

அதையே தொடரக்கூடாது என்பது மட்டுமல்ல அத்தகைய புரட்டுகளை ஒழித்துக்கட்ட வேண்டும். இல்லாவிட்டால் சித்தர்களைப் பற்றிய ஞானம் காக்கையும் நரியும் கதையைப் போல் சிறுத்துப் போய்விடும்!

சித்தர்களைப் பற்றி வழக்கில் உள்ள செய்திகள் அனைத்தும் மதிக்கத்தக்கவையா என்று யோசித்தோம் என்றால் அவர்கள் உண்மையில் அவமதிக்கப்படுகிறார்கள் என்று புரியும்! 

ஆனால் அவர்கள் சம்பந்தமான அபத்தங்களை எதிர்த்தால் அப்படி எதிர்ப்பவர்களை சித்தர்களின் எதிரிகள்போலவும் கதை பரப்புபவர்கள்தான் பற்றாளர்கள் போலவும் ஆர்ப்பாட்டம் செய்கிறார்கள்! 

அது அறியாமையும் போலி நடத்தையும் ஆகும்! 

அதனால் பயன் பெறுபவர்கள் சித்தர்கள் பெயரைச் சொல்லிப் பிழைக்கும் ஏமாற்றுப் பேர்வழிகளே!

சித்தர்களின் எத்தனையோ கண்டுபிடிப்புகளும் செயல்முறைகளும் மறைக்கப்பட்டு மறக்கவும் பட்டுவிட்டன என்று சொல்பவர்கள் உண்டு.

 மறைக்கப்பட்டிருந்தாலும் மறக்கப்பட்டிருந்தாலும் அதை உறுதிப் படுத்தும் வரை அறியப்படாத வகையில்தான் வைக்கப்படவேண்டும். உண்மை என்று ஏற்றுக்கொள்வது சரியான முறை அல்லவே?...

தவறானதைத் தவறானதென்றும் சரியானதைச் சரியானதென்றும் அறியாததை அறியாததென்றும்தான் கொள்ளவேண்டும்!

அகத்தியர் நாடி சோதிடம் என்று சொல்லிக்கொண்டு ஊர் ஊருக்குக் கடை விரித்துத் தொழில் செய்கிறார்கள்.

சித்தர்களின் ஏடுகள் அடிப்படையில் சோதிடம் சொல்வதாகச் சொல்கிறார்கள். 

சித்தர்கள் அப்படி தங்கள் ஏடுகள் எத்தனை ஆயிரம் காப்பி பிரிண்ட் போட்டு இவர்களிடம் கொடுத்துவிட்டுப் போனார்கள்? 

அந்த மாதிரிக் கோடானு கோடி வருங்கால மக்களின் வாழ்க்கை நிகழ்வுகளை அவர்கள் எப்படி முன்னறிந்து பதிவு செய்து வைத்திருக்க முடியும்?

இதுமாதிரி ஆட்கள்தானே சித்தர்களின் பெயரைக் கெடுப்பவர்கள்? இவையெல்லாம் மறைக்கப்பட்ட உண்மைகளா?

எந்த இடத்திலும் மகான்களான சித்தர்களை நாம் ஏளனம் செய்வது இல்லை ! 

ஆனால் அவர்கள் பெயரால் நடக்கும் அறிவியலுக்குப் பொருந்தாத அபத்தங்களை விமர்சிக்காமல் எப்படி விட முடியும்? 

பொய்யர்கள் சித்தர்களின் பெயரைச் சொல்லி அறிவியலையே ஏளனம் செய்வது அனுமதிக்கக்கூடாத ஒன்று! உண்மையில் அத்தகையவர்கள் சித்தர்களை கேலிப்பொருளாக்குகிறார்கள்.

சித்தர்களின் வேதியல் மதிப்பு மிக்கதே!

 காரணம் அவர்கள் பல்வேறு பொருட்களைச் சேர்த்து புதுப்புது மருந்துகளை உருவாக்கியதாக அறிகிறோம்.

 இன்றும் சூரணங்கள் புழக்கத்தில் உள்ளது! 

ஆனால் ரசவாதம் என்ற வார்த்தையே அறிவாற்றல் மிக்கவர்களிடம் இருந்து வருவதில்லை! 

அப்படி வந்தால்கூட அத்தகையவர்கள்மேல் கொண்ட மதிப்பாலும் நம்பிக்கையாலும் ஒருக்கால் அப்படி இருக்கலாம் என நினைக்கலாம். 

ரசவாதம் என்ற வார்த்தையைத் தவிர அது சம்பந்தமான எந்த விபரமும் தெரியாதவர்கள்தான் கேட்பவர்கள்மேல் பாய்ந்து பிராண்டத் தயாராக இருக்கிறார்கள்!

சித்தர்கள் ரசவாதத்தால் தங்கம் செய்தார்கள் என்பதைவிட மருத்துவத்தில் தங்கத்தையும் பயன்படுத்தியிருக்கலாம் என்பதே சரி! 

ராசவாதத்தை மறுப்பதற்கு அந்தக் காலகட்டத்தில் அந்தமாதிரி அறிவியல் வளர்ந்திருக்கவில்லை என்பதைத்தான்  காரணமாகக் கொள்கிறோம்.

ஆனால் அதை நியாயப் படுத்துபவர்கள் பெரும்பாலும் பொய்யர்களாக இருப்பதால் அறிவியல்பூர்வமாக  ஏற்றுக்கொள்ளும்படியான விளக்கம் எதுவும் சொல்வது இல்லை! சொல்லவும் முடியாது! 

அறிவியல் முன்னோக்கித்தான் பயணிக்கும் ! பின்னோக்கிப் பயணிக்காது! 

அதனால் ரசவாதம் மூலம் தங்கம் செய்யும் முறை அக்காலத்தில் இருந்திருந்தால் இப்போது முந்தையதைவிட மேம்பட்ட முறையில் அது வளர்ந்திருக்க வேண்டும். ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லை! 

இன்னும் சில கேள்விகள்: 

அய செந்தூரம் போன்ற மருந்துகளையும் பஞ்சலோகம் எனப்படும் உலோக சேர்க்கையையும் சித்தர்கள் அறிந்திருந்தார்கள்.

அப்படியானால் ஏன் தங்கத்தைத் தவிர மற்ற உலோகங்களை ரசவாதத்தின்மூலம் தயாரிக்கவில்லை?

தங்கம் மட்டும் விலை மதிப்புள்ளதென்பதால் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டதென்றால் இன்றளவும் கிராக்கி உள்ள அந்தத் தொழில்நுட்பம் மறைந்துபோக வாய்ப்பே இல்லை! ஏன் மறைந்தது?

தண்ணீரில் நடப்பது, கூடுவிட்டுக்கூடு பாய்வது, நூற்றுக்கணக்கான வருடங்கள் வாழ்வது போன்ற கதைகள் எல்லாம் உண்மையா?

இந்தமாதிரி மோடி மஸ்தான்களாகச் சித்தரிப்பது அவர்களை இழிவு படுத்துவது ஆகாதா? 

சித்தர்களின் ஞானத்தை உண்மையாகவே உணர்ந்து அவர்களின் பார்வையில் நாமும் நிறையக் கற்று அவர்கள் விட்டுச் சென்ற பணிகளைத் தொடரவேண்டும் என்று சொல்பவர்களைவிட கற்பனைக் கதைகளை நம்புபவர்களும் பரப்புபவர்களும்தான் சித்தர்களுக்குச் சிறந்த மரியாதை செய்பவர்களா?

உண்மையாகவே சித்தர்களை மதித்துப் போற்றுவது உண்மையானால் அவர்களின் அனைத்துச் சிறப்புகளையும் ஆய்வு செய்து இந்தக் கால அறிவியல் வசதிகளையும் பயன்படுத்தி மேலும் வளர்க்க வேண்டும்.

அப்படிச் செய்திருந்தால் உலகின் மிகச் சிறந்த மருத்துவமாக சித்த மருத்துவம் ஆகியிருக்கக் கூடும்.

இனியும் செய்யலாம்! அதுதான் சித்தர்களுக்கு நாம் செய்யும் மரியாதையும் நன்றிக் கடனும் மட்டுமல்ல மக்களை இன்றைய மருத்துவக் கொள்ளை மற்றும் பக்கவிளைவு என்கிற ஆபத்துக்களில் இருந்தும் விடுதலை செய்யும் வழியும் ஆகும்! .




Friday, December 14, 2012

எனது மொழி ( 90 )

ஜனநாயகம்...

குற்றவாளிகளுக்குக் கப்பம் கட்டியும் அனுசரித்தும் கீழ்ப்படிந்தும் வாழும் ஒரு மானம் கெட்ட  வாழ்வை உறுதிப்படுத்துவதற்காக அவ்வப்போது நடக்கும் தேர்தலில் ஒட்டுப்போடுவதுதான் ஜனநாயகம் என்றால் அந்த ஜனநாயகத்தை என்ன செய்யலாம்?....

ஆன்மிகத்தில் ஒரு புதுப்பாதை ( 20 )

மூவகை மக்கள்!

உலக மக்களை மூன்று வகைகளாகப் பிரிக்கலாம்!

முதலாவது வகை ஆன்மிக வாதிகள்! 

இவர்கள் மிக மிகக் குறைவானவர்களே! 

இரண்டாவது வகை நாத்திகவாதிகள்!அல்லது இறை மறுப்பாளர்கள்!

இவர்களின் எண்ணிக்கை சற்று அதிகம்! 

மூன்றாவது வகை ஆன்மிகவாதிகள் என்று சொல்லிக்கொண்டும் நினைத்துக்கொண்டும் இருப்பவர்கள்!

இவர்கள்தான் உலகின் மக்கள் தொகையில் மிகப் பெரும்பாலோர் ஆவர்!

உண்மையில் இவர்களுக்கும் ஆன்மிகத்துக்கும் சம்பந்தமில்லை! ஆனால் தங்களை ஆன்மிகவாதிகள் என்று நினைத்துக்கொண்டு உண்மையான ஆன்மிகவாதிகளை ஆன்மிகத்தின் எதிரிகளாக நினைக்கும் மூடர்கள்!.....

அவர்களின் ஆன்மிகம் என்பது மூட நம்பிக்கைகள் மட்டுமே! 

Wednesday, December 12, 2012

எனதுமொழி ( 89 )

அறிவியலும் அதன் எதிரிகளும்!


அறிவியல் ஒரு அற்புதக் கலை ! அது உலகையும் வாழ்வையும் சரியாகப் புரிய வைக்கிறது!

ஆனால் அறிவியலை தவறாகப் பயன்படுத்துபவர்கள், அறிவியலைக் கொச்சைப் படுத்துபவர்கள், அறிவியலை மூடநம்பிக்கையைக்கொண்டு பழிப்பவர்கள் என அறிவியலுக்கு மூவகை எதிரிகள் இருக்கிறார்கள்!

Tuesday, December 11, 2012

உணவே மருந்து ( 41 )



விரதத்தின் பலன் 

நண்பர்களே! 

மக்கள் எதற்கெல்லாமோ காரணம் சொல்லி விரதம் இருக்கிறார்கள்!


வாரத்துக்கு ஒரு நாள் என்றும், அமாவாசை,கிருத்திகை போன்று மாதத்துக்கு ஒருதடவை வரும் நாட்களிலும் விரதம் இருக்கிறார்கள்!

வருடத்துக்கு ஒரு தடவை குறிப்பிட்ட நாட்கள் குறிப்பிட்ட காரணத்துக்காக விரதம் இருக்கிறார்கள்.

ஆனால் விரதம் என்றால் என்ன என்பதை எத்தனை பேர் சரியாகப் புரிந்து பயனுள்ள முறையில் விரதமிருக்கிறார்கள் என்று பார்த்தால் பயனற்ற ஒன்றாகத்தான் தெரியும்!

ஒரு நோய்க்கு மருந்து உண்ணும்போது சிலவற்றைத் தவிர்க்க வேண்டும் என்றும் சிலவற்றை சேர்க்க வேண்டும் என்று வைத்தியர்கள் சொல்வார்கள்! 

அதற்குப் பெயர் பத்தியம்! 

அதன்மூலம் உடலில் உள்ள நோய்கள் நீங்கப்பெற்று சுகமான வாழ்வை அடைகிறோம்!

அதுபோலவே ஒவ்வொரு மனிதர் வாழ்விலும் பல்வேறு சூழ்நிலைகளில் வாழ்வதன்  காரணமாக பல்வேறு பழக்கங்களுக்கு ஆளாகிறார்கள். அதனால் பல்வேறு உடல் மற்றும் உள்ளம் சம்பந்தமான குறைபாட்டுக்கு ஆளாகிறார்கள்!

அதைத் தவிர்த்து உடலாலும் உள்ளத்தாலும் உயர்ந்த நிலையை அடைவதற்கு சில சிறப்பான பயிற்சிகளை மேற்கொள்ளவேண்டும். 

அத்தகைய பயிற்சிக்குப் பெயர்தான் விரதம் ஆகும்! 

அதன்மூலம் உடலாலும் உள்ளத்தாலும் மேம்பட்ட நிலையை அடைய முடியும்!

பத்திய காலத்தில் சரியாக பத்தியத்தைக் கடைப்பிடிக்காவிட்டால் நோய் குணமாகாது என்பது மட்டுமல்ல, மேலும் அதிகமாகும்! துயரத்தில் தள்ளிவிடும்!

அதுபோலவே விரத காலத்தில் நாம் கடைப்பிடிக்கவேண்டிய ஒழுங்கு முறைகளைச் சரியாகக் கடைப்பிடிக்கத் தவறினாலும் அந்த விரதத்தால் எந்தப் பயனும் இருக்காது. மாறாக உடலாலும் உள்ளத்தாலும் மேலும் கேடுகேட்டுத்தான் போகவேண்டி வரும்!


ஆனால் விரதம் இருப்பவர்கள் பெரும்பாலோர் விரத காலங்களில் மற்ற காலங்களைவிட வாய்க்குச் சுவையான ஆனால் உடல்நலத்துக்கு எதிரான  உணவுகளை உண்பதைப் பார்க்கலாம்! புகைபிடித்தல் போன்ற கெட்ட பழக்கங்களைக்கூட விடாமல் தொடர்வதைப் பார்க்கலாம். மது அருந்துபவர்கள் அதே நினைவாக விரத நேரம் எப்போ முடியும் என்று அலைவதைப் பார்க்கலாம்! 

விரத காலங்களிலும் மற்ற காலங்களில் இருப்பதைப் போன்றே எண்ணத்தாலும் சொல்லாலும் செயலாலும் நடக்கிறார்கள்!

இதனால் என்ன பயன்?

விரதம் என்றால் தீய பழக்கங்களுக்கு எதிராகவும் நல்ல பழக்கங்களைப் புதிதாகக் கற்றுக்கொள்வதற்காகவும் நடத்தும் மவுனப் போராட்டமாக இருக்கவேண்டும்! 

அதன்காரணமாக உடலாலும் உள்ளத்தாலும் நமக்கு நாமே சுத்திகரிப்பு செய்து கொள்ளவேண்டும்!

அதனால் நாம் உயர்நிலையை அடைவது மட்டுமல்ல மற்றவர்களுக்கும் வழிகாட்டுவதன்மூலமாக சமுதாயத்துக்கே பயன்பட்டு வாழமுடியும்!

அதுதான் விரதத்தின் பலன்! 


எனது மொழி ( 88 )



விஞ்ஞானமாகட்டும் மெஞ்ஞானமாகட்டும் அவை ஒன்றில்லாமல் ஒன்றில்லை!

அவை இரண்டுக்கும் அடிப்படை ஆதாரமாகவும் தேவையாகவும் இருப்பது வாழ்க்கை அனுபவங்களே!

அனுபவங்களைத் தவிர்த்துவிட்டு எதை நினைத்தாலும் அது கண்ணிழந்தவன் இருட்டில் தேடுவதற்கு ஒப்பாகும்!


Monday, December 10, 2012

விவசாயம் ( 39 )


பசுமைத் திருட்டு!

நண்பர்களே! 

நேற்று ஒரு நண்பர் வீட்டுக்குப் போயிருந்தேன்.

அவர் வேறொரு இடத்தில் குத்தகை விவசாயம் செய்து வருகிறார். 

அங்கு பசுமைக் குடில் முறை விவசாயம் செய்யப் பெரிய அளவில் வேலை நடந்து கொண்டிருந்தது!

அதுபற்றி அறிந்துகொள்ள அவரிடம் விசாரித்தேன்.

அதில் ஒரு பயங்கர உண்மை தெரிந்தது!

ஆதாவது அவர்கள் பசுமைக் குடில் விவசாயம் தொடர்ந்து செய்யப்போவது இல்லை! 

ஆனால் அதற்காக அரசு அளிக்கும் லட்சக் கணக்கான மானியத்தை ஆட்டையைப் போடும் திட்டம் ஜோராக நடப்பது தெரிந்தது!

எப்படி? 

ஆதாவது பசுமைக் குடில் அமைத்துக் கொடுக்கும் நிறுவனம் அதற்கான அனைத்து உபகரணங்களையும் கொண்டுவந்து குறிப்பிட்ட விவசாயியின் நிலத்தில் குடில் அமைப்பார்கள்! அதில் குறிப்பிட்ட பயிர்களை நடுவார்கள்.

அதற்குள் அரசு கொடுக்கும் மானியம் முழுவதும் கைக்கு வந்து விடும்! 

உடனே அந்தக் குடில்களை அப்படியே வேறிடத்துக்கு வேறு விவசாயியின் நிலத்துக்குக் கடத்தி இடம் மாற்றி விடுவார்கள்! 

அதன் மூலம் ஒரு இடத்தில் குடில் அமைப்பதற்கான சாதனங்களைக் கொண்டே தொடர்ந்து பல்வேறு விவசாயிகளின் பெயரால் லட்சக்கணக்கில் அரசு மானியத்தை ஏப்பம் விட்டுக்கொண்டே இருப்பார்கள்! 

அவர்களுக்கு ஆகும் செலவு எல்லாம் இடம் மாற்றம் செய்து குடில் அமைப்பதே! 

இந்தமாதிரிதான் எல்லாப் பக்கமும் நடப்பதாக அப்பாவித்தனமாக சொல்கிறார்!

இதன்மூலம் சம்பந்தப்பட்ட விவசாயிக்கு கொஞ்சம் பங்கு கொடுத்துவிட்டு குடில் அமைக்கும் நிறுவனங்கள் மீதிப்பணம் முழுக்கவும் விழுங்கி விடுகின்றன!

பறிபோவது மக்கள் பணம் கோடிக்கணக்கில்! பயன் அடைவது சில வர்த்தக நிறுவனங்கள்! பெயர் மட்டும் பசுமைக்குடில் விவசாயத்தைப் பற்றி விழிப்புணர்வு வளர்வதாக!

இதைத் தடுக்க ஒரே வழி ஏற்க்கனவே இத்திட்டத்துக்காக மானியம் பெற்றவர்கள் அந்த முறை விவசாயம் செய்கிறார்களா என்று சரிபார்த்து சோதிப்பதும் புதிதாக சேருபவர்கள் அத்தகைய தவறுகள் செய்யாமல் கண்காணிக்கப்படுவதும்தான்!

இதை யார் செய்வது?

ருசிகண்ட பூனைகள் செய்யுமா?

செய்தால் பெருச்சாளிகள் அகப்படும்!

Thursday, December 6, 2012

அரசியல் ( 30 )


குற்றவாளிகள் விதித்த தண்டனை!

சில்லரை வர்த்தகத்தில் அந்நிய முதலீட்டுக்கு ஆதரவாக நமதுநாட்டில் என்னென்ன குறைகள் முன்வைக்கப்படுகிறதோ அந்தக் குறைகளுக்குக் காரணமான குற்றவாளிகள் யார்? 

அப்படிப்பட்ட குறைகளுக்குக் காரணமான குற்றவாளிகள் பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தண்டனை விதிக்கும் செயலே அந்நிய முதலீட்டுக்கு அனுமதி!

அவர்களுக்குத்தான் நேர்மையும் வெட்கமும் இல்லை! 

பாதிக்கப்பட்ட மக்களுக்காவது தன்மானம் வேண்டாமா?

Wednesday, December 5, 2012

எனது மொழி ( 87 )



சட்டம்

சட்டங்களை இயற்றுபவர்களும் அதைக் கையாள்பவர்களும் நேர்மையற்றவர்களாக இல்லாத ஒரு நாட்டில் சட்டப் புத்தகத்தில் உள்ள எழுத்துக்கள் மட்டும் என்ன செய்யும்? 

கத்தி தானாக வெட்டுவது இல்லை! 

துப்பாக்கி தானாக சுடுவதில்லை! 

சட்டங்களும் தானாக இயங்குவது இல்லை! 

இயக்குபவர்கள் மனிதர்களே! 

Tuesday, December 4, 2012

உணவே மருந்து ( 40 )


ஒரு சோதனை!

ஒரு வாளி நிறையத் தண்ணீர் எடுத்துக் கொள்வோம்!

அதில் ஒரு பெரிய செம்மண் கட்டியைப் போட்டுக் கலக்கினால் என்ன ஆகும்? 

கரைந்து போகும் என்பது அனைவருக்கும் தெரியும். 

அதே மண் கட்டியை அளவாகத் தண்ணீர் விட்டுப் பிசைந்து அச்சுக்களாகச் செய்து சூளையில் வைத்துச் சுட்டெடுப்போம். 

அதன் பின் சுடப்பட்ட அந்த அச்சுக்களை எடுத்து வாளித் தண்ணீரில் போட்டுக் கலக்கினால் என்ன ஆகும்? 

கரையுமா? 

கரையாது! ஏன்? 

அது உயர்வேப்பத்தில் சுடப்பட்டதால் வேதி மாற்றம் ஏற்ப்பட்டு நீரில் கரையும் தன்மையை இழந்துவிட்டது! 

அப்படித்தானே?... 

அப்படியானால் நாம் உண்ணும் உணவுப்பொருட்களை மட்டும் எண்ணையில் போட்டுப் பொறித்தெடுத்தால் அதேமாதிரி வேதிவினையால் அதன் குணத்தில் மாற்றம் ஏற்படுமா இல்லையா? 

அதைத்தான் எண்ணையில் சுட்ட உணவுப் பண்டங்கள் உடல்நலனுக்கு எதிரானவை என்று சொல்கிறோம்!...அவை நாக்குக்கு மட்டும் சுவை தரும் 

உடல் நலனுக்கு நிச்சயம் தீங்குதான் விளைவிக்கும்! 

ஆன்மிகத்தில் ஒரு புதுப்பாதை ( 19 )


துறவி

நண்பர்களே! 

புத்தரையும் விவேகானந்தரையும் இன்னும் நாம் படித்த செய்திகள்மூலம் மரியாதை வைத்திருக்கிற பல மதங்களைச் சேர்ந்த துறவிகளை விடுங்கள்! 

அவர்கள் நமது மனங்களில் மதிப்புடன் வாழட்டும்! 

காரணம் அவர்களைப் பற்றிய நல்ல செய்திகளையே கேட்டிருக்கிறோம்! 

ஆனால் அவர்களின் பெயரைப் பிரச்சாரம் செய்கின்ற, அல்லது துறவிகள் என்று சொல்லிக்கொண்டு உலகில் வலம் வருகின்ற நபர்களில் எத்தனைபேர் மதிப்புக்குரியவர்கள்? 

குப்பைகளைப் பற்றிப் பேசவேண்டாம்! 

அது நாறும்! 

நல்லவர்களாக மக்கள் நினைத்துக்கொண்டிருக்கும் துறவிகள் எத்தனைபேர் நல்ல பண்புடன் வாழ்கிறார்கள்? 

அவர்கள் மக்களுக்கு என்ன உபதேசிக்கிறார்களோ அதை அவர்கள் பின்பற்றுகிறார்களா? 

உண்மையில் துறவிகள் என்று யாரை நினைத்துக்கொண்டிருக்கிறார்கள்? 

துறவிகள் என்ற ஒரு கற்பனைதான் துறவிக்குண்டான இலக்கணமா? துறவு என்றால் என்ன? 

அதையே சரியாகப் புரிந்து கொள்ளாமல் துறவிகள் என்று நினைத்துக்கொண்டிருக்கும் மாய மான்களுக்குப் பின்னால் ஓடும் புத்தியை என்ன செய்யலாம்?


இவர்களைக் கண்டு வியப்பதற்கு ஒன்றுமில்லை ! 

இந்த உலக வாழ்வில் சந்திக்கும் பிரச்சினைகளைச் சந்திக்கும் முறைகளில் நம்பிக்கை இல்லாமல் புதுப் புது உத்திகளை ஒவ்வொருவரும் ஒவ்வொரு நாளும் சிந்திக்கிறோம். 

அந்தச் சிந்தனைகளில் மிகப் பெரும்பாலும் தன்னைச் சுற்றியே சிந்திக்கப்படுபவைதான் அதிகம். 

அவர்களுக்கு கிருஷ்ணதேவராயன் கதையில் வரும் முடிதிருத்துவோன் சொன்னதுபோல அவன் வீட்டில் தங்கம் இருக்கும்போது எல்லோர் வீட்டிலும் இருப்பதாகவும் அது திருடு போகும்போது நாடே திருட்டுக் கூட்டம் ஆகிவிட்டது போலவும்தான் சமூகத்தைப் பற்றிய எண்ணங்களைக் கொண்டிருக்கிறார்கள்! 

ஆனால் உண்மையாலுமே துன்பங்களுக்கு அடிப்படையாக இருக்கும் சமூகக் காரணிகளைப் பற்றி எக்காலத்திலும் சிலர்தான் சிந்திப்பவர்களாக இருக்கிறார்கள். 

அவர்கள் முற்காலத்தில் காடுவனங்களில் அமைதியான சூழலில் தவமிருந்து நல்ல முடிவுகளைக் கண்டறிந்து உலகமக்களுக்கு உபதேசித்ததாக அறிகிறோம். 

ஆனால் நவீன காலத்தில் அத்தகைய மாறுபட்ட சிந்தனைகளை மக்கள் மனதில் உருவாக்க பல்வேறு உபாயங்கள் இருக்கின்றன. 

ஆனால் பழைய முறைகளின்மேல் மக்களுக்கு இருக்கும் குருட்டு நம்பிக்கையின் காரணமாக துறவி வேஷம்பூண்டு ஏமாற்றிப் பிழைப்பவர்களாகவும் நல்லவர்களைப்போல் நடிப்பவர்களாகவும் தற்போது நிறையப்பேர் வலம் வந்துகொண்டுள்ளார்கள்! 

காரணம் அவர்களுக்கு அது எளிமையான வழி! மற்றபடி சமூக சிந்தனை எதுவும் கிடையாது!

ஆனால் அத்தனையும் தவிர்க்கப்படவேண்டிய குப்பைகளே!


யாரொருருவருடைய எண்ணமும் சொல்லும் செயலும் தூய்மையானதாகவும் அனைவருடைய நலன்களையும் விரும்புவதாகவும் உள்ளதோ,அவருடைய உள்ளத்தை விடச் சிறந்த கோவில் உலகில் வெறு எதுவும் இருக்கமுடியாது! 

ஆனால் அத்தகைய கோவிலாகத் தனது உள்ளத்தையும் நல்லொழுக்கத்தையும் மாற்றிக்கொள்வதற்குப் பதிலாக ஒருவருக்கொருவர் வேஷதாரிகளாக வாழ்வதுதான் வாழ்க்கை என்று வாழ்ந்து கொண்டுள்ளார்கள்! 

அத்தகைய வேஷதாரித்தனம்தான் ஆன்மிகத்தின் பெயரால் பெரிய வேஷதாரிகளை உருவாக்கி அவர்களை சுகபோக வாழ்வில் வாழவும் வைக்கிறது! 

அவர்களின் பெயர் துறவி என்றாலும் கழுதை என்றாலும் என்ன பெரிய வேறுபாடு இருந்துவிடப் போகிறது! 



Monday, December 3, 2012

வீட்டுத் தோட்டம் ( 4 )


துவரை 

இந்த உயர் ரகத்  துவரைச் செடி ஒன்று அல்லது இரண்டு வீட்டின் காலி இடத்தில் நட்டு வளர்த்தால் சுமார் ஆறு மாதத்தில் காய்ப்புக்கு வந்து விடும். 

வடருடக் கணக்கில் க்காயத்துக்கொண்டே இருக்கும்!

காய்களைப் பச்சையாகப் பறித்துச் சாப்பிடச் சுவையாக இருக்கும்.

இயற்கை உணவுடன் கலந்தும் சாப்பிடலாம்! 

முற்றிய காய்களைத் தொலித்து அதன் விதைகளை பல்வேறு விதமான சமையல் தயாரிப்புகளுடன் சேர்த்துக்கொள்ளலாம்!

குருமாவுக்கும் வெறு சிலவற்றுக்கும் பச்சைப் பட்டாணிக்குப் பதில்   இதைப் பயன்படுத்தலாம். 

தேவைக்கும் அதிகமாகக் காய்த்து முற்றிக் காய்ந்துபோன காய்களைப் பறித்துக் காயவைத்து காய்ந்த துவரையை அடித்து எடுத்துப் பருப்பாக மாற்றிப் பயன்படுத்திக் கொள்ளலாம்! 

முயற்சி செய்யுங்களே! 

உணவே மருந்து ( 39 )


உணவுத் திட்டம் 

நாம் உண்ணும் உணவு இயற்கை உணவாக இருந்தால் அதற்கு பெரிய அளவு திட்டம் வகுத்து உண்ணவேண்டும் என்பது இல்லை நண்பர்களே! 

நமக்குக் கிடைத்ததை, நமக்குப் பிடித்ததை, நாம் விரும்பும் அளவு உண்ணலாம்!

சமைத்த உணவு சிதைக்கப்படுவதால் அதன் சரிவிகிதத் தன்மை குலைகிறது! 

ஆனால் இயற்கை உணவில் அதன் சத்துக்கள் அந்தந்த விகிதத்தில் அப்படியே இருப்பதால் நமக்கு எந்த வித்தத்திலும் அது தீங்கு விளைவிக்குமோ என்று அஞ்ச வேண்டியது இல்லை!

மாறாக அதன் மருத்துவப் பயனும் நமக்குக் கிடைப்பதால் பயன் இரட்டிப்பாகிறது! 

அரசியல் ( 29 )


அனைவரும்.....

நமது நாட்டில் மிகப் பெரும்பாலோர் ஊழல்பேர்வழிகளாக இருப்பதால் லஞ்ச ஊழல பற்றிய எதிர்ப்புணர்வு போதுமான அளவு இல்லை! 

ஆம்! 

வாய்ப்புக் கிடைப்பவர்கள் எல்லாம் லஞ்ச ஊழல் செய்கிறார்கள்! 

மற்றவர்களுக்கு அந்த வாய்ப்பு கிடைக்காததால் செய்ய முடிவதில்லை! 

ஆனால் லஞ்ச ஊழல் புத்தி போதுமான அளவு இருக்கிறது!

அதனால் அனைவரையும் ஊழல் பேர்வழிகள் என்று சொல்ல எனக்கு வெட்கமே இல்லை! 

(ஊழல் எண்ணமே இல்லாத கொஞ்சம் பயித்தியங்கள் உண்டு. அதைக் கணக்கில் சேர்க்கவில்லை! )

Sunday, December 2, 2012

எனது மொழி ( 86 )




நான்கு படிகள் 

நாம் நமது சிறப்பான வாழ்வுக்கு எதுவெல்லாம் அடிப்படையாக இருக்கும் என்று நம்புகிறோமோ அவையனைத்தும் நம்மைப்போன்ற உலக மக்கள் அனைவருக்கும் அடிப்படை என்பதை உணர்வது முதல் படி ! 

அனைவருக்குமான அமைதியான உலகை உருவாக்கத் இட்டமிடுவது இரண்டாம்படி!

அதற்குத் தடையாக இருக்கும் அனைத்தையும் தகர்க்கும் திசையில் பொதுக் கருத்தை உருவாக்குவது மூன்றாம் படி! 

அதன்படி மக்கள் சக்தியைத் திரட்டி சாதிப்பது நான்காம் படி! 

அதுதான் இறுதிப் படி!

அனைவரின் தேவைகளும் ஆயிரம் விதமாக இருக்கலாம் . ஆனால் நியாயமான தேவைகள் என்ற கருத்தால் வடிகட்டும்போது அனைத்தும் ஒன்றாகிவிடும்!

இந்த உலகத்தில் உள்ள அனைத்து வளங்களும் அனைத்து மக்களுக்கும் ,இயன்றவரை சாத்தியப்பட்ட உயிரினங்களுக்குமானது என்ற கோட்பாட்டை அடிப்படையாக வைத்து பிறருக்கு துன்பம் விளைவிக்காமல் உதவி செய்து வாழ்தல் என்ற கண்ணோட்டத்தில் உலக வாழ்வு சம்பந்தமான அனைத்துத் திட்டங்களும் வகுக்கப்பட வேண்டும்! 

மேற்படிக் கோட்பாட்டுக்கு நேர் மாறாக பிறரை வஞ்சித்து வாழ எண்ணுவதும் யார் எக்கேடு கேட்டால் என்ன , தாம் வாழ்ந்தால் போதும் என்ற கண்ணோட்டத்தில் பிறர்க்குண்டானதை அபகரிக்க எண்ணுவதும், அத்தகைய எண்ணங்களை ஊக்குவிக்கும் சக்திகளும், அவற்றுக்கு ஆதரவான அரசியல் சக்திகளாக உள்ள தேசிய சர்வதேச ஒடுக்கும் சக்திகளும் மக்களைப் பிளவு படுத்தும் அனைத்து சக்திகளும் இன்னும் பலவும்தான் நல்லவற்றுக்கான தடைகள்!.....

அமைதியான உலக வாழ்வை விரும்புகின்ற, பிறரது மகிழ்ச்சியில் தாம் மகிழ்கின்ற உலகளாவிய மனித நேயம் கொண்ட அனைவரும் உள்ளூர் அளவில் இருந்து உலகளாவிய அளவு வரை ஒன்றாகத் திரள வேண்டும். அது உலகில் வெல்லற்கரிய தீர்மானிக்கும் சக்தியாக வளர்வதும் நாளைய உலகை அமைதிப் பூங்காவாக மாற்றும் திசையில் நடைபோடுவதுமே சாதிக்கவேண்டிய உன்னத லட்சியம் ஆகும்!

அப்படி ஒரு சாதனை நிகழ்த்தப்படாமல் எதிர்காலத்தில் ஒரு உலக வாழ்க்கை இருக்க முடியாது!


எனது மொழி ( 85 )

மூன்று வழிகள்


உலகில் நாம் எந்த இடத்தில் வாழ்ந்தாலும் உயர்ந்த எண்ணம் படைத்தவர்களுக்கு அது திருப்தியான வாழ்வாக இருப்பதில்லை!

அது ஒரு வகையில் முரண்பட்டதாகவும் திருப்தியற்றதாகவுமே இருக்கிறது! 

ஆக எங்கே இருந்தாலும் நாம் விரும்பும் அமைதியான சூழல் இல்லை என்பது நிரூபணமாகிறது! 

அதைச் சரிசெய்ய இரண்டு வழிகள் உள்ளன! ஒன்று சூழலுக்கு ஏற்ப நமது உணர்வுகளைச் சரிப்படுத்திக்கொள்வது. 

இரண்டாவது நமது அனைவரின் நியாயமான உணர்வுகளுக்கு ஏற்ப சூழலைச் சரி செய்வது! 

இதில் முதலாவதை விட இரண்டாவது சிறந்ததாகும்! 

மூன்றாவது ஒன்றும் இருக்கிறது!

ஆதாவது அனைத்து உலகச் சூழலை அனைத்து மக்களின் மற்றும் சாத்தியப்பட்ட உயிரினங்களின் அமைதியான வாழ்வுக்கு ஏற்ப மாற்றி அமைக்கும் திசையில் இயன்றவரை போராடுவது! 

அதுவே என்றென்றும் உக்க வாழ்வை மேலும் மேலும் சிறப்பான திசையில் இட்டுச் செல்லும்!





Saturday, December 1, 2012

அரசியல் ( 28 )


தலைவன் 

அரசியலில் தனிப்பெரும் தலைவன் என்று எவரும் இருக்கக்கூடாது! 

கீழ்மட்டத்தில் இருந்து உயர்மட்டம் வரை ஒவ்வொருவரும் அவர்களைப்போலவே வெறு சிலரின் கண்காணிப்பில் இருக்கவேண்டும். 

ஒரு சிறு தவறு நடப்பதாகச் சந்தேகம் எழுந்தாலும் மற்றவர்களுக்குப் பதில் சொல்லியாகவேண்டும் என்பதை ஒவ்வொரு வரின் கடமையாகவும் ஆக்கவேண்டும்! 

ஒருவர் தனது அரசியல் கடமைகளையும் மக்கள் கடமைகளையும்  எவ்வளவு சிறப்பாகச் செய்கிறாரோ அந்த அளவு மதிக்கப்பட்டு இயக்கத்தில் உயர்நிலைக்குச் செல்ல அனுமதிக்கப்பட வேண்டும்.

குறைபாடுடையவர்கள் முன்னணியில் இருந்தாலும் அவருடைய தகுதிக்கு ஏற்ற மட்டத்துக்கு இறக்கி விடப்படவேண்டும்! 

அப்போதுதான் ஒருவர்   தன்னை நம்பித் தலைவனாக ஏற்றுக்கொண்ட மக்களுக்குத் துரோகம் செய்துவிட்டு ஊரை அடித்து உலையில்போடும் அயோக்கியத்தனம் ஒழித்துக்கட்டப்படும்! 

ஆன்மிகத்தில் ஒரு புதுப்பாதை ( 18 )


அது என்ன ஐதிகம்?....

நண்பர்களே! 

ஐதிகம் என்ற வார்த்தை அடிக்கடி தொலைக்காட்சிகளில் காதுகளில் விழுகிறது! 

குறிப்பாக வடிகட்டிய மூட நம்பிக்கைகளைப் பற்றிச் சொல்லும்போதெல்லாம் அதை ஐதிகம் என்று சொல்கிறார்கள்! 

அப்படியானால் மூடநம்பிக்கைகளுக்குப் பெயர்தான் ஐதிகமா? 

மூடநம்பிக்கைகள் இல்லாத ஒரு ஆன்மிகத்தை இவர்களால் நினைத்தே பார்க்க முடியாதா? 

அரசியல் ( )27


தலைவன்- தொண்டன் 

தலைவன் , தொண்டன் என்ற வார்த்தைகளே அருவருப்பானவை ஆகிவிட்டன! 

ஒரு இயக்கத்துக்குத் தலைமைதாங்கி வழி நடத்த வேண்டியது அதன் சரியான கொள்கைகளும் கூட்டுத் தலைமையுமாக இருக்கவேண்டும்! 

தவறுகளுக்கு வாய்ப்பே இல்லாதபடி மக்களுக்குத் தலைமைதாங்கும் இயக்கம் கட்டமைக்கப்படவேண்டும்! 

தவறு செய்யக்கூடாது என்ற உபதேசம் தேவை இல்லை! 

தவறு செய்பவன் மன்னிக்கப்படமாட்டான் என்பது உத்திரவாதப்படுத்தப்பட வேண்டும்! 

அதைத் தவிர்த்து மக்களின் நம்பிக்கையைப் பெற பொய்யான வாக்குறுதிகள் தேவை இல்லை! 

அவையெல்லாம் வெறும் செல்லாக் காசுகள் என்பது தொடர்ந்து நிரூபிக்கப்பட்டு வந்துள்ளது!

அரசியல் ( 26 )

மக்கள் ஒற்றுமை!


பல்வேறு தேசிய இன மக்கள் வாழும் ஒரு நாட்டில் ஒரு மாநிலம் பாரபட்சமாகவோ ஒரு காலனியைப் போலவோ நடத்தப்பட்டால் முதலில் அந்த மாநில மக்கள் செய்யவேண்டியது தங்களுக்குள் நியாயமான நேர்மையான ஒற்றுமையைக் கடைப்பிடிப்பதுதான்!

அதன் பின்னால் அந்த மாநில மக்களின் சுயமரியாதையை மதிப்பதா இல்லையா என்பதை மற்ற மாநிலங்கள் முடிவு செய்ய விட்டுவிடலாம்! 

பயமில்லை!

காரணம் அந்த மாநிலத்துக்கு எதிரான நிலை எடுக்கப்பட்டால் அந்த மக்கள் கொடுக்கும் பதிலடியை அனைத்து மாநிலங்களும் சேர்ந்தாலும் சமாளிக்க முடியாது! 

அப்படியில்லாமல் ஓநாய் களை நம்பும் ஆடுகளாக திருடர்கள்தான் தலைவர்கள் என்று நம்பும் பண்பு இருக்கும்வரை தங்களுக்குத் தாங்கள்தான் முதல் எதிரிகள் என்பதை உணரவேண்டும்!

அரசியல் ( 25 )

கூத்து அரசியல்! 


எப்பேர்ப்பட்ட கொம்பனாக இருந்தாலும் அவன் அவன் சார்ந்த அரசியல் இயக்கத்தில் ஒரு உறுப்பினன் மட்டுமே! மற்றபடி அந்த இயக்கத்தின் உண்மையான தகுதியைத் தீர்மானிப்பது அதன் கொள்கைகளும் கூட்டு முடிவுமே என்பதுதான் அரசியலாக இருக்க வேண்டும்.

அதுதான் சிறந்த அரசியல் முறை! 

அதைவிட்டு கட்சித் தலைவன்தான் அந்த இயக்கத்தின் அனைத்துமாகவும், அவன் வீசி எறியும் எலும்புத் துண்டுகளுக்குக் காத்திருக்கும் நாய்கள்தான் இயக்க உறுப்பினர்கள் போலவும் நடப்பதற்குப் பெயர் அரசியல் அல்ல! 

அது மக்களை ஏமாற்ற நடக்கின்ற கூத்து! 

அதை ஒழித்துக் கட்டும்வரை உண்மையான அரசியலை எதிர்பார்க்கமுடியாது!